Published:Updated:

என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!

என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!

என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!

என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
என் டைரி-217
என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!
என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வைராக்கிய வாழ்க்கை'... பந்தாடும் 'காலம்'!

கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தேன். ஒரே மகள் என்பதால் ராஜகுமாரியைப் போலக் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து சீராட்டி, பாராட்டி வளர்த்தனர் பெற்றோர். கல்லூரியில் படிக்கும்போதே காதல் வலையில் விழுந்தேன். அதை பெற்றோரிடம் தைரியமாகச் சொன்னபோது... 'வெட்டுவேன், குத்துவேன்' என்று மனதைக் காயப்படுத்தாமல், காதல் திருமணத்தினால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், உறவுகளின் உணர்வுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பொறுமையாக விளக்கினார்கள்.

என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!

'அத்தனையும் சரிதான்' என்று என் அறிவுக்கு எட்டினாலும், மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. சொந்த வீட்டுக்குள்ளேயே அகதியைப் போல் தனிமைப்பட்டேன். காதலனைத்தான் மணம்முடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால், பெற்றோரின் சம்பாத்தியம், சொத்து இதிலிருந்தெல்லாம் ஒரு பைசாகூட தேவையில்லை என்று தீர்மானித்தேன். அன்றிலிருந்து படிப்பு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, என்னைத் தங்கத்தட்டில் தாங்கிப் பிடிக்க ஆரம்பித்தார் காதலன்.

பட்டப்படிப்பை முடித்து, அவருடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. ஒரு விருந்தினரைப் போல்தான் என் பெற்றோர் கலந்து கொண்டனர். அவருடைய ஊரில் சொந்தத் தொழில் தொடங்கினார். வருமானம் பெருகியது. பெற்ற தாயாக... மாமியார்; உடன்பிறப்புக்களாக மச்சினர், நாத்தனார் தாங்கிப் பிடிக்க, வாழ்க்கை கற்கண்டாக இனித்தது. பிரசவ நேரத்தில்கூட அம்மாவின் நினைவு வராத அளவுக்குப் பார்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், நெருங்கிய தோழியின் திருமணத்துக்காக கணவருடன் என்னு டைய சொந்த ஊர் சென்றபோது, பழசை எல்லாம் மறந்துவிட்டு நெருக்கமாக பேசிய என் பெற்றோர், குழந்தையும் கொஞ்சி மகிழ்ந்தனர். இதையடுத்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அம்மா வீட்டுக்குச் சென்றுவர ஆரம்பித் தேன். ஆனால், எனக்கோ, என் குழந் தைக்கோ ஒரு ரூபாயைக்கூட கைவிட்டு அவர்கள் செலவு செய்யவில்லை என்பது உறுத்தலாகவே இருந்தது.

பிறகு, கணவரின் தொழிலில் திடீரென சிறு சறுக்கல். எங்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட, வாழ்க்கையே வெறுமையாகப் போய்விட்டது. இதைப் பற்றி அறிந்த என்னுடைய தூரத்து உறவு கள் சில, 'உன் பெற்றோர் வசதியாக இருக் கிறார்கள். நீயோ ஒரே மகள். எல்லாம் உனக்கு சேர வேண்டியதுதானே. தைரிய மாக போய் கேள்' என்கின்றனர்.

'சொத்தில் ஒரு பைசாகூட வேண்டாம் என்று வீம்புடன் காதலனைக் கைபிடித்தோம். அந்த வைராக்கியத்தை கடைசி வரை இழந்துவிடக்கூடாது' என்கிறது ஒரு மனம். அதேசமயம், 'கணவரின் தொழில் பாதித்ததால்தானே இந்த நிலைமை. ஆபத்துக்கு பாவமில்லை. அத்தோடு, உனக்கு உரிமை இருக்கும்போது, ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?' என்கிறது மற்றொரு மனது.

தோழிகளே... நான் என்ன செய்யட்டும்?

என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!
- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்' வாசகி
என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!
என் டைரி 217 -'வைராக்கிய வாழ்க்கை'.. பந்தாடும் 'காலம்'!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism