''முதுகிலுள்ள தண்டுவடத்தின் தொடர்சியாகக் கழுத்திலிருக்கும் எலும்பின் 'ஷாக் அப்சார்பராக' செயல்படும் ஜவ்வுத்தட்டு பல்வேறு காரணங்களால் தேய்ந்து போவதும், தனது இருப்பிடத்தை விட்டு பிசகுவதும் உண்டு. அப்படி வெளிவரும் ஜவ்வுத்தட்டு, கழுத்திலிருந்து கைக்கு செல்லும் நரம்புகளை அழுத்தும். இதனால் கழுத்து, கை வலி போன்ற தொந்தரவுகள் துவங் கும்.
பொதுவாக, இந்தப் பிரச்னை வயதானவர்களுக்கானது. தவிர, கம்ப்யூட்டர் முன்பு பழி கிடப்பவர்கள், தொழில்ரீதியாக அதிக பயணம் மேற்கொள்பவர்கள், தலையில் அதிக பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் என பலதரப்பினருக்கும் இது ஏற்படலாம்.
இந்தப் பிரச்னைக்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் சென்று மாத்திரைகள், ஃபிஸியோதெரபி என நிவாரணத்துக்கு வழி காணலாம். அலட்சியம் மற்றும் அறியாமையினால் கை மருந்துகளால் வலி தீரவில்லை என்று தாமதமாக டாக்டரிடம் வருபவர்களுக்கு ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் பாதிப்பு விவரங்களை உறுதி செய்துகொண்டு, மருந்தா... ஆபரேஷனா என்று அவருக்கான சிகிச்சை முடிவு செய்யப்படும்.
உங்கள் சகோதரருக்கு ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு வார முழு ஓய்வு போதும். அடுத்த மூன்று மாதங்களுக்கு தீவிர செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு, பின் இயல்பான வாழ்க்கையைத் தொடரலாம். ஆபரேஷனுக்குப் பின்னரும் இந்தப் பிரச்னை அருகிலுள்ள ஜவ்வுத்தட்டில் ஏற்படாதிருக்க பிஸியோதெரபிஸ்ட் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம்.
பாதிப்பு கண்டவர்கள் மட்டுமல்ல... மேலே குறிப்பிட்ட தொழிலாளி, பயண, கம்ப்யூட்டர் ஆசாமிகளும் தங்கள் கழுத்துத்தசை வலுவுக்கான பயிற்சிகளை மருத்துவ ஆலோசனையின் பேரில் கடைபிடிப்பது புத்திசாலித்தனம். கூடவே, கழுத்து, கை வலி அறிகுறி தென்பட்டாலே உடனடியாக மருத்துவரை நாடவேண்டும்.''
''சிறு வயதில் எங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளை எல்லாம் எங்கள் மகனுக்கு முழுதாக வழங்குவதற்காக நாங்கள் ஒரே குழந்தையோடு நிறுத்திக் கொண்டோம். இருவரும் வேலைக்குச் சென்று அவனுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம். ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் இந்த வயதிலேயே எங்கள் விருப்பங்களுக்கு மாறாக நடந்து கொள்வதில் சந்தோஷம் கொள்கிறான். ஒற்றைக் குழந்தை வளர்ப்பில் இத்தனை சங்கடங்களா..? திகைத்து நிற்கிறோம்...''
டாக்டர் எம்.ராஜாராம், மனநல மருத்துவர், திருச்சி
|