பெருங்குடி, திருமலைநகரில் உள்ள 'நிசி' விமன்'ஸ் ஹாஸ்டலில் இருந்து இந்த 'ஸ்ப்ரே' வேண்டி ஏற்கெனவே போலீஸூக்கு விண்ணப்பங்கள் வந்தாகிவிட்டன.
இதுபற்றி அங்குள்ள பெண்கள் கூறுகையில், "எங்களப்போல கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத் துல இருந்து தப்பிக்க இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.
துரைப்பாக்கத்துல பார்த்தீங்கனா சாலையோரத்துல எப்பவுமே நிறைய லாரிகள் நிக்கும். இடம் தாராளமா இருந்தாலும் நாங்க போற வழியில இடைஞ்சலா நிக்கறது, உரசுறதுனு லாரி டிரைவர்கள் சிலர் தினமும் 'டார்ச்சர்' பண்றாங்க. இனி அந்த 'ஈவ் டீஸிங்' குரூப்புக்கும் காத்திருக்கு 'ஸ்ப்ரே ட்ரீட்மென்ட்'!" என்றார்கள் பலநாள் கொடுமைக்கு சவுக்கடி கொடுக்கப் போகும் தெம்புடன்!
தொடர்புக்கு துரைப்பாக்கம் சரகம்,
காவல்துறை உதவி ஆணையர்
அலுவலகம், 044--23452776
|