மூலமா உணர்த்தியிருப்போம். அதன்படி, எக்ஸ்பயரிக்கான வருஷத்தை குறிப்பிடறதோட, ஒரு வருஷத்தை நான்கா பிரிச்சு (க்வார்டர்லி), ஒவ்வொரு க்வார்டர் மாதங்களுக்கும் ஒரு குறியீடு கொடுத்து, அந்தக் குறியீடும் எக்ஸ்பயரி வருஷத்தோட சேர்த்து குறிப்பிடப்படும். உதாரணமா, A - March (First Qtr), B - June (Second Qtr), C - September (Third Qtr) - D - December (Fourth Qtr)...' என்றவர்,
"இந்தக் குறியீடு, சிலிண்டரோட கைப்பிடியை ஒட்டி இருக்கற மூணு இரும்புப்பட்டியில ஏதாவது ஒரு பட்டியோட உள்பகுதியில குறிக்கப்பட்டிருக்கும். இப்போ நிங்க பயன்படுத்தற சிலிண்டர்ல 'B 10'னு குறிக்கப்பட்டிருந்தா, அதோட எக்ஸ்பயரி டேட் 2010-ம் வருஷம் ஜூன் மாசம்னு அர்த் தம். அதுவே, 'D 06'னு இருந்தா, அது 2006-ம் வருஷம் டிசம்பர் மாதமே எக்ஸ்பயரி டேட் ஆகிடுச்சுனு!" என்றவர், அப்படி எக்ஸ்பயரி டேட் முடிந்துபோன சிலிண்டர்களை உபயோகிப்பதில் உள்ள ஆபத்து என்ன, தொடர்ந்து அந்த சிலிண்டர் சம்பந்தமாக எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என்பது பற்றியும் விளக்கினார்.
" 'அய்யய்யோ... டேட் முடிஞ்சுட்டா சிலிண்டர் வெடிச்சுடுமா... லீக் ஆயிடுமா..?' என்றெல்லாம் வீண் பயம் வேண்டாம். இந்த எக்ஸ்பயரி டேட் குறியீட்டை போடறதே, சிலிண்டர்களை செப்பணிடணும்னு எங்களுக்கு அறிவுறுத்திக்கறதுக்காகத்தான். இந்த 'டேட் செக்கிங்'குக்காக எங்ககிட்ட கண்காணிப் புக் குழு இருக்கு. அதையும் மீறி சில சிலிண்டர்கள் புழக்கத்துல இருக்க லாம்ங்கறதால, டேட் முடிஞ்ச சிலிண்டர்கள் தென்பட்டா... உடனடியா உங்களோட ஏஜென்ஸிகிட்ட விஷயத்தைக்கூறி திருப்பிக் கொடுத்துடுங்க. அது எங்களுக்கு வந்துடும்.
எக்ஸ்பயரி டேட் முடிஞ்ச சிலிண்டர்களை பெயின்ட் அடிச்சு, புது வால்வு மாத்தி, தெளிவா செக் பண்ணி, மறுபடியும் புதுசா 'எஸ்ஸ்பயரி டேட்' பொறிச்சு, புழக்கத்துக்கு விடுவோம்" என்று விளக்கினார்.
இதைப் பற்றி ஆபீஸில் பேசிக்கொண்டிருந்தபோது...
'ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, 21 நாட்கள் காத்திருந்துதான் அடுத்த சிலிண்டர் வாங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல... ஐ.ஒ.சி. அப்படி சொல்லவும் இல்லை' என்று தமிழக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு வெளியான பேப்பர் கட்டிங்கை நம் கையில் கொடுத்த சகாக்கள்,
''அம்மாடி, 'சிலிண்டர் பதிவு செய்தா குறைந்தபட்சம் 30 நாட்களாவது ஆகுதே'னு தமிழ்நாடு பூராவுமே அங்கலாய்ச்சுக்கிட்டுதான் இருக்கறாங்க. ஆனா, முதலமைச்சர் இப்படி சொல்றாரு... என்னதான் உண்மை? அதைப்பத்தியும் விசாரிச்சு எழுதினா தோழிங்களுக்கு புண்ணியமா போகுமே?'' என்று சொல்ல... இரண்டு, மூன்று கேஸ் ஏஜென்ஸிகளின் வாசலில் போய் நின்று கவனித்தோம்.
''தமிழ்நாட்டோட முதலமைச்சரே இப்படி ஒரு அறிவிப்பு கொடுக்கறாரு. ஆனா... கேஸ் ஏஜென்ஸிங்ககிட்ட போனா.. 'சிலிண்டர் சப்ளை கம்மியாத்தான் வருது. வேணும்னா முதலமைச்சர்கிட்டயே போய் கேளுங்க, ஆளுக்கு ஒண்ணா தூக்கித்தருவாரு'னு கிண்டலடிக்கறாங்க. எஸ்.எம்.எஸ். மூலமா பதிவு பண்ணாலும், 'ஸாரி, நீங்கள் ஏற்கெனவே சிலிண்டர் வாங்கி 21 ஒரு நாள் ஆகவில்லை. எனவே, உங்கள் பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது'னு பதில் எஸ்.எம்.எஸ். வருது. சிலிண்டர் தட்டுப்பாடுனு சொல்றாங்க. ஆனா, டீக்கடைக்கும், கேட்டரிங்காரங்களுக்கு மட்டும் எந்த நேரத்துல கேட்டாலும் கொண்டு போய் இறக்கறாங்க... வீட்டு உபயோகத்துக்குனு ஒதுக்கின சிலிண்டர்களை. அது எந்த ஊரு நியாயம்?''
- இப்படிப்பட்ட புலம்பல்கள் மாறி மாறி ஒலித்தன. இதைப்பற்றியும் ஐ.ஓ.சி-யின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது, ''ஒரு சிலிண்டர் உங்களுக்கு டெலிவரி ஆன அடுத்த நிமிஷமே உங்களுக்குத் தேவையிருந்தா பதிவு பண்ணிக்கலாம். ஏஜென்ஸிகிட்ட இருக்கற சிலிண்டரைப் பொறுத்தும், சீனியாரிட்டியைப் பொறுத்தும் உங்களுக்கு சப்ளை பண்ணுவாங்க.
இதுல ஏதாச்சும் பிரச்னை இருந்தா... உடனடியா அதைப்பற்றி சம்பந்தப்பட்ட ஏரியாவோட ஐ.ஓ.சி. அலுவலருக்கு கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம். தவிர, கேஸ் சப்ளை குறித்த உங்களோட எந்தக் குறைகளையும் 1552333 மற்றும் 1800-2-333555 இந்த டோல்ஃப்ரீ நம்பர்கள்ல சொல்லலாம் (லேண்ட்லைனில் இருந்து அழைத்து, கட்டணமில்லாமல் பேசலாம்). உடனடியா நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்!
வாசகிகளே... இனி உங்களுக்கு சிலிண்டர் முறையாகக் கிடைக்கவில்லையா... கொஞ்சம்கூட தயங்காமல் புகார்களை பதிவு செய்யுங்கள். தட்டிக்கேட்டால்தான் வழி பிறக்கும்!
|