Published:Updated:

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

Published:Updated:

'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜனவரி 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மேஷம் கொடுத்து சிவந்த கைகளுடைய நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

சுக்கிரனும் சனியும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கணவரின் ஆரோக்கியம் சீராகும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். 10-ம் தேதி மாலை 3.30 மணி முதல் 12-ம் தேதி வரை

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால் முன்கோபம் குறையும். உடல் உபாதை நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். புதன் ராகுவுடன் நிற்பதால் தந்தையின் உடல் நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். பிற்பகுதியில் வெற்றி பெறும் நேரமிது.

ரிஷபம் கலாரசனை கொண்ட நீங்கள், எடுத்த காரியத்தை
சிரத்தையுடன் செய்து முடிப்பவர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் நிற்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். முக்கிய கிரகங்கள் 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலையும், செலவையும் கட்டுப்படுத்த முடியாது. 13-ம் தேதி முதல் 15-ம் தேதி காலை 10.30 மணி வரை அவசர முடிவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். சனி 5-ல் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 14-ம் தேதி முதல் 9-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். 10-ல் குரு நிற்பதால் உத்யோகத்தில் உயர் அதிகாரிகளுடன் விவாதங்கள் வரலாம். வேலைச்சுமையும் இருக்கும். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் வேளையிது.

மிதுனம் எதையும் நுணுக்கமாக யோசிக்கும் நீங்கள், மற்றவர்கள்
தயவில் வாழ மாட்டீர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

குரு ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், எடுத்து வைக்க முடியாத அளவுக்கு செலவுகளும் வரும். சொந்த வீடு வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். மகனுக்கு நல்ல குடும்பத்தில் இருந்து பெண் அமைவார். புண்ணிய தலங்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துவீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தலைதூக்கும். 15-ம் தேதி காலை 10.30 மணி முதல் 17-ம் தேதி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம். ராசிநாதன் புதன் ராகுவுடன் பலவீனமாக இருப்பதால் மனக்குழப்பம், அலைச்சல் வந்து நீங்கும். 4-ல் சனி தொடர்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் தருணமிது.

கடகம் மனதில் பட்டதை 'பளிச்' என்று பேசும் நீங்கள்,
அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டீர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

3-ம் வீட்டில் சனி சாதகமாக இருப்பதால் பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாளாக இருந்து வந்த உடல் உபாதை குறையும். என்றாலும், ராசிக்குள் செவ்வாய் தொடர்வதால் முன்கோபம் வரும். கணவர் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். 13-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் நிற்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ராகு வலுவாக இருப்பதால் ஷேர் லாபம் தரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 14-ம் தேதி முதல் சுக்கிரனும், சூரியனும் 7-ல் நுழைவதால் கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். 18, 19 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். சவால்களை சமாளிக்கும் நேரமிது.

சிம்மம் ஆரவாரமில்லாத நீங்கள், அடக்க முற்பட்டால் பொங்கி எழுவீர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

13-ம் தேதி வரை சுக்கிரன் 5-ல் சாதகமாக நிற்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய சொந்தங்களை சந்திப்பீர்கள். பாதச் சனி நடைபெறுவதால் கணவருக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். குரு பகவான் சாதகமாக இருப்பதால் தெய்வ அருள் கிட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 13-ம் தேதி வரை சூரியன் 5-ல் தொடர்வதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில், சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும் வேளையிது.

கன்னி கற்பனை உலகில் அவ்வப்போது சஞ்சரிக்கும் நீங்கள், சில சமயம் எதார்த்தமாகவும் யோசிப்பீர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

செவ்வாய் 11-ம் வீட்டில் நிற்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களின் யோகாதி பதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புது வாகனம், புது கேமரா வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. என்றாலும், குரு 6-ல் மறைந்து நிற்பதால் கணவர் கோபப்படலாம். ஜென்ம சனி நடைபெறுவதால் வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். 4-ல் ராகு நிற்பதால் உறவினர் பகை வந்து மறையும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கடின உழைப் பால் நினைத்ததை முடிக்கும் நேரமிது.

துலாம் தோல்வியைக் கண்டு துவளாத நீங்கள்... நல்லது,
கெட்டதை சமமாக பாவிப்பீர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

குருவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பல முறை முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கணவர் மனம் விட்டுப் பேசுவார். அரசு வேலைகள் வேகமாக முடியும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப்பெண் அமைவார். பழைய வீட்டை விற்று புது வீடு வாங்குவீர்கள். 9-ல் கேது தொடர்வதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். விரய சனி நடப்பதால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். லாபம் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் காலமிது.

விருச்சிகம் மதிப்பவர்களை நேசிக்கும் நீங்கள், மதியாதார் முற்றம்
மிதிக்க மாட்டீர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். உடல் உபாதை குறையும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி நிற்பதால் எளிதாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகி முடியும். 14-ம் தேதி முதல் சூரியன் மூன்றாம் வீட்டில் அமர்வதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் திருப்தி தரும். குரு 4-ல் தொடர்வதால் எதிர்பாராத பயணங்களும், பணப்பற்றாக்குறையும் ஏற்படும். 2-ல் ராகு தொடர்வதால் பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் வேலைச் சுமை ஓரளவு குறையும். புது பொறுப்புகள் தேடி வரும். நயமாகப் பேசி வெற்றி பெறும் வேளையிது.

தனுசு எல்லோர் மனதிலும் எளிதாக இடம் பிடிக்கும் நீங்கள்,
தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவுபவர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

10-ம் வீட்டில் சனி வலுவாக இருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்மறை எண்ணங்கள் குறையும். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். சிலர் வேலை மாறுவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 3-ல் மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் பழைய பிரச்னைகள் ஓயும். 14-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால் உடல் உபாதை குறையும். என்றாலும், செவ்வாய் 8-ல் தொடர்வதால் சேமிப்புகள் கரையும். சுக்கிரன் சாதகமாக இருப்ப தால் பழுதான வாகனத்தை சரி செய்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் புதிய அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். கூடுதல் நேரம் உழைத்து முன்னேறும் காலமிது.

மகரம் 'மறப்போம், மன்னிப்போம்' என வாழ்பவர்கள் நீங்கள்!

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

கேது சாதகமாக இருப்பதால் சில பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் முடியும். அடகிலிருக்கும் நகையை மீட்பீர்கள். கணவர் சில நேரம் கோபப்பட்டாலும், உள்மனதில் உங்களை அதிகம் நேசிப்பார். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 2-ல் குரு நிற்பதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். 14-ம் தேதி முதல் ராசிக்குள் சூரியன் நுழைவதால் வீண் வாக்குவாதம், உடல் உபாதை வரும். என்றாலும், சுக்கிரன் வலுவாக இருப்பதால் ஓரளவு டென்ஷன் குறையும். வியாபாரத்தில், பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் நீங்கள் திறமைசாலி என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத வெற்றி தரும் வேளையிது.

கும்பம் அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்போல்
உங்கள் ஆழ்மனதில் அன்பு சுரந்து கொண்டிருக்கும்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராகுவும், புதனும் லாப வீட்டில் நிற்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். ராசிக்குள் குரு தொடர்வதால் மறைமுக அவமானம் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். 14-ம் தேதி முதல் சூரியன், சுக்கிரனுடன் சேர்ந்து 12-ல் மறைவதால் உடல் நலக் கோளாறு ஏற்படக்கூடும். 6-ம் தேதி முதல் 8-ம் தேதி காலை 9.30 மணி வரை வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்து சனி நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லாதீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். தடுமாறி முன்னேறும் தருணமிது.

மீனம் 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பதை அறிந்த
நீங்கள், யாரையும் உதாசீனப்படுத்த மாட்டீர்கள்.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

புதன் 10-ல் நிற்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். வருமானம் உயரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உல்லாசப் பயணங்கள் செல்வீர்கள். பழுதான டி.வி., மிக்ஸியை மாற்றுவீர்கள். பூர்விக சொத்துக்களை சீர் செய்வீர்கள். 7-ல் சனி தொடர்வதால் நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். குரு 12-ல் அமர்ந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். 5-ல் செவ்வாய் நிற்பதால் வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். 8-ம் தேதி காலை 9.30 மணி முதல் 10-ம் தேதி மதியம் மாலை 3.30 மணி வரை எதிலும் நிதானித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். வசதி, வாய்ப்புகள் கூடும் வேளையிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
 
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism