Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

நமக்குள்ளே...
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே ....

பொங்கல்... வரிசையாக மூன்று நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும் ஒரே திருவிழா; ஜாலியா ஊரைச் சுத்தலாம்; ரிலீஸான புதுப்படத்தை, அன்றைக்கே பார்க்கலாம்; காலை முதல் மாலை வரை டி.வி. முன்பாக கட்டுண்டுக் கிடக்கலாம்!

- இப்படியாகத்தான் சில பல ஆண்டுகளாகவே மாறிவிட்டது பொங்கல்.

அது, கூடிக்கொண்டாடி களிக்கும் திருநாள் அல்ல... நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் தீர்மானிக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருவிழா... இயற்கையை நாம் ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கும் பெருவிழா!

ஆனால், இந்தக் காரணம்... எத்தனை பேருக்குத் தெரியும்; எத்தனை பேருக்கு நாம் சொல்லிக் கொடுத்திருக்கிறோம்; வளர்ந்துவரும் தலைமுறைக்காவது எடுத்துச் சொல்கிறோமா..?

இப்படி வரிசையாகக் கேள்வி எழுப்பினால்... பெரும்பாலும் 'இல்லை' என்று சொல்லும் நிலையில், நாம் இருக்கிறோம்தானே?!

'இனியும் நீங்கள் அப்படி இருந்து விடக்கூடாது' என்று எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது இயற்கை. ஆம், தோழிகளே..!

'இயற்கைதான் நம்முடைய முழுமுதற் கடவுள்' என்பதை உணர்த்துவதற்காக தொடங்கப்பட்ட விழாவின் உண்மையான காரணத்தை மறந்து, ஆர்ப்பாட்ட விழாவாக மாற்றிக் கொண்டதோடு... பெரும்பாலும் இயற்கைக்கு விரோதமான செயல்களையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீர் வீணாகுதல், தேவையற்ற வாகனப் பெருக்கம், அதீத பிளாஸ்டிக் பயன்பாடு, காங்கிரீட் காடுகளின் மின்னல் வேக வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவைதான்... ஓசோன் படலத்தில் ஓட்டை, புவியின் இயல்பான வெப்பநிலையில் ஏற்றம், துருவங்களில் இருக்கும் பனிமலைகள் உருகுதல், பருவம் தப்பிய மழை என்று பலவித தாக்குதல்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இங்கே ஒரு பழங்கதை நினைவுக்கு வருகிறது...

பொதுக்காரியத்துக்காக பால் தேவைப்படவே, ஊர் மக்களிடம் இருந்து அதை திரட்ட நினைத்தார் ஊர்த் தலைவர். ஒரு தொட்டியை வைத்து, 'ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒரு சொம்பு பால் ஊற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். உயரமான அந்தத் தொட்டியில் கையை உயர்த்தி பாலை ஊற்ற முடியுமே தவிர, உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாது. குறிப்பிட்ட நாளில் ஊரே ஊற்றி முடித்த பிறகு பார்த்தால்... மொத்தத் தொட்டியிலும் தண்ணீரே நிரம்பி இருந்தது.

'எல்லாரும் பாலைத்தான் ஊத்துவாங்க... நாம ஒருத்தர் மட்டும் தண்ணியை ஊத்தினா... தெரியவா போகுது' என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் இருந்ததுதான் வேதனை!

இந்தக் கதையில் வரும் மனிதர்களைப் போலத்தான் சுற்றுச்சூழல் உள்ளிட்ட உயிராதாரமான பல விஷயங்களில் சமாதானம் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பொங்கல் நேரத்திலாவது ஒவ்வொருவருமே உண்மையிலேயே பால் சொம்பை கையில் தூக்குவோமே!

உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே ....

ஆசிரியர்

நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
-
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism