Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"உள்வாடகையால் ஒரு மோதல்... சட்டப்படி என்ன தீர்வு?"

''சுமார் 40 ஆண்டுகளாக ஒரு கட்டடத்தை வாடகைக்குப் பிடித்து கடை நடத்தி வந்தேன். வயதான காரணத்தால் (எனது வயது 82), கடையில் வேலை செய்து வந்த ஒரு நபரிடம் அதை ஒப்படைத்து, மாதம் ஒரு தொகை தரும்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். அதன்படியே தந்து வந்தவர், திடீரென்று மரணம் அடைந்துவிட்டார். இந்நிலையில் அவருடைய மனைவி எனக் கூறிக்கொண்டு ஒரு பெண், அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். 'ஒப்பந்தத்தில் உள்ளவர் அல்லாமல் நீங்கள் எப்படி இங்கே வியாபாரம் செய்யலாம். கடையை என்னிடம் ஒப்படையுங்கள்' என்று கேட்டேன். அவரோ, 'கடை என்னுடையது. என்ன செய்ய முடியுமோ செய்துகொள்' என்கிறார். இது சட்டவிரோதமாகவும் அடாவடித் தனமாகவும் உள்ளது. இப்படிப்பட்டவரிடம் இருந்து என்னுடைய கடையை மீட்க என்ன வழி?''

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

இந்தக் கேள்விக்கு சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.டி.சுதாகர் பதில் தருகிறார்.

''கட்டட உரிமையாளர் அனுமதிஇல்லாமல், உள்வாடகைக்கு விடுவது சட்டப்படி குற்றம். ஆனால், தாங்கள் உள்வாடகைக்கு விட்டுள்ளீர்கள். இது தனிக்கதை. முதலில் உங்கள் பிரச்னை பற்றி பேசுவோம். கடையை இன்னொரு நபரிடம் ஒப்படைக்கும்போது நீங்கள் போட்ட ஒப்பந்தத் தில் கடையை காலி செய்வது தொடர்பாக காலக்கெடு நிர்ணயித்து ஏதேனும் ஷரத்து இருந்தால், அதை வைத்தே சம்பந்தப்பட்ட பகுதியின் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். அப்படி ஒப்பந்தம் ஏதும் இல்லையென்றால், இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) - 1860 - பிரிவு 447-ன்படி அத்துமீறல் குற்றம்புரிந்ததாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கட்டட உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தில், 'உள்வாடகை விடக்கூடாது' என்ற ஷரத்து இருந்தால்... இருவரையும் சேர்த்து வெளியேற்ற தமிழ்நாடு கட்டட சட்டம் மற்றும் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் மூலம் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுக்க கட்டட உரிமையாளருக்கு உரிமை உண்டு.''

''நான் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் (B.Sc. Microbiology) மற்றும் பி.எட். (B.Ed. Natural Science) முடித்துள்ளேன். 'பாட்டனி, ஜுவாலஜி போன்ற படிப்புக்கு இணையாக மைக்ரோபயாலஜி படிப்பும் கருதப்படும். இதன்மூலம் அரசு பள்ளிகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கும்' என்று சிலர் கூறியதை வைத்துதான் இப்படிப்பினையே நான் தேர்ந்தெடுத்தேன். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய இப்படிப்புகள் போதாது. இது சரியான தகுதி இல்லை. டி.ஆர்.பி. எனப்படும் டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு தேர்வினையும் எழுதமுடியாது என்று சிலர் குழப்புகின்றனர். பலரிடமும் இதைப் பற்றி விசாரித்தபோது உரிய பதில் கிடைக்கவில்லை. நீங்களாவது தெளிவுபடுத்துங்கள்...''

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

இந்தக் கேள்விக்கு சென்னை, மயிலாப்பூர் கற்பகவல்லி வித்யாலயா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எம்.கற்பகாம்பாள் தருகிறார்.

'' 'அரசுப் பள்ளியில் பணியாற்ற பி.எஸ்சி. நுண்ணுயிரியல் படிக்கலாம்' என்ற தவறான வழி காட்டுதலால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களால் டி.ஆர்.பி. தேர்வும் எழுத முடியாது. உங்களைப் போலவே இளங்கலை மைக்ரோ கெமிஸ்ட்ரி முடித்தவர்களுக்கும்கூட அரசுப் பள்ளிகளில் பி.டி. அசிஸ்டென்ட் பணியில் சேர வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே இப்படி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை அவர்களெல்லாம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்."

சாம்பாரில் இருந்து சாட்டிலைட் வரை உங்கள் கேள்வி
எதுவாயினும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
044- 42890002 என்ற 'வாய்ஸ் ஸ்நாப்' சேவையிலும்
உங்கள் கேள்வியை உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம்.
நிபுணர்கள் தகுந்த விளக்கம் தருவார்கள்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
-
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism