Published:Updated:

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

Published:Updated:

நாகரிக வாழ்க்கை..
கரு.முத்து
பறித்தது என்ன... கொடுத்தது என்ன?
பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?
பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி குடிசை வீட்டில், மண்ணெண்ணெய் விளக்கில் வாழ்ந்தவர்களில் பலர், இன்று நவநாகரிகமாக நகரத்தில் சகல வசதிகளோடு வாழ்கிறோம். கிராமங்களில்கூட வேக்குவம் கிளீனர் முதல் மைக்ரோவேவ் 'அவன்' வரை எல்லாமும் குடியேறிவிட்டன. கிட்டத்தட்ட சாப்பிடுவதைத் தவிர, எல்லாவற்றையும் எந்திரங்களின் கைகளில் கொடுத்துவிட்டு ஹாயாக உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோம், கணினி மேய்கிறோம். 'இதல்லவோ... சுகமான வாழ்க்கை!' என்ற மனோபாவத்துக்கு பெரும்பாலானோர் ஆட்பட்டு ஆர்ப்பாட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

ஆனால்... 'எங்கே செல்லும் இந்தப் பாதை?' என்று இதைப்பற்றியெல்லாம் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிதர்சனம் அறிந்த அறிஞர்கள் பலரும். 'கிராமத்து வாழ்க்கை' எனப்படும் பயனுள்ள ஒரு வாழ்க்கையை இழந்ததன் மூலம்... இயற்கையை, உடல் ஆரோக்கியத்தை, எதிர்கால சந்ததிக்கான நல்வாழ்க்கையை... என பலவற்றையும் இழந்து விட்டோம் என்பதுதான் அவர்களுடைய கவலை. அத்தகையோரில் இருவர், தங்களுடைய கவலைகளில் இருக்கும் நியாயங்களை இங்கே எடுத்து வைக்கிறார்கள்...

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

நாட்டுப்புறப் பாடல்களை கிராமங்களில் இருந்து நகரத்துக்குக் கொண்டு வந்தவரும், நகரமும் கிராமமும் ஒருங்கே அறிந்தவருமான நாட்டுப்புறக் கலைஞர், பேராசிரியர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கிராம வாழ்க்கையைப் புறந் தள்ளியதால் நாம் இழந்தது என்ன, பெற்றது என்ன என்பது பற்றி ஆழமாகப் பேசினார்.

"முதலில்... குழந்தைகளின் சந்தோஷங்களை மிக முக்கியமாக நகரவாழ்க்கைக்குப் பறிகொடுத்துவிட்டோம். கிராமத்துத் தெருக்களில் ஓடியாடி விளையாடிய அத்தனை விளையாட்டுகளும் அவர்கள் உடல், புத்திக்கான பயிற்சிகள்தான். விளையாட்டு மூலம் கணக்கு, விடுகதை, வார்த்தைக் கோத்தல், கவன ஒருங்கிணைப்பு என அனைத்தையும் கற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, 'குளம்... குளம்' என்று ஒரு குழந்தை சொல்ல, 'என்ன குளம்?' என்று இன்னொரு குழந்தை கேட்க, 'கொக்கு குளம்' என்று முதல் முதல் குழந்தை பதில் சொல்ல, 'என்ன கொக்கு?' என்று இரண்டாவது குழந்தை திரும்பக் கேட்க... இப்படியே தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் அந்த விளையாட்டு! கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் அந்தக் குழந்தைகளுக்கு இதைவிட எளிமையான, சுவாரஸ்யமான, முக்கியமாக செலவில்லாத வேறு பயிற்சி எங்காவது இருக்கிறதா? ஓராயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் இப்படி இருக்கின்றன. அத்தனையுமே... வாழ்க்கைப் பாடத்துக்கான பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டவைதான்!

ஆனால், நகர வாழ்க்கை... அவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து விட்டது. இப்போது அவர்களுக்கு விளையாட தோதான இடம் இல்லை, நேரம் இல்லை. ஃபிளாட் சிஸ்டத்தில் வாழும் குழந்தை... பள்ளி, டியூஷன், கம்ப்யூட்டர், பாட்டு கிளாஸ் என்று அனைத்தையும் முடித்துவிட்டு வந்ததும், டி.வி-யின் முன் விட்டு விடுகிறோம். டீப்பாய் மீது பீட்ஸா, பர்கர் என 'ஃபாஸ்ட் ஃபுட்' உணவுகளை அடுக்கி வைத்துவிட்டு நாம வேறு வேலையில் மூழ்கிவிட, அதையெல்லாம் விழுங்கி விழுங்கி... கடைசியில் வீங்கிக்கிடக்கிறது குழந்தை!

'நொறுங்கத் தின்றால் நூறு வயசு' என்பார் முன்னோர். எதையுமே நன்றாக மென்று சாப்பிடும்போது இன்சுலின் சரியாகச் சுரக்கும். அதனால் சர்க்கரை வியாதியே வராது. நூறு வயது வாழலாம் என்பது பொருள். அதற்கு மாறான இந்த 'ஃபாஸ்ட் ஃபுட்', 40 வயதிலெல்லாம் நிரந்தர நோயாளியாக்கிவிடுகிறது.

'ஆவாரைப் பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டோ', 'வல்லாரை தின்பவனோடு சொல்லாடாதே', 'சுக்குக்கு மிஞ்சின வைத்தியமும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை' என்பதுஎல்லாம் நம்முடைய வைத்திய பழமொழிகள். ஆனால், இப்போது ஆவாரை, வல்லாரை எல்லாம் பட்டுப்போய்விட்டன. ரசாயன உரத்தை அள்ளிக்கொட்டி மண்ணை பாழாக்கி, ஆங்கில மருந்துகளை ஆண்டவனாகக் கும்பிடுகிறோம்.

பாரம்பரிய வாழ்க்கை, கலைகள், பண்பாடு என்று எல்லாவற்றையும் இழந்து, சினிமா, சீரியல், தீம் பார்க் என்று செயற்கையான பொழுதுபோக்குகளை கற்றுக்கொண்டு, கலாசார சீர்கேடுகளை அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்தத்தில், இயல்பான, இயற்கையான வாழ்க்கையை இழந்துவிட்டோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கியிருக்கிறோம்!" என்று நீளமாகச் சொல்லி முடித்தார் விஜயலட்சுமி.

இவர் சொல்பவற்றையெல்லாம் அப்படியே ஆதரிக்கிறார் ஈரோடு மாவட்டம், பெருந்துறை யு.ஆர்.சி மருத்துவமனையின் உடலியல் மருத்துவர் கல்பனா செல்லகுமாரசாமி.

"கிராம வாழ்க்கையிலிருந்து நாம் நகர வாழ்க்கைக்கு மாறியதால் சுகாதாரம், மருத்துவ வசதி, தரமான கல்வி, நுட்பமான தகவல் தொடர்பு, வசதியான போக்குவரத்து, சுதந்திரமான மனநிலை, சுயசார்பு, கைநிறைய வருமானம் என்று பெற்றது அதிகம்தான். ஆனால், இழந்தது அதைவிட பலமடங்கு அதிகம் என்பதை கேள்வியே இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆம்! நவீனங்களின் வரவால் தேவைக்கு அதிகமான ஓய்வை உடலுக்குக் கொடுத்துவிட்டு, நோய்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளோம்.

குறிப்பாக, பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளை மட்டும்கூட தாங்களே செய்து வந்தாலே வியாதிகள் எங்கோ ஓடிப்போகும். உதாரணமாக, உடலிலிருந்து வியர்வை வெளியேறும் அளவுக்கு வேலைகள் செய்தால், உடம்பில் சேரும் சோடியம் தாது வெளியேறும். அது வெளியேறினால், ரத்த அழுத்த நோய் வராது. கூட்டுவது, துணி துவைப்பது போன்ற குனிந்து நிமிரும் வேலைகளைச் செய்தால், தசைகளை வலுப்படுத்தி முதுகுவலி, தண்டுவட வலி ஆகியவை வராமல் தடுக்கும். மாவாட்டுவது, அம்மி அரைப்பது, பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் சேந்துவது போன்ற வேலைகளைச் செய்வதால் கழுத்து, தோள்பட்டை தசைகள் பலப்படும். கழுத்து நரம்பு தேய்மானம் ஆகாது. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவநாள் வரை வீட்டு வேலைகளைச் செய்து வந்தால் இடுப்பு பலம்பெற்று பிரசவம் சுகமாக நடைபெறும். இப்படி கிராம காலத்தில் செய்து வந்த வேலைகள் அத்தனையும் நோய் எதிர்ப்பாகவே இருந்தது.

ஆணோ... பெண்ணோ... அவரவர் வேலைகளை அவர்கள் செய்து வந்தாலே... அதிகாலையில் எழுந்து யோகா, நடைபயிற்சி என்று தனியாக நேரத்தை ஒதுக்கி பார்க் பக்கம் ஓடவேண்டிய தேவையிருக்காது.

'வெஸ்டர்ன் டாய்லெட்'களின் வசதியைப் பார்த்துவிட்ட நாம் அதை நம்முடைய வீட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டோம். ஆனால், காலகாலமாக கடைப்பிடித்து வந்த 'உட்கார்ந்து எழுவது' என்ற முறையின் மூலமாக தொடை தசைகள் இறுகி, மூட்டு தேய்மானம் குறைவதோடு, குடல் இறக்க நோய் அண்டாமல் இருப்பதன் ரகசியத்தைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடிகளைப் பலப்படுத்தி, கொட்டாமல் காக்கும்... மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கிருமிநாசினியாக செயல்பட்டு முகப்பருக்கள் வராமல் காக்கும்.... ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் பல்லை உறுதியாக்கும்... என்று வாழ்க்கைக்குப் பயனுள்ள எத்தனை எத்தனையோ டிப்ஸ்களை மறந்ததால்... நேர்மாறான பலன்களைத்தான் இப்போது அடைந்து கொண்டிருக்கிறோம்.

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?

குழந்தைக்கு அடிப்படைத் தேவைகள் என்பது சத்தான உணவு, விளையாடுமிடம், நல்லத் தூக்கம். நகர சந்தடியில் இது மூன்றுமே அவர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை, விஜயலஷ்மி அம்மா சொன்னதுபோல எதுவுமே கிடைப்பதில்லை. 'ஏன்... ஊட்டச்சத்து பானங்கள், வீடு நிறைய விளையாட்டுப் பொருட்கள், தூங்க தனி பெட்ரூம், ஏ.சி... என்று எல்லாமே எங்க பிள்ளைகளுக்கு பண்ணிக் கொடுத்திருக்கோமே...?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், சிறுதானியங்களில் இருந்த ஊட்டம் இப்போதுள்ள உணவுப் பொருட்களில் இருக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுப் பாருங்கள். மண் தரையில், புல்தரையில் அவர்களை விளை யாடவிட்டு, அந்த மகிழ்ச்சியை உங்களின் விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களில் அவர்களுக்கு கிடைக்கிறதா என்று பாருங்கள்.

காற்றோட்டமான கிராமத்து வீட்டில் அவர்கள் பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டு தூங்குவதையும், குளிர்விக்கப்பட்ட வீட்டின் சாத்திய அறையில் அவன் தனியே உறங்குவதையும் கொஞ்சம் மனத்திரையில் ஓட விடுங்கள். நாம் எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பது வேகவேகமாகவே உங்களுக்குப் புரியும்!"

பறித்தது என்ன... கொடுத்தது என்ன?
-
பறித்தது என்ன... கொடுத்தது என்ன?
பறித்தது என்ன... கொடுத்தது என்ன?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism