Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:

கேபிள் கலாட்டா!
ரிமோட் ரீட்டா
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனசு அரிக்குது மருத ஏக்கம்!

'ரீட்டா... தினந்தோறும் மண் மணத்தைக் கிளப்பிக்கிட்டிருக்கற கிராமத்து சீரியல் யூனிட்களையெல்லாம் இந்தப் பொங்கல் சமயத்துல கௌரவப்படுத்தலனா... கரும்புக்கட்ட தூக்கிட்டு வந்து அடிப்பா, அந்த

கேபிள் கலாட்டா!

மாரியாத்தா..!'னு அன்னிக்கு நைட் ஒரு அசரீரி கேட்க, அடுத்தநாளே... 'கிராமத்து பேக்ரவுண்ட் சீரியல்ல நடிக்கற உங்களோட கிராமத்து வாழ்க்கை அனுபவங் கள் ப்ளீஸ்...'னு ஒரு பொது கேள்வியோட வண்டியைக் கிளப்பிட்டேன்ல... நமக்கெதுக்கு மாரியாத்தாகூட வம்பு?!

வில்லேஜ் டச் நிறைஞ்சிருக்கற 'தாயம்' (கலைஞர் டி.வி.) சீரியல்ல... மெயின் ரோல் ஆர்ட்டிஸ்ட் சுதா சந்திரன்.

"அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் ரீட்டா..."னு சிநேகமா வெல்கம் பண்ணாங்க சுதா!

கேபிள் கலாட்டா!

"பூர்விகம் திருச்சி, வயலூர்தான். ஆனா, பொறந்து, வளர்ந்ததெல்லாம் மும்பை. வருஷத்துக்கு ஒருமுறை வயலூர் முருகன் கோயில்ல தரிசனம் பண்றதைத் தவிர, கிராம தரிசனத்துக்கு வாய்ப்பே இல்ல. இப்போ 'தாயம்' உபயத்துல அம்பாசமுத்திரம், பாபநாசம், ராஜபாளையம்னு சுத்தயிருக்கற கிராமங்கள்ல சுத்திட்டு இருக்கேன். டைட்டில் பாட்டுக்காக கரும் புக் கட்டு நிறைஞ்ச மாட்டு வண்டியில, வடிவுக்கரசி அம்மாவோட உட்கார்ந்து வந்ததே ஒரு பரவச அனுபவம்தான். கேரக்டருக்காக கிராமத்து மக்களை உள்வாங்கி உள்வாங்கி... இப்போ நான் அரை கிராமத்தி! அநேகமா, சீரியல் முடியுறப்ப முழு கிராமத்தி! தேங்க்ஸ் டு 'தாயம்'!"னு பரவசமானாங்க சுதா!

பட்டம்மாங்கற கேரக்டர்ல பட்டையை கிளப்பற வடிவுக்கரசியோட கடைசி பையனா நடிக்கற அன்பு (சகாதேவன்), மதுரை மாப்ள!

"சீம்பால் குடிச்சு வளர்ந்த உடம்பு இது! பதினெட்டு வயசுல ஜல்லிக்கட்டுக்குப் போயி, காள மோதி, ஆறு தையல் போட்டுனு சில பல ரெக்கார்டுகளெல்லாம்கூட வச்சிருக்கோம்ல?! அப்புறம் திரைப்படக் கல்லூரியில படிக்கறதுக்காக சென்னைக்கு வந்த எனக்கு, மீடியாவே பிழைப்பா போக, மனசுக்குள்ள மதுரை ஏக்கம் மட்டும் அரிச்சுக்கிட்டேதான் இருக்கு! எங்க ஊரை ரொம்ப மிஸ் பண்றேன் ரீட்டா!"னு ஃபீலிங்காகிப் போனார் அன்பு!

சரிசரி, விடுங்கப்பு... யாதும் ஊரே யாவரும் கேளிர்தானே!

கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

பேரைக்கேட்டதுமே... விசுக்குனு வில்லேஜ் எட்டிப் பார்க்கற 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' (விஜய் டி.வி.) சீரியல்ல ஸ்கூல் யூனிஃபார்மோட பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கற ஆனந்தி, காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்! "நான் முறைப்படி கர்னாடக சங்கீதம், கிளாஸிக்கல் டான்ஸ் கத்திருக்கேன் ரீட்டா அக்கா (ஐ டோன்ட் லைக் இட்). ஆனா, என்னோட 'காரியாப்பட்டி தெய்வானை' கதாபாத்திரத்துக்கு அதெல்லாம் தேவையில்லனு, என்னோட திறமைய மிஸ் பண்ணிட்டாரு டைரக்டர்... ஸோ பேட்! ஆனாலும், ஷூட்டிங்குக்காக நாங்க ஒருமுறை தேனிக்குப் போனப்போ, டீமோட 'உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு கூட்டிட்டுப் போனாரு. அதனால், அவர் ஸோ குட்!"னு சமாளி ஃபிகேஷன் பண்ண ஆனந்தி, கோவைப் பொண்ணாம்!

அதான் இந்த லொள்ளு!

'மாரி' கேரக்டர்ல யூனிஃபார்ம் போட்டிருக்கற லின்ஸி, பி.காம் ஸ்டூடன்ட்!

"சீரியலுக்கான ஆர்டிஸ்ட் ஆடிஷன் நடந்தப்போ, 'ஸ்கூலைக் கட் அடிச்சுட்டு சினிமா பார்க்கப் போகணும்னு பிளான் போட்டுட்டீங்க. அப்ப பிரின்ஸிபால்கிட்ட என்ன பொய் சொல்லி சமாளிப்பீங்க'னு நடிச்சுக்காட்டச் சொன்னாங்க. பின்னிட்டோம்ல பின்னி! நான் சென்னைப் பொண்ணுங்கறதால, ஷூட்டிங்குக்காக கிராமத்துலயே கிடக்குறது புது அனுபவமா இருக்கு. ரீசன்ட்டா ஒரு ஸீன் ஷூட் பண்ண தேனி பக்கத்துல இருக்கற வீரபாண்டி ஆத்துக்குப் போயிருந்தோம். அங்க ஒரே ஆட்டம்தான்! அதுல குளிக்கிறது எவ்வளவு சுகம்னு அங்கதான் தெரிஞ்சுக்கிட்டேன். வில்லேஜ் லைஃப் சூப்பர்ப் ரீட்டா அக்கா (யூ டூ லின்ஸி?!)!"னு சிலிர்த்தாங்க லின்ஸி.

வாவ்!

கேபிள் கலாட்டா!

பாரதிராஜாவோட 'தெக்கத்திப் பொண்ணு' (கலைஞர் டி.வி.) சீரியல்ல, சந்திரசேகருக்கு மனைவியா நடிக்கறாங்க 'அம்சமணி' விஷாலினி.

"மாசத்துல ஏழு நாள் காட்டுநாயக்கன்பட்டி, தப்பு குண்டு, தாடிசேரி, வேப்பம்பட்டினு ஷூட்டிங் குக்காக ஊர் ஊரா சுத்திட்டு இருப்போம் ரீட்டா. இதுல நடிக்கறவங்கள்ல 90 சதவிகிதம் பேர் தேனிக்கார மக்கள் தான். வெள்ளந்தியான மனசுக்காரங்க. காலையில எட்டு மணிக்கு ஷூட்டிங்னா ஏழு மணிக்கெல்லாம் வந்துடு வாங்க. அவங்க நடிப்பும் ரொம்ப இயல்பா இருக்கும்.

'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர் சாரோட தாய்மாமன் வீட்டுலதான் சீரியலுக்கான ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. ஊருக்குள்ள ரொம்ப மரியாதையான ஆளு. நெருங்கிப் பேசவே பலரும் யோசிப்பாங்க. ஆனாலும், எங்க ஷூட்டிங் ஆட்களோட சகஜமா பழகுவாரு. 'எனக்கு அஞ்சும் பொண்ணு. நீயும் எனக்கு ஒரு பொண்ணுதான்'னு எங்கிட்டகூட அன்பா பேசுவாரு. இவரை மாதிரியேதான்... அங்க, எங்ககிட்ட பழகற ஒவ்வொரு மனுஷங்களும் மனசுல நிக்கறாங்க!"னு நெகிழ்ந்த விஷாலினி,

''ராஜசேகர் சாரோட தாய்மாமன் சமீபத்துல இறந்துபோனதுதான் எங்க யூனிட்டையே ரொம்பக் கலங்கடிச்சுடுச்சு...''னு கண் கலங்க ஆரம்பிச்சுட்டாங்க.

'தங்கம்' (சன் டி.வி.) சீரியல்ல 'நாட்டாமை' டைப் கேரக்டர்ல கலக்கிட்டிருக்கற விஜயகுமார், பக்கா விவசாயக் குடும்பத்து ஆள்!

"ரீட்டாக்கண்ணு... பட்டுக்கோட்டைப் பக்கத்துல இருக்கற நாட்டுசாலை கிராமம்தான் நமக்கு பூர்விகம். அந்தக் காலத்துல எங்க வயல்ல விளைஞ்ச நெல்லு... ஆந்திரா, கர்நாடகம், கேரளாவுக்கு எல்லாம் 'எம்.என்.ஆர்'ங்கற பிராண்டுல சப்ளை ஆயிட்டு இருந்தது. அந்தளவுக்கு வெள்ளாம போட்ட குடும்பம் நாங்க. நடிப்பு மேல ஆச வந்து, ஊருல நாடகக் குழுவுல சேர்ந்து, அப்பா-அம்மா சம்மதத்தோட சினிமாவுக்காக சென்னைக்கு வந்துனு காலம் ஓடிடுச்சு. இப்போ என் கிராமத்துக்குப் போயி பார்த்தா, பல அடையாளங்கள் கரைஞ்சு போய்க் கிடக்கு. கிராமத்து ஆளுங்க எல்லாம் சிங்கப்பூர், மலேசியானு வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போயிட, விவசாயமும் குறைஞ்சு போயிருச்சு"னு வருத்தப்பட்டாரு 'அய்யா'!

வருத்தம்தான் பட முடியும்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.75 

''ஞாயிறு இரவு 7.30 மணிக்கு சன் டி.வி-யில் 'ராணி 6, ராஜா யாரு' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில், 'ராணி'கள் பலரும் அரைகுறை ஆடையில் வருகிறார்கள். ஆனால், 'ராஜா'க்கள் அனைவரும் பேன்ட், சர்ட், கோட் போட்டு முழு ஆடையுடன் ஆடுகிறார்கள். நடனமாடும் பெண்களின் ஆடைகள் படுகண்றாவி. போதாக்குறைக்கு, அழகிகளை 'ரொமான்ஸினால் அசர வைக்கும் ராஜா யாரு?' என்று முடிவு செய்யும் ரவுண்ட் வேறு.

திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடன நிகழ்ச்சிகள், தற்போது உச்சகட்ட கேவலமாகிக் கொண்டிருக்கின்றன'' என்று பொங்கி எழுகின்றனர் திருச்சியிலிருந்து சுகந்தா சுசீந்தர், சென்னையிலிருந்து கல்பகம் லஷ்மணன்.

ராஜ் டி.வி-யில் ஒளி பரப்பாகும் 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' தொடர் மிகவும் அருமை. குட்டி கிருஷ்ணனாக நடிக்கும் அந்த சுட்டிப்பயல், தனது நடிப்பால் அசத்துகிறான். நந்ததேசத்து அரசனின் புதல்வனாக வளரும் கிருஷ்ணனுக்கு மட்டும் மஞ்சள் வண்ணத்தில் ஒரே மாதிரியான உடைகளை தொடர்ந்து உபயோகிப்பது கொஞ்சம்கூட பொருத்தமாக இல்லை'' என்று வருந்துகிறார் நவி மும்பையிலிருந்து மஞ்சு வாசுதேவன்.

''அது ஒரு மொபைல் போன் விளம்பரம். ஒரு குட்டிப்பையன் பரபரவென நிறைய காகிதங்களில் வீட்டு போன் நம்பரை எழுதி, எல்லோருக்கும் வேகமாக கொடுப்பது போல் காட்சி வரும். அதில் வரும் சிறுவனின் அம்மா, 'எல்லோருக்குமா கொடுத்தாய்?' என்று கேட்டதும் ஒரு வெட்கச் சிரிப்பு சிரிப்பான் பாருங்கள்! ஆஹா... டி.வி-யினுள் கையை விட்டு அந்த சுட்டிப் பயலை இழுத்து வாரி அணைத்து முத்த மழை பொழியத் தோன்றுகிறது'' என்று பாராட்டு மழை பொழிகிறார் விழுப்புரத்திலிருந்து பங்கஜம் பாலசுப்ரமணியன்.

கேபிள் கலாட்டா!
-படங்கள் து.மாரியப்பன்
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism