Published:Updated:

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

Published:Updated:

ஆர்.ஷஃபி முன்னா
தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!
தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருச்சிகா வழக்கு...
தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்ட ருச்சிகா வழக்குதான் இன்றைக்கு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயம். 19 வருடங்களுக்குப் பின்பும்கூட பாதி நீதியே கிடைத்திருக்கிறது! என்றபோதும்... இதற்காக, உயிரைப் பணயம் வைத்து, சற்றும் தளர்ந்துவிடாமல் போராடிய ஆராதனா குப்தா (ருச்சிகாவின் தோழி), அவருடைய தாய் மது பிரகாஷ் மற்றும் அவருடைய குடும்பத்தாருடைய தியாகத்தை... பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருமே... ஏன், மனித ஜென்மமெடுத்துவிட்ட அனைவருமே போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

ஆராதனா குப்தாவின் தைரியம்தான்... இந்த வழக்கு காரணமாக நாடு முழுவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கொடுமைகள் நடந்தால்... தைரியமாகப் போராடும் அளவுக்கான தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவியல் சட்டத்தில்கூட திருத்தத்தை மேற்கொள்வதற்கு பாதை போட்டிருக்கிறது.

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

ருச்சிகா வழக்கின் பிரதான வில்லன்... அரியானா மாநில காவல்துறையில் அப்போது ஐ.ஜி-யாக இருந்த எஸ்.பி.எஸ். ராத்தோர் எனப்படும் ஷம்பு பிரசாந்த் சிங் ராத்தோர். இவர், சண்டிகர் டென்னிஸ் கிளப்பின் தலைவரும்கூட. ராத்தோரின் மகளுடன் பயின்ற 14 வயது டீன் ஏஜ் சிறுமிகளான ருச்சிகா கிரிஹோத்ரா மற்றும் ஆராதனா குப்தா ஆகியோர் அந்த கிளப்பில் உறுப்பினர்கள். இவர்களில் ருச்சிகா மீது காமக்கண்ணைப் பதித்துவிட்ட ராத்தோர், ஆகஸ்ட் 12, 1990 அன்று ரிச்சிகாவை தன் அலுவலகம் அழைத்து, பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களைச் செய்திருக்கிறார். இதுதெரிந்து கொந்தளித்த ருச்சிகாவின் அப்பா சுபாஷ் சந்தர் கிரிஹோத்ரா, அன்றைய முதல் அமைச்சர் ஹூக்கும் சிங்கிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதை வாபஸ் வாங்கும்படி ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார் ராத்தோர். மனம் உடைந்த ருச்சிகா, 1993-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

மகளின் உயிர் போகக் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல்... மகனையும் பொய் வழக்கில் சிக்க வைத்து, சிறையில் தள்ளிய ராத்தோருக்கு எதிராக போராடத் தெம்பின்றி ருச்சிகாவின் தந்தை சுருண்டுவிட... இதையெல்லாம் நெருங்கியிருந்து கவனித்து வந்த ஆராதனா குப்தா வெகுண்டெழுந்தார். ராத்தோர் மீதான வழக்கை கையில் எடுத்துக் கொண்டு, தன் குடும்பத்தினரின் ஆதரவோடு 19 ஆண்டுகளாக போராடினார். அதற்குக் கிடைத்த பலன் என்ன தெரியுமா... 'பிக்பாக்கெட்' திருட்டுக்கான தண்டனையைவிட கேவலம்! கடந்த டிசம்பர் 21-ம் தேதியன்று, 'ராத்தோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என்று நீதிதேவன் சொல்ல... அடுத்த சில மணித்துளிகளில் ஜாமீன் பெற்று சிரித்தபடியே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார் ராத்தோர்.

இந்த விஷயம், ஆராதனா, அவரின் குடும்பம் மற்றும் ருச்சிகாவின் தந்தை ஆகியோரைக் கொதித்தெழச் செய்ய... இன்றைக்கு இந்தியாவே கொதித்துக் கொண்டிருக்கிறது ராத்தோருக்கு எதிராக!

"நான் தேசிய வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றியவன். ஆனாலும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராத்தோர் எங்களை செய்த துன்புறுத்தல் கொஞ்சம் நஞ்சமல்ல. எல்லா அநியாயங்களையும் செய்த பிறகாவது விட்டிருக்கலாம். 'ஃபீஸ் கட்டவில்லை' என்று பொய்க் காரணம் சுமத்தி ருச்சிகாவை பள்ளியிலிருந்து விலக்க வைத்தார் ராத்தோர். அதைச் செய்யாமலிருந்தாலாவது இன்று ருச்சிகா உயிரோடு இருந்திருப்பாள். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என எல்லோருமே ராத்தோருக்கு சாதகமாக செயல்பட்ட விதம்தான் என் மகளின் உயிரைப் பறித்தது. பாலியல் தொல்லைகள் செய்து, அவளுடைய உயிர் பறிபோகக் காரணமாக இருந்தவருக்கு வெறும் ஆறு மாதம்தான் தண்டனை! 'குற்றவாளி' என அறிவிக்கப்பட்ட பின்பும் சிரித்தபடி நீதிமன்றத்திலிருந்து ராத்தோர் வெளியேறும் காட்சியை டி.வி-க்களில் பார்க்க பார்க்க என் மனம் குமுறுகிறது" என்று சொல்லும் சுபாஷ் சந்தர் கிரிஹோத்ராவின் குரல் சோகத்தில் விம்முகிறது.

ஆராதனாவின் தாய் மது பிரகாஷ், "ருச்சிகா, தாயில்லாப்பிள்ளை என்பதால், சம்பவத்துக்குப் பிறகு தினமும் அவளை நேரில் சந்தித்து சமாதானம் கூறி வந்தோம். அதற்கு எந்தப் பலனும் இன்றி, தற்கொலை செய்து கொண்டாள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையிலும் ராத்தோருக்குச் சாதகமாகக் குளறுபடிகள் செய்யப்பட்டன. ருச்சிகா இறந்த அன்று தன் நண்பர்களுக்கு 'பார்ட்டி' வைத்துக் கொண்டாடும் அளவுக்கு கொடுமைக்காரராக இருந்தவர் ராத்தோர். ஆனால், அவர் மீது பதிவு செய்யப்பட்ட 'தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு'கூட, இடையில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

நீதிகேட்டு களத்தில் இறங்கிய எங்களையும் ராத்தோர் துன்புறுத்தத் துவங்கினார். அரசுத்துறையில் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தும் ஒரு நிறுவனத்தின் தலைமை இன்ஜினீயராக இருந்தார் என் கணவர் ஆனந்த் பிரகாஷ். அவரை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய வைத்தார். சற்றும் பயப்படாத என் கணவர், கட்டாய ஓய்வு பெற்று வழக்கை நடத்தினார். சிறு குற்ற வழக்கில் சிக்கிய அரசுப் பணியாளர்கள்கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிடும் நிலையில், ஐ.ஜி-யான ராத்தோர்... ஏ.டி.ஜி.பி, மாநிலத்தின் டி.ஜி.பி. என்றெல்லாம் உயர் பதவிகளை அடைந்துகொண்டே போனதை என்னவென்று சொல்ல?!" எனக் கேள்வி எழுப்பும் மது பிரகாஷ், சட்டம் படித்தவர். அதுதான் ருச்சிகா வழக்கினை தொடர்ந்து நடத்துவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது.

வழக்கு ஒருபக்கம் நடந்து கொண்டேயிருக்க, வழக்கின் நிலை மற்றும் ராத்தோர் நடத்திய கொடுமைகள் குறித்து தொடர்ந்து செய்திகளில் வெளியாக, வடஇந்தியா முழுவதும் ஒரு அமைதிப் புரட்சி கிளம்பியது. பல்வேறு இடங்களில் ருச்சிகாவுக்கு ஆதரவாக மெழுகுவர்த்திகளுடன் அமைதி ஊர்வலங்கள் நடந்தன. 'ராத்தோருக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு... அவரைப் போன்றோர் தப்பிப்பதற்கு உடந்தையாக இருக்கும் சட்டத்தைத் திருத்த வேண்டும்' எனக் கோரி சமூக சேவை அமைப்புகள் பலவும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய பிருந்தா கரத் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஹரியானாவின் இன்றைய முதல் அமைச் சரையும் நேரில் சந்தித்து, வழக்கை புதிதாகப் பதிவு செய்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார்.

வரிசையாக இப்படி போர்க்குரல்கள் வெடிக்கவே... ஆடிப்போன மத்திய, மாநில அரசுகள்... 19 வருடங்களுக்குப் பிறகு, கண் விழிக்க ஆரம்பித்துள்ளன அரைகுறையாக! என்றாலும், புதிய வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க... தற்போது ராத்தோருக்கு முன் ஜாமீன் கிடைத்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவிலிக்கும் ஆராதனா குப்தா, வழக்கு விசாரணைக்காக இந்தியா வந்திருக்கிறார். "ராத்தோருக்குக் கிடைத்த தண்டனை ஒன்றுமே இல்லை. இருப்பினும் இந்த வழக்கு நாடாளுமன்றம் வரை பேசப்பட்டதே... தெம்பைக் கொடுக்கிறது. எந்தக் காவல் நிலையம் ராத்தோருக்கு எதிரான வழக்கை பதிவு செய்ய மறுத்ததோ, அதே காவல் நிலையத்தில் இப்போது புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறை கண்டிப்பாக ராத்தோர் தப்ப முடியாது. எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம். பள்ளிக்கு ஃபீஸ் கட்டவில்லை எனப் பொய்க் காரணம் கூறி ருச்சிகாவை விலக்கிய 'சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்' பள்ளியின் மீதும் மாநிலக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் ராத்தோருக்கு உதவியவர்கள் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!

'ருச்சிகாவுக்கு நேர்ந்த கொடுமை இனி நம் நாட்டில் யாருக்கும் ஏற்படக்கூடாது' என்பதற்காக, குற்றவியல் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முன் வந்துள்ளது. அதன்படி, நாட்டின் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் எஃப்.ஐ.ஆர். போடப்பட வேண்டும்" என வழக்கின் நிலையை அடுக்கிய ஆராதனா, சில நிமிடங்கள் மௌனமாகிப் பிறகு தொடர்ந்தார்.

"சம்பவம் நடந்ததிலிருந்து அழுது கொண்டே இருந்தாள் ருச்சிகா. அவள் இன்று உயிருடன் இருந்திருந்தால், என்னைப் போல் தாயாக இருந்திருப்பாள். அவளுடைய மரணம் என் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. மருத்துவமனையில் இருந்த ருச்சிகா, 'எனது நிலை எந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நம் நாட்டில் ஏற்படக் கூடாது' எனக் கூறிக் கதறிய கடைசி வார்த்தைகள்தான் கடைசி வரை இந்த வழக்கில் தீர்க்கமாக நின்று போராடுவதற்கான வலுவை எனக்குக் கொடுத்தன. இது பெண் சமூகத்துக்கே கிடைத்த வெற்றி. அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் 'நமக்கு என்ன?' என முகத்தை திருப்பிக் கொண்டு போகும் மனப்பக்குவம் மாறினால்தான் இத்தகைய வெற்றிகள் சாத்தியம்!" என்று நெற்றிப் பொட் டில் அடித்தாற்போலச் சொன்னார் ஆராதனா!

வாழ்வென்றால் போராடும் போர்க்களம்தானே!

தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!
-படங்கள் ஆகாஷ் தத் சர்மா
தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!
தோழிக்காக குடும்பத்தையே பணயம் வைத்த ஆராதனா!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism