Published:Updated:

என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

Published:Updated:

வாசகிகள் பக்கம்
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் டைரி 216-ன் சுருக்கம்
"குழி பறித்துக் கொள்ளாதே!"

"கணவரின் சோம்பேறித்தனத்தால், பிசினஸில் பெரும் நஷ்டம் ஏற்பட... கடன் கழுத்தை நெரித்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், சதா குடியில் மூழ்கி, என்னையும் குழந்தைகளையும் சித்ரவதை செய்ததுடன், விவாகரத்தும் செய்துவிட்டார். கல்லூரியில் என்னை நேசித்தவரை ஒருநாள் யதேச்சையாக சந்தித்தபோது, என் விஷயம் தெரிந்து, 'குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும், எனக்கு நல்ல கணவராகவும் இருப்பேன்' என்ற வாக்குறுதி தரவே, இரண்டாவதாக அவரை எனக்கு மணமுடித்தனர். எந்தக் குறையுமில்லாமல் கவனித்துக் கொண்டாலும், சமீபமாக அவருடைய போக்கில் மாற்றம். கூடவே பணிபுரியும் ஒரு பெண், இவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவதாகவும் சொல்கிறார். நான் என்ன செய்யட்டும்?"

என் டைரி 216-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

னக்கு மறுவாழ்வு தந்து, எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளும் உன் நண்பரின் குணம், அவருடைய நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தன்னைக் காதலிக்கும் பெண்ணிடம்கூட, 'நான் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன்' என்று உண்மையைச் சொன்னதிலிருந்து, உன்மீது அவர் வைத்துள்ள பாசமும், நேசமும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்டவரை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதே.

வளரும் குழந்தைகளின் எதிர்காலம் மனதில் வைத்து, சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உன்னவரைக் காதலிக்கும் பெண்ணிடம் நேரில் சென்று மனம் விட்டுப் பேசி, அவளின் மனதை மாற்ற முயற்சி செய். நிச்சயம் உன் நிலை புரிந்து மனம் மாறுவாள்.

மறுமலர்ச்சி அடைந்த வாழ்வை, மீண்டும் கருகவிடாதே!

- ஏ.பி.எம்.பானுமதி, திருச்சி-8

'சந்தேகக்கோடு, அது சந்தோஷக் கோடு' என்று தெரியாதா உனக்கு..? உன் நிலைமையைத் தெரிந்து கொண்டு உன்னை விரும்பித்தானே, ஏற்றுக் கொண்டுள்ளார். அந்தத் தியாக உள்ளத்துக்கு விலை மதிப்பே இல்லை. பத்து ஆண்டுகளாக உன்னையும், குழந்தைகளையும் அருமையாக பார்த்துக் கொண்டிருக்கிறார். முதலில் அவர்மீது முழு நம்பிக்கை வை.

ஒருவேளை அவர் கூறுவது போல், அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதாக அவரை மிரட்டுகிறாளோ என்னவோ? எத்தனை சீரியல்களில் பார்த்திருப்பாய். தன்மேல் அன்பு இல்லாவிட்டாலும், தான் விரும்புவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியில், பின்விளைவுகளை யோசிக்காமல் எந்தக் கீழ்த்தரமான செயலிலும் இறங்கத் தயாராக இருப்பார்கள். இந்தப் பெண்ணும் அப்படிப்பட்ட குணம் கொண்டவளாக இருக்கலாம். உனக்கு இப்போது தேவை பொறுமை மட்டும்தான். தீர விசாரித்து, அவர் சொல்வதில் உண்மையிருந்தால், அந்தப் பெண்ணிடமே பேசி, நிலைமையை சரி செய். தியாகம் செய்வதாக நினைத்து, அவரை விட்டு விலகிப் போய், உன் வாழ்க்கைக்கு நீயே குழி பறித்துக் கொள்ளாதே.

எதிர்மறையாக யோசிக்காமல், நடக்கக்கூடிய சாத்தியங்களை யோசித்து, பொறுமையாக முடிவு செய்.

-டி.எம்.பானுமதி, சென்னை-88

 

என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
 
என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 209 -சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism