முடி வறட்சி காரணமாக, பொடுகுப் பிரச்னையும் அதிகமாகும். அந்தப் பொடுகானது தோள், கைகளில் எல்லாம் செதில் செதிலாக உதிர்ந்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். இதைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை கற்றாழை ஜெல்லை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து அலசினால்... வறட்டுத்தன்மை நீங்குவதுடன், பொடுகும் மட்டுப்படும்!
|