Published:Updated:

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

Published:Updated:

திண்ணை, தூண், முற்றம், தோட்டம், கிணறு...
'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!
'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேவதி
'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

"அந்தக் காலத்துல எங்க வீடு அவ்வளவு பிரமாண்டமா இருக்கும். ஓடிப்பிடிச்சு விளையாட எக்கச்சக்க தூண்கள் இருக்கும்.

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

எங்க பார்த்தாலும் அறைகளா இருக்கும். கண்ணாமூச்சி விளையாடுறப்ப ஒரு அறைக் குள்ள போனா, இன்னொரு அறை வழியா வந்துடலாம். வீட்டுக்கு வெளிய இருக்கற அவ்வளவு அகலமான திண்ணையில உட்கார்ந் துட்டு ஊரே பல்லாங்குழி, கல்லுனு விளையாடு வோம். ம்ம்ம்... அது ஒரு காலம்!"

- இப்படி பழங்கதை சொல்லும் பாட்டிகளை வாய்ப்பிளந்து கேட்கும் நகரத்துப் பிள்ளைகளுக்கு, அதுபோன்ற பாரம்பரியம் சுமக்கும் வீடெல்லாம் டாக்குமென்டரி படங்களிலும், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளிலும்தான் இப்போது காணக்கிடைக்கிறது.

இன்றைய நகரத்து வீடுகள், ஐந்நூறு, அறுநூறு சதுர அடிக்குள் குறுகிக் கிடக்கின்றன. அம்மா, அப்பா, ஒரு பிள்ளை... இதற்கு மேல் மிகுந்த குடும்பங்களுக்கு அவையெல்லாம் இடம் தர மறுக்கும் சூழல். இதில் விருந்தினர்கள் வந்தால்... விரட்டி அடிக்காத குறைதான்!

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

ஆனால், 'நகரத்தின் ராட்சத கைக்குள் சிக்காமல் தப்பிப் பிழைத்து, எங்கேனும் இருக்கிறதா 'அந்தக் காலத்து வீடுகள்' என்ற ஏக்கத்துடன் சென்னையை ஒரு வலம் வந்தோம்! நண்பர் ஒருவர், ''நீங்க எதிர்பார்க்கறதுக்கும் மேல, திண்ணை, தூண், முற்றம், தோட்டம், கிணறுனு ஒரு கிராமத்து வீடே திருவல்லிக்கேணியில இருக்கு!'' என்று ஆச்சர்ய செய்தியோடு முகவரியையும் தந்தார்.

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

பார்த்தசாரதி கோயிலின் அருகே உள்ள மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு நேர் எதிரில், பழமை அப்பிக் கிடக்கிறது 'பட்டாச்சாரியார்' பார்த்தசாரதியின் வீடு... அச்சு அசலான கிராமத்து ஓட்டு வீடு! சென்னையில், பத்து சதுர அடி நிலம் கிடைத்தால்கூட அறையாகக் கட்டி வாடகைக்கு விடும் இன்றைய சூழலில்... இப்படிஒரு வீடா? வியப்போடு வீட்டுக்குள் நுழைந்தோம்.

இருபுறமும் தூண்களால் நிறைந்த பிரமாண்டமான திண்ணை. அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தேக்கு மரத்தினாலான கதவு... இருபுறமும் மாடவிளக்கு வைக்கும் வசதியுடன்! அதைத் தாண்டினால்... சிறிய அறை. அதையடுத்து, பரந்து விரிந்து கிடக்கிறது கல்யாணக்கூடம். எங்கு பார்த்தாலும் தாத்தா, பாட்டி, தெய்வங்களின் படங்கள்!

20 அடி உயர உத்திரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது அந்தக் கால ஃபேன். சுற்றிலும் ஜன்னல்கள். வெளிச்சமும், காற்றும் சத்தமில்லாமல் வந்து சாமரம் வீசும் அளவுக்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்த வீட்டைப் பார்த்த பிரமிப்பில் நாம் நிற்க...

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

"உறவுகள் விட்டுப்போகக் கூடாதுனு, சொந்த மாமாவையே எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்களுக்குத் திருமணமாகி மூணு பையங்க. நாங்களும், சித்தப்பா குடும்பமும் ஒண்ணா இருக்கோம். எங்க நாத்தனார் மூணு பேரும் பக்கத்துலயே தனித்தனியா இருக்காங்க. காலம் காலமா எங்க குடும்பம் பார்த்தசாரதி கோயில்லதான் பட்டாச்சாரியாரா சேவை செஞ்சுட்டிருக்கு" என்று நம் கவனத்தைத் திருப்பிய வீட்டின் உரிமையாளர் லதா பார்த்தசாரதி, ''அவர்தான் இந்த வீட்டுல அதிகம் புழங்கினவர். அவரே விவரமா சொல்லுவார்..." என்று கணவரை நோக்கி கையை நீட்ட... ஆரம்பித்தார் பார்த்தசாரதி. இவர், பி.ஏ. படித்து முடித்த கையோடு, பார்த்தசாரதி கோயில் பட்டாச்சாரியராகிவிட்டவர்.

"நான் படிச்சிட்டிருந்த காலத்துல, வீட்டு விசேஷம், திருமணம், பூணூல், நவராத்திரி, பூஜை, அர்ச்சகர்களுக்கான வேத பாராயண வகுப்புகள் எல்லாமே இங்கதான் நடக்கும். கோயில் அர்ச்சகர்கள் பலர் எங்க வீட்டு மாடிலதான் தங்கியிருப்பாங்க. தினமும் 25 பேருக்குக் குறையாம சாப்பிடணும்ங்கிறதால எங்க பாட்டி சமைச்சுட்டே இருப்பாங்க.

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

வீட்டு வாசப்படிக்கட்டுக்கு அடுத்து திண்ணைதான் இருந்தது. சுவாமி ஊர்வலமா வந்து இளைப்பார்றதுக்கு 'தவனோத்சவ பங்களா'வுக்கு வருவார். அங்க பூஜை முடிஞ்சு எல்லாருக்கும் பிரசாதம் தருவாங்க. கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்கள் எல்லாரும் எங்க வீட்டுத் திண்ணையில வந்து உட்கார்ந்துதான் சாப்பிடுவாங்க. அவங்களுக்கு தண்ணி, நீர்மோர் கொடுத்து உபசாரம் பண்ணுவாங்க எங்க வீட்டுப் பொண்ணுங்க. நாளாக ஆக, யார் நல்லவங்க, கெட்டவங்கன்னு கண்டுபிடிக்க முடியாம, திண்ணையில உட்கார வைக்கிறதும் உபத்திரவமா போயிட்டது. அதனால, வெளியில ஒரு கேட் போட்டோம்" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே...

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

" 'அஸ்திவாரம் பிரமாதமாயிருக்கு. கவலையே படவேண்டாம்'னு சொல்லிட்டதால, அப்பப்ப பெயின்ட் அடிச்சு, பூச்சு வேலைகளை மட்டும் பண்றோம். சமையலறையில மட்டும் தரைப் பகுதி லேசா விரிசல் விட்டதால, டைல்ஸ் பதிச்சிருக்கோம்.

பாத்திரம் தேய்க்கறதுக்காக முற்றத்தோட கேணி இருக்கு. இது எப்பவுமே வத்தாம இருக்கும். இதுலதான் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்கறோம்" என்று இடையில் புகுந்த லதா, பின்பக்கமாகச் செல்ல... பின்தொடர்ந்தோம்.

கேணிக்கு அருகில் ஒரு அறை. இது, கல்யாணக்கூடத்திலிருந்து கொல்லைப்புறம் வரை செல்லும் ரேழியுடன் இணைகிறது. வீட்டுக்கு ஒதுங்கும் பெண்கள் பயன்படுத்துவதற்காக, வாசலிலிருந்து நேரடியாக கொல்லைப்புறம் வருவதற்காக தனி வழி. கொல்லைப் புறத்தில், தரையோடு தரையாக உரல், ஆட்டுக்கல் பதிக்கப்பட்டு, துணி துவைக்க, உலர்த்த பெரிய தாழ்வாரம் என நீளும் வீடு, பார்த்தசாரதி கோயில் பேயாழ்வார் சந்நிதி வரை செல்கிறது.

ரேழியின் ஒரு ஓரத்தில் சிமென்ட்டால் கட்டப்பட்ட மர கிரில் பொருத்திய குறுகிய மாடி; அங்கே பெரிய ஹால்; அதையடுத்து ஒரு அறை; பக்கவாட்டில் மொட்டை மாடி; காற்றாட உட்கார்ந்து பேச சிமென்ட் பெஞ்ச்; சுற்றிலும் ஜன்னல்கள் என்று மனது கொள்ளை போகிறது.

"விசேஷத்தின்போது கூட்டம் அதிகமாயிருக்கும். அப்ப எல்லாரும் கீழ இருக்கமுடியாதுனு, இந்த மொட்டை மாடி ஜன்னல்லேர்ந்துகூட நேரடியா ஃபங்ஷனை பார்த்து மகிழற மாதிரி கல்யாணக்கூடம் அமைக்கப்பட்டிருக்கு!" என்று விளக்கம் கொடுத்த பார்த்தசாரதி,

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!

"ஒரு தடவை, சினிமா ஷூட்டிங் எடுக்க வீடு கொடுத்தோம். ஆனா, வீடே குப்பையாயிடுச்சு. எல்லாரும் செருப்பு காலோட வீட்டு உள்வரைக்கும் நடந்து போனதும், மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. புனிதமா நெனைக்கிற இந்த வீடு, பாழாயிடக் கூடாதுங்கறதுக்காக ஷூட்டிங்குக்கு விடறதில்லைனு தீர்மானிச்சுட்டோம்!" என்றார்.

மீண்டும் பேச்சில் இணைந்த லதா, "தினமும் வீட்டைப் பராமரிக்கறது ரொம்ப கஷ்டம். வேலைக்கு ஆள் வெச்சுக்கலாம்னாலும், எக்கச்சக்கமா கேக்கறாங்க! நாங்களே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒழிச்சு வெப்போம். ஊர்ல இருக்கற உறவுகள்கூட லீவுக்கு இங்க வர்றதுக்கு ரொம்ப ஆசைப்படுவாங்க. எக்காரணம் கொண்டும் இந்த வீட்ட மாத்தி எல்லாம் கட்டக் கூடாதுங்கறதுல உறுதியா இருக்கோம். அதே பழமை வாசத்தோட புழங்குறப்பதான் தாத்தா, பாட்டி, மாமியார், மாமனார் ஆண்டு அனுபவிச்சு, இப்பவும் எங்ககூடவே இருந்து வாழ்த்தற மாதிரியான உணர்வு ஏற்படுது. இதை அனுபவிச்சு உணர்ந்துட்டிருக்கறவ நான்!"

- நெஞ்சத்திலிருந்து நெகிழ்ந்தார் !

பரம்பரை உறவுகளாலும், பாச உணர்வுகளாலும் குழைத்துக் கட்டப்பட்ட வீட்டை விட்டு வெளியேற மனமில்லாமல் விடைபெற்றோம்!

எதிர்வீட்டு பாரதியார்!

ந்த வீட்டுக்கு எதிரில் குடியிருந்த பாரதியாரைப் பற்றி தன் தாத்தா சொன்ன விஷயத்தை பகிர்ந்து கொள்கிறார் பார்த்தசாரதி- "அது, 1921-ம் வருஷம். அந்த வீட்டுலதான் மகாகவி பாரதி தங்கியிருந்தாராம். பெருமாள் பவனி வர்றப்ப நாதஸ்வர ஓசை கேட்டதும், உடனே, வெளியில ஓடி வருவாராம். சாமியைப் பார்க்கறதுக்காக இல்ல... பெருமாள் அமர்ந்து வர்ற அந்த பல்லக்கை தானும் தூக்கறதுக்காக! அவரோட நடையே அவ்வளவு கம்பீரமா இருக்குமாம். பாரதியாரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்த்திருக்காதவங்ககூட நடந்து வர்ற கம்பீரத்தை வெச்சே அடையாளம் கண்டுடுவாங்களாம்!"

'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!
-படங்கள் என்.விவேக்
'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!
'சிட்டி'க்குள் ஜொலிக்கும் 'வில்லேஜ்' வீடு!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism