Published:Updated:

செய்திகள் யோசிப்பது....!

செய்திகள் யோசிப்பது....!

செய்திகள் யோசிப்பது....!

செய்திகள் யோசிப்பது....!

Published:Updated:

கவிஞர் அ.வெண்ணிலா
செய்திகள் யோசிப்பது....!
செய்திகள் யோசிப்பது....!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்திகள் யோசிப்பது..!

'ஆந்திர மாநில கவர்னராக இருந்த என்.டி திவாரி மீது செக்ஸ் புகார்கள். பதவியிலிருந்து விலகி சொந்த ஊர் சென்றார் திவாரி...'

- செய்தி

"கவர்னர் என்பவர், 'மாநிலத்தின் முதல் குடிமகன்' என்று பெருமையோடு மதிக்கப்படுபவர். அப்படிப்பட்ட பதவியில் இருப்பவர், எத்தகைய பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் மறந்து, பதவியையும், தேசத்தையும் அவமானப்படுத்திவிட்டார். இது, இந்திய அரசியல்அமைப்புக்கு நேர்ந்த கேடு.

மீடியாக்கள் அடிக்கடி வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், இத்தகைய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருப்பது நம் நாட்டின் சாபக்கேடு!

செய்திகள் யோசிப்பது....!

பிரச்னை வெடித்ததுமே... நீதிமன்றத்துக்கு ஓடி, பாதுகாப்பு பெற நினைத்தார் திவாரி. ஆனால், அதற்குள்ளாக நிலைமை கைமீறிப் போகவே... 'உடல் நிலை காரணமாகப் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று தெம்பாக பதவி விலகியிருக்கிறார். அதுமட்டுமா... அரசாங்க அணிவகுப்பு மரியாதை வேறு கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதுதான் கொடுமையிலும் கொடுமை!

குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் நபர் சாதாரணமானவர் அல்ல... நாட்டு மக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய உயர்பதவியில் இருப்பவர். அப்படிப்பட்டவருக்குக்கூட உரிய தண்டனை கிடைக்கிறது எனும்போதுதானே நாளை இதுபோன்ற பிரச்னைகள் எழாமல் இருக்கும். குறைந்தபட்சம், பதவி நீக்கமாவது செய்யப்பட்டிருக்க வேண்டாமா..?

ஆனால், அதையெல்லாம் இந்த நாட்டில் எதிர்பார்ப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது... ரத்தோர் போன்ற போலீஸ்காரர்களை நினைக்கும்போது!

கீழ்நிலை அதிகாரியாக இருக்கும்போது ருச்சிகா என்ற பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தவர், அதன் பிறகு, அரசியல்வாதிகளின் ஆசியோடு பல படிகள் முன்னேறி, அரியானா மாநில டி.ஜி.பி. என்ற உயர்பதவி வரை சென்றிருக்கிறார் ரத்தோர். இதற்குக் காரணமே... இந்த நாட்டில் மலிந்திருக்கும் அதிகார துஷ்பிரயோகம்தான். சம்பவம் நடந்தபோதே... நடவடிக்கை பாய்ந்திருந்தால்... அது மற்றவர்களுக்கும் பாடமாக இருந்திருக்குமே!

திவாரி விஷயத்தில் கூட, ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகள் முன்நின்று போராடியிருக்கா விட்டால்... பிரச்னை வெளியே இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது.

இத்தனைக்கும் திவாரியை அந்தப் பதவியில் நியமிக்க காரணமாக இருந்தது ஒரு பெண் (சோனியா காந்தி)... அவருக்குத் தலைவராக (ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்) இருந்தவரும் ஒரு பெண்... இப்படி யெல்லாம் இருந்தும்... பெண்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் அவர் நடந்து கொண்டது மன்னிக்கப்படக்கூடிய செயலே அல்ல!

செய்திகள் யோசிப்பது....!

அவருடைய மோசமான செயலைவிட, இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து வந்த ஒரு செய்தி. திவாரி பற்றிய செக்ஸ் வீடியோ கிளிப்பிங்ஸ்களை அளவுக்கு அதிகமான மக்கள் இணையதளத்தில் பார்த்து ரசித்திருக்கிறார்களாம்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மனம் இன்னும் பதைபதைக்கிறது. பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் மனப்பாங்கு இன்னமும் உயிர்ப்புடனேயேதான் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சிகள் வேண்டும்?"

செய்திகள் யோசிப்பது....!
-படம் து.மாரியப்பன்
செய்திகள் யோசிப்பது....!
செய்திகள் யோசிப்பது....!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism