Published:Updated:

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

Published:Updated:

கிராமிய சிறப்பிதழ்!
சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!
சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயனுள்ள வாழ்க்கைக்கு பாதை காட்டும் பாரம்பரியம்...

து... டி.வி. சேனல்களில் நாம் அடிக்கடி ரசித்துச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சி!

ஒரு மலேசியப் பெண் தொடர்ந்து விக்கிக்கொண்டே இருப்பாள். உடனே அந்நாட்டுக்காரர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்வார்கள். நம் ஊர்க்காரர் ஒருவர் இடையில் புகுந்து, கத்தியைக் காட்டி பயமுறுத்துவார். அடுத்த நிமிடத்திலேயே அந்தப் பெண்ணின் விக்கல் காணாமல் போக, 'எப்டி?!' என்பார் அந்த மலேசியப் பெண் ஆச்சர்யமாக!

''எங்க ஊர்ல இப்படித்தான் எல்லாத்துக்குமே ஒரு கை வைத்தியம் இருக்கும்!'' என்பார் நம்மூர்க்காரர் பெருமையாக!

இப்படித்தான்... நம் கிராம வாழ்க்கை நமக்கு 'செல்ஃப் மெடிக்கேஷன்' கற்றுத்தரும் கை வைத்திய முறைகள்; 'சோஷியல் கெட் டுகெதர்' நடத்திக் காட்டும் திருவிழாக்கள்; 'ரிலேஷன்ஷிப் மெயின்டனன்ஸ்' சொல்லிக் கொடுக்கும் உறவு முறைகளின் முக்கியத்துவங்கள்; 'லிட்ரேச்சர்'

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

படைக்கும் தாலாட்டுகள்... இவற்றைத் தாண்டிய அறிவையும், செறிவையும் எந்தப் பல்கலைக்கழகங்களிலும் போய் நீங்கள் கற்றுக்கொண்டுவிட முடியாது. காரணம்... முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கும் இப்படிப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றுமே, பார்த்துப்பார்த்து... பழகிப்பழகி... பட்டுப்பட்டு... கண்டுணர்ந்து சொல்லப்பட்ட அனுபவப் பாடங்கள். ஏட்டுச்சுரைக்காய்களால் அதன் ஒரு ஓரத்தைக்கூட தொடமுடியாது!

அப்படி கிராம மக்களின் எளிய வாழ்க்கையில் உள்ள வலிய விஷயங்களை தாங்கி நிற்கிறது... இந்தப் பெட்டகம்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

ஏலேலோ... ஏலேலோ...

'கடவுளைப் பார்க்கையிலும் பாட்டு... நீட்டிக் கட்டையில போகையிலும் பாட்டு... பாட்டு...' என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நம்மோடு இணைந்திருக்கும் முக்கியமான ஒரு விஷயம் பாட்டு!

நாற்று நடவு, மரம் வெட்டுதல், மீன் பிடித்தல், களை எடுத்தல், சோறு ஊட்டுதல்... என்று எந்த வேலையாக இருந்தாலும் அங்கே எட்டிப் பார்த்துவிடும் பாட்டு. அதுதான் கிராமத்து ஸ்பெஷல்! ஒரு பாட்டு வந்ததுமே... அத்தனை களைப்பும் காணாமல் போய், உற்சாகம் ரீசார்ஜ் ஆகிவிடும்.

வாழ்க்கையின் வலி, துன்பம், இன்பம் என்று எல்லாவற்றையும் கலந்துகட்டி கொடுக்கும் அந்தப் பாடல்களில் சில... இந்த இணைப்பில் இடம்பிடிக்கின்றன. பாடியிருப்பவர் குமார். இவர், பிரபல நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணுவின் கணவர்.

இந்தப் பாடல்கள் உங்கள் மனதை நிறைக்கட்டும் சர்க்கரைப் பொங்கலாக!

ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே
ஆராரோ ஆரிராரோ...
வாழ கனிக்கரும்பே
வலது கை சர்க்கரை
ஏலம், கிராம்பு நீயே
உன்ன என்ன சொல்லி
ராராட்ட...

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

சும்மாவா சொன்னாங்க!

வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா... பசங்க எதைச் செஞ்சாலும் தொணதொணத்துக்கிட்டே இருப்பாங்க. 'டேய்... நாதாங்கியை (தாழ்ப்பாள்) ஆட்டாதே... சண்டை வரும்'னு மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மண்டையைக் காய வெப்பாங்க. ஆனா, சொல்ல வந்த விஷயம் வேறயா இருக்கும்... அதோட உட்பொருள் அதி முக்கியமானதாவும் இருக்கும்! இதை நேரடியாவே சொல்லியிருக்கலாம்தான். ஆனா, இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்!

1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

6. 'வீட்டுத் தோட்டத்தில் ஆமணக்கு வளர்த்தால், அதன் காய்கள் வெடித்து விதைகள் சிதறுவதுபோல் குடும்பம் சிதறிடும்.'

ஆமணக்கு காய் முற்றியவுடன், அதன் விதைகள் கீழே சிதறிக்கிடக்கும். தெரியாமல் சிறுபிள்ளைகள் சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிக் கொண்டு விபரீதமாகிவிடும். அதனால்தான் அதை வீட்டுக்கு அருகில் வளர்க்கக் கூடாது.

7. 'பஞ்சு பறந்தா... பணம் பறக்கும்.'

வீட்டில் தலையணைக்காக இலவம் பஞ்சு வாங்கி வந்து அடைப்போம். அப்போது, அதைக் கண்டபடி பறக்கவிட்டு விளையாடுவார்கள் குழந்தைகள். அப்படி பறந்தால்... விலை உயர்ந்த பொருளான இலவம் பஞ்சு வீணாகி பணத்துக்குதான் வேட்டு. அதேபோல, சுவாசத்தின் மூலம் உடலுக்குள் போய் வைத்திய செலவை வேறு இழுத்து வைக்கும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

8. 'வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.

9. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

10. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.

11. 'முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்.

12. 'தோட்டத்தில் முதல் வெள்ளாமையாக தென்னை வைக்கக் கூடாது.'அது காய்ப்புக்கு வந்து பலன் கொடுக்க ஆண்டுக் கணக்கில் ஆகும். அதற்குள் 'அடச்சே' என்று வெறுத்துவிடும். எனவே, சீக்கிரமாக பலன் கொடுக்கும் பயிர்களை ஆரம்பத்தில் பயிர் செய்வது நல்லது.

புரியும் புதிர்கள்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

கிராமப்புறங்களில் எல்லாவற்றுக்குமே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிடுவார்கள். பல சமயங்களில் அது நம்ப முடியாததாகக்கூட தோன்றும். ஆனால், உண்மையை அலசி ஆராய்ந்து பார்த்தால்... அத்தனையும் சொக்கத் தங்கம் என்பீர்கள்!

13. 'தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

14. 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

15. 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

16. 'அதிகாலையில் முங்கிக் குளி.'

சூரியன் உதிக்காத, பனி விலகாத சமயத்தில்தான் நீர் நிலைகளின் மேற்பரப்பில் ஓசோன் படலம் இருக்கும். அதனால் முங்கிக் குளிக்க வேண்டும். அப்போது, அந்த ஓசோன் படலத்தை சுவாசிக்கும்போது, அது நம்முடைய மூச்சுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

17. 'ஏகாதசி விரதம் இருப்ப வர்கள், அதை முடிக்கும்போது அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்.'அகத்திக்கீரைச் சாப்பிட்டால், விரதத்தின் காரணமாக வயிற்றில் ஏற்படும் புண்கள் ஆறுவதோடு, வயிற்றிலுள்ள புழுக்களும் இறந்துபோகும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

18. 'விசேஷங்களின்போது வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.'

மரம், செடிகளெல்லாம் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவைக் கொடுக்கும். விசேஷம் நடக்கிற இடங்களில் பலர் கூடும்போது வெளிப்படும் வியர்வை, மூச்சுக் காற்று போன்றவற்றை மாவிலை தோரணமும் வாழை மரங்களும் கிரகித்துவிடும்!

19. 'வெள்ளி, செவ்வாய் சாம்பிராணி போட வேண்டும்.'

வாரம் இரு தடவை இப்படிச் செய்வதன் மூலம்... சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவி... விஷ ஜந்துக்கள், கொசுக்கள் உள்ளிட்டவற்றை விரட்டி அடிக்கும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

20. 'வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ மறக்கக் கூடாது.'

வெளியில் சென்று திரும்புபவர்களின் கால்களில் தப்பித் தவறி ஏதாவது விஷக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைப்படியில் காலை வைத்தால்... அதிலிருக்கும் மஞ்சள் கிருமிநாசினியாகச் செயல்படும்.

21. 'அருகில் எங்காவது இடி இறங்கினால்... 'அர்ஜுனா, அர்ஜுனா' என்று சத்தமாகச் சொல்ல வேண்டும்.'

இடிச் சத்தத்தின் காரணமாக சிலருக்குக் காது அடைத்துக் கொள்ளும். அதைச் சரிசெய்ய, தாடையை சுருக்கி விரிக்க வேண்டும். 'அர்ஜுனா' என்று சொல்லும்போது அது எளிதாக நடந்தேறிவிடும். சொல்லித்தான் பாருங்களேன் - அர்ஜுனா!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

22. 'ஊசி கொண்டு இரவில் துணி தைத்தால் தரித்திரம்.'

அந்தக் காலத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் இல்லை. அதனால், ஊசியானது கை மற்றும் நகக்கண்களில் ஏறிவிடும் வாய்ப்பு உண்டு. அத்தகைய வீணான விபத்தைத் தவிர்க்க, இதுதான் வழி!

கையிலேயே மருந்து!

23. லேசாகத் தலைவலி என்றாலே... 'ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் சீஃப் டாக்டருக்கு போன் போடு' எனும் அளவுக்கு இன்றைக்கு பயமே வாழ்க்கையாகி விட்டது. ஆனால், பாம்பு கடித்தால் கூட... 'அந்த பச்சிலையை அரைச்சுப் போடு... இதை உள்ளுக்குக் குடி' என்று அடுத்த நிமிடமே எழுந்து நடமாட வைத்துவிடும் அளவுக்கு நண்டு, சிண்டுகள்கூட கை வைத்தியத்தோடுதான் நடைபோடும் கிராமங்களில். அதுதான் நாட்டுப்புற மகத்துவம்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

24. கிராமப்புறங்களில் தினமும் வாசலில் மாட்டுச் சாணத்தை நீரில் கரைத்து தெளித்துக் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாட்டுச்சாணம் ஒரு கிருமிநாசினி. நோய், நொடியிலிருந்து வீட்டில் உள்ளவர்களைக் காத்துக் கொள்ளவே இந்த சாணத் தெளிப்பு! இப்போதும்கூட ஏழைகளின் வீட்டை மெழுகுவதற்கு சாணம் பயன்பட்டு வருகிறது. அந்தத் தரைதான் அவர்களுக்குப் பஞ்சு மெத்தை!

25. திருநீறு... மாட்டுச்சாணத்தை வெயிலில் காயவைத்து, தீயில் எரித்து சாம்பலாக்கி, ஆற வைத்து சுத்தப்படுத்தி எடுத்து வைக்கும் பொருள். இதைத் தினமும் நெற்றியில் பூசுவார்கள். தலையில் கோத்துக் கொண்டு வலி-சளி உண்டாக்கிக் குடைச்சல் கொடுக்கும் தேவையற்ற நீரை உறிஞ்சும் தன்மை படைத்தது.

26. விதையில்லாத பிஞ்சு புளியங்காயைப் பறித்து, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்துச் சாப்பிட்டால்... பித்த சம்பந்தமான வியாதிகள் மற்றும் கிறுகிறுப்பு போன்றவை குணமாகிவிடும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

27. தேனீக்கள் இறக்கை முளைத்து பறப்பதற்கு முன், புழு பருவத்தில் இருக்கும்போது அவற்றைப் பிசைந்து சாறு எடுத்துச் சாப்பிட்டால்... காச நோயாளிகளுக்கு வரக்கூடிய இருமல் குணமாகும், வறட்டு இருமல் பிரச்னையும் தீரும்.

28. பனைமரத்தில் இருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி போன்றவற்றை மட்டுமே பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். கிராமங்களில் பனம்பழம் அல்லது செங்காயை வெட்டி, கருப்பட்டி சேர்த்து வேக வைத்துச் சாப்பிடுவார்கள். பனங்கிழங்கை வேக வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், வெள்ளைப்பூண்டு, உப்பு சேர்த்து உரலில் போட்டு இடித்து, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சுவைத்துச் சாப்பிடுவார்கள். வேக வைத்து நன்றாக காய வைத்த பனங்கிழங்கை தூளாக்கி சாப்பிடுவார்கள். இப்படி பல்வேறு நிலைகளில் சாப்பிடும் இத்தகைய பனை உணவுகள்.. மலச்சிக்கலிலிருந்து விடுதலை அளிப்பதோடு, தேக நலனையும் பாதுகாக்கும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

29. முற்றின கத்திரிக்காயை தீயில் சுட்டுப் பிசைந்து அதனுடன் தீயில் சுட்ட காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவார்கள். பழைய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள இது நல்ல காம்பினேஷன். அம்மை நோய் பரவும் நேரங்களில் இத்தகைய கூட்டினை சமைத்துச் சாப்பிட்டால்... நோய் தொற்றாது. இதில் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள் கிராமத்தினர்.

30. ஒற்றைத் தலைவலிக்கு பூவரசு மரத்தின் காய்கள் நல்லதொரு மருந்து. பசுமையான பூவரசங்காய்களை அரைத்து பற்று போட்டு வந்தால்... நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். கருஞ்ஜம்பை எனும் மரத்தின் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, மூன்று நாட்களுக்குத் தலை குளித்தாலும் பூரண குணம் காணலாம்.

31. கிராமங்களில் இன்றைக்கும் ஆலமரத்தின் குச்சி, கருவேலங்குச்சி, வேப்பங்குச்சி போன்றவற்றில் பல் துலக்குவார்கள். இதைத்தான் சொல்கிறது 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி'! எனும் சொலவடை. நாயுருவி செடியின் வேரினால் பல் துலக்கினால் பல், ஈறு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

32. 'நுணா' எனப்படும் மஞ்சணத்தி மரத்தின் பழங்களை கிராமத்துச் சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். கறுப்பு நிறத்தில் லேசான ஒரு வாடையுடன் காணப்படும் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால், ஆஸ்துமா நோய் குணமாகும்.

33. சுண்ணாம்புடன் கொஞ்சம் நீரை விட்டுக் கலக்கி, தெளிந்ததும், நீரை வடித்துக் கொள்ள வேண்டும். அந்த நீருடன் சம அளவு நல்லெண்ணெயைக் கலந்தால், கொப்புளங்களுக்கான மருந்து தயார். சமையலறையில் ஏற்படும் தீக்காயங்களுக்குப் பயன்படுத்தினால், காயம் ஆறுவதுடன் தழும்பும் ஏற்படாது என்பது எக்ஸ்ட்ரா ப்ளஸ்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

34. உடல் சூடு காரணமாக நீர்க்கடுப்பு வரும்போது... இரண்டு கால் கட்டைவிரல் நகங்களிலும் சுண்ணாம்பைத் தடவி உலர வைத்தால்... இரண்டு நிமிடங்களில் பூரண குணம் கிடைக்கும். இரண்டு புளியங்கொட்டைகளைக் கடித்துச் சாப்பிட்டாலும் குணம் பெறலாம்.

35. தாளம்மை நோய்க்கு மருந்தாக பூங்காவி என்ற ஒரு வகை மண்ணை நீராகாரத்தில் குழைத்து, தாளம்மை பரவிய கன்னத்தில் பூசுவார்கள். இந்த நோய்க்கு பச்சைமஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டையும் ஒன்றாக அரைத்தும் பூசுவார்கள்.

அழுகிய புண், விஷக்கடி, தீப்புண், வெண்புள்ளி, தழும்பு ஆகியவை குணமடைய காய்ந்த அரச இலைகளை எரித்து, அந்தக் கரியோடு கற்பூரத்தையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து பூசுவார் கள்.

விஷம்... ஒரு விஷயமே இல்லை!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

ரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறித் துடிப்பவர்கள்தான் இங்கே அதிகம். ஆனால், கிராமப்புறங்களில் நல்ல பாம்பையே இடது கையால் தூக்கி வீசும் ஆசாமிகள்கூட உண்டு. அப்படியே கடித்துவிட்டாலும், அடுத்த நொடிகளில் முதல் உதவி போல பல்வேறு வைத்தியங்கள் அவர்களிடம் உண்டு. சமயங்களில் அதுவே முழு உதவியாகவும் இருக்கும்.

36. குளவி, தேனீ, தேள் போன்றவை கொட்டிவிட்டால், மரண வேதனைதான். அந்த இடத்தில் சுண்ணாம்பைத் தடவுவார்கள். சில நிமிடங்களில் விஷம் குறைந்து வலி பறந்துவிடும்.

37. தேள் கொட்டிவிட்டால், யூக்லிப்டஸ் மரத்தின் காய்களை எடுத்து, அதன் மீது எச்சிலைத் துப்பி தரையில் உரசி, கடிவாயில் வைப்பார்கள். விஷம் மட்டுப்படும்.

38. பல்லி எச்சம் நம் உடலில் பட்டால், நீர் சுரந்து புண் மாதிரி இருக்கும். பனைமரத்தின் மீது கல்லை வைத்து அடித்தால், அதிலிருந்து தண்ணீராக சாறு வெளிப்படும். அதை, பல்லி எச்சம்பட்ட இடத்தில் தினமும் காலை வேளையில் தடவி வந்தால், கட்டாயம் குணம் உண்டு.

39. குப்பை, சுடுகாடு இங்கெல்லாம் முள்ளம்பன்றி போல முள்ளோடு கூடிய காய்களுடன் இருக்கும் செடியைப் பார்த்திருப் பீர்கள். ஊமத்தை இலைச் செடி எனப்படும் இது, நாய்க்கடி விஷத்துக்கு 'நச்' மருந்து. இதன் இலைகளைக் கசக்கி சாறு எடுத்து, சுண்ணாம்பு சேர்த்து நாய்க்கடித்த இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால்... விஷம் முறிந்துபோகும். ஆனால், கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் இவற்றை எட்டு நாட்களுக்கும், முட்டை மற்றும் மாமிசத்தை இரண்டு மாதங்களுக்கும் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறினால்... உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

40. பாம்பு கடித்து இறந்தவர்களை விட, கடித்த பிறகு ஏற்படும் அதீத பயத்தால் இறந்தவர்கள்தான் அதிகம். அதாவது, முதலில் தைரியத்தை இழக்கக் கூடாது. நம் நாட்டில் இருப்பவற்றுள் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவைதான். 'நீர்க்காத்தான் குட்டி' எனப்படும் தண்ணீர் பாம்புகள் கடித்துவிட்டால்... அந்த இடத்தில் சுண்ணாம்பு போட்டாலே குணமாகிவிடும்.

41. 'விதி வந்தால்தான் விரியன் கடிக்கும்' என்பார்கள். காரணம், நல்ல பாம்பைவிட, விரியன் பாம்புகளின் விஷம் வேகமாகப் பரவி உயிருக்கு உலை வைத்து விடும். ஆனால், இதற்கும்கூட சிறியா நங்கை, பெரியா நங்கை எனும் பச்சிலை கைகொடுக்குமாம். சிறியா நங்கை இலை 5 கிராம், பெரியா நங்கை இலை 5 கிராம் இரண்டுடன் 10 மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் எந்தவிதமான விஷமும் மட்டுப்படும்.

42. எந்தவிதமான விஷக்கடியாக இருந்தாலும் உடனடியாக பத்து மிளகைக் கடித்துச் சாப்பிட்டால், கூடுமான வரை விஷம் ஏறாமல் தடுக்க முடியும். சாதாரண விஷமாக இருந்தால், அதிலேயே குணமாகிவிடும். வீரியம்மிக்க விஷம் என்றால்... மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுக்கும் வரைக்கும் மிளகு காப்பாற்றும்.

43. வீட்டுப்பக்கம் பாம்புகள் நடமாட்டம் இருந்தால்... வாசலில் கற்பூரம் ஏற்றி வைப்பார்கள். அல்லது வெங்காயத்தை வெட்டி வைப்பார்கள். இந்த இரண்டின் வாடைக்கும் பாம்புகள் அண்டாது.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

அதிரடி வைத்தியம்!

தாவது அடிபட்டாலோ... சுளுக்கு ஏற்பட்டாலோ... ரத்தக்காயம் வந்தாலோ... பெரும்பாலும் பதற்றத்துக்கு வழியே இல்லாமல், அதிரடியாக முடிவெடுத்து, அதை நொடியில் நிறைவேற்றி, அப்படியே விஷயத்தை முடிப்பதுதான் கிராமத்து வழக்கம்.

44. வயல் வேலைகளில் தீவிராக இருக்கும்போது கை, கால்களில் திடீர் என்று ஏதாவது காயங்கள் ஏற்பட்டால்... ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, வயல் மண்ணையே எடுத்து காயத்தின் மீது அழுத்துவார்கள். மண் இல்லாத காட்டுப் பகுதிகளில் இப்படி ஏதாவது காயம் ஏற்பட்டால், சிலந்தி புதிதாக கட்டியிருக்கும் வலையை கைகளால் திரட்டி, அதை அப்படியே காயத்தில் அப்பிக் கொள்வார்கள். காபித்தூளை அமுக்குவதும் உண்டு.

45. வெட்டுக் காயத்துக்கு வாழைப்பட்டைச் சாற்றினை சிறிய துணியில் நனைத்து, அந்த இடத்தில் கட்டி விடுவார்கள். காயம் ஆறிய பிறகுதான் துணியை எடுக்க முடியும். அதுவரை புண் மீது தண்ணீர்பட்டால்கூட உள்ளே போகாதவாறு தடுத்து நிற்கும் இந்த இயற்கை ஹேண்டி பிளாஸ்ட்.

46. ரயில் பூண்டு கேள்விப் பட்டிருப்பீர்கள். அதற்கு, வெட்டுக்காய பூண்டு என்றொரு பெயரும் உண்டு. அதன் இலைகளை கையில் வைத்துக் கசக்கினால் வரும் சாறை... காயத்தின் மீது விட்டால், அப்படியே ஒட்டிக்கொள்ளும். சிறிய அளவிலான தையல் போட வேண்டிய காயங்களுக்குக்கூட இதைப் பயன்படுத்துவார்கள்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

47. காட்டுப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு பாம்பு கடித்துவிட்டால், உடனடியாக வைத்தியம் செய்யமுடியாத சூழலில், சிறுநீரைப் பிடித்து வாயில் ஊற்றி விடுவார்கள். அது கூடுமானவரை விஷம் ஏறுவதை தடுத்து நிறுத்தி வைக்கும். அதன் பிறகு மருத்துவமனைக்குச் செல்வார்கள்.

48. சமையல் வேலை செய்யும் போது கைகளில் கத்தி பட்டுவிட்டால், தீக்குச்சியை கொளுத்தி வெட்டுவாயில் சூடு வைப்பார்கள்.

49. விக்கல் எடுப்பவர்களுக்கு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால், அது நின்றுவிடும். அதிர்ச்சிகரமான தகவல்களைச் சொல்வதில் ஆரம் பித்து, உச்சகட்டமாக கத்தியைக் காட்டி அதிர்ச்சி ஊட்டுவதும்கூட உண்டு.

50. கண்களில் தூசு விழுந்தால்... அதை எடுப்பதற்கு தவியாகத் தவிப்போம். ஆனால், சட்டென்று நாக்கை வைத்தே, தூசியை எடுத்துவிடுவார்கள் கில்லாடிகள்.

51. கண்களில் தூசி விழுவது உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் உறுத்தலை சரிப்படுத்த... தாய்ப்பால் கொஞ்சம் கண்ணில் விட்டால்... உடனடி குணம் கிடைக்கும். பிறகு மருத்துவமனைக்குச் சென்று தீர்வு காணலாம்.

52. சுளுக்கு ஏற்பட்டால்... பெரும் பாலும் பக்கத்து வீடு, அல்லது பக்கத்து தெரு தாத்தாதான் பிஸியோ தெரபிஸ்ட். சுளுக்கு கண்ட இடத்தில் எண்ணெயைத் தடவி, தன் கால் மற்றும் கைளை பயன்படுத்தியே அதிரடியாக அதை நீக்கிவிடுவார்... பைசா கூட ஃபீஸ் வாங்காமல்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

தானிய பாதுகாப்பு!

ப்போதெல்லாம், 100 கிராம் துவரம்பருப்பைச் சேமித்து வைப்பதற்குள்ளாகவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. எப்படியாவது புழு, பூச்சிகள் பதம் பார்த்து விடுகின்றன. ஆனால், ஆயிரம் கிலோவாக இருந்தாலும் அட்டகாசமான ஐடியாக்களோடு அதைப் பொத்திப் பொத்தி பாதுகாப்பதில் கிராமங்களை அடித்துக் கொள்ள முடியாது.

53. அறுவடை முடிந்ததும் நெல்லைச் சேமித்து வைக்கும் குதிர், குலுக்கை போன்றவற்றில் அந்துப்பூச்சி புகுந்து புறப்பட்டால்... அத்தனையும் 'அய்யகோ'தான். இதைத் தடுக்க வேப்ப இலை அல்லது நொச்சி இலை போன்றவற்றை தானியங்களுடன் சேர்த்தே போட்டு வைப்பார்கள். நெல்லுடன் சீத்தாப்பழ விதைகளைப் போட்டு வைத்தால்... பூச்சி பிடிப்பது குறையும்.

54. உளுந்து, பயறு போன்ற தானியங்களை ஆண்டுக்கணக்கில் பாதுகாக்க வேண்டுமா..? முதலில் நன்கு காய வைத்து, பின் ஆற வைக்க வேண்டும். பிறகு, காய்ந்த நொச்சி இலைகளையும் சேர்த்துப் போட்டு வைத்தால்... பூச்சி, பொட்டு அண்டாது. வசம்பைத் தூள் செய்து தூவிவிட்டாலும் பூச்சிகள் வராது.

55. நல்லெண்ணையை ஆட்டி எடுப்பவர்கள், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தவும், சுத்திகரிக்கவும் மொந்தை வெல்ல உருண்டையை அதற்குள்ளே போட்டு வைப்பார்கள். இது, கசடுகளை முறித்து நீண்ட நாட்களுக்கு எண்ணெயைப் பாதுகாக்கும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

56. கருந்துளசி அல்லது வேப்பிலையை நிலத்தில் உலர்த்தி, அரிசி உள்ளிட்ட தானியங்கள் வைக்கும் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால்... புழு, பூச்சிகள் அண்டாது. காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு வைத்தாலும் பூச்சிகள் வராது.

57. உளுந்து, தட்டைப் பயறு, நரிப்பயறு போன்ற தானியங்களைச் சேமிக்கும்போது, அந்தப் பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவுக்கு கல் உப்பு போட்டு வைத்தால்... பூச்சி பிடிக்காது.

58. கிலோ கணக்கில் பூண்டு வாங்கிவிட்டீர்களா? முறையாகச் சேமிக்கா விட்டால் அது கெட்டுவிடும். கேழ்வரகு தானியத்தோடு பூண்டைச் சேர்த்து வைத்தால் கெடாமல் காப்பாற்றலாம்.

59. தக்காளி காய்களை தலைகீழாக கவிழ்த்து வைத்தால், உடனடியாக பழுக்காமல் முடிந்தவரை காயாகவே தாக்குப் பிடிக்கும்.

60. தேங்காயை உரிக்காமல் வைத்திருந்தால் நீண்டநாட்களுக்கு வரும். உரித்துவிட்டாலும் பாதகமில்லை. அதன் குடுமிப்பகுதி மேல் நோக்கியவாறு இருப்பது போல் தேங்காய்களை சுவரோரமாக நிறுத்தி வைத்தால்... நீண்ட நாட்களுக்குக் கெடாது.

61. காய்களை காம்புடன் வைத்தால், சீக்கிரம் வாடிப்போகாமலும்... கெட்டுப்போகாமலும் இருக்கும்.

இயற்கையாக பழுக்க வைப்போமா!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

வசர யுகத்தில் தேவை அதிகமாகி விட்டதால், எதையும் நொடியில் செய்து முடித்துவிட நினைக்கிறார்கள். கடைசியில் அதுதான் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. பழம் பழுக்க வைக்கும் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்... பேராசைப்பட்டு கார்பன் கற்களை வைக்கிறார்கள். எதிர்விளைவாக, அந்தப் பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு இம்சை ஏற்படுகிறது. ஆனால், பழுக்க வைப்பதற்காக கிராமத்தினர் கடைபிடிக்கும் அத்தனையும் படு இயற்கையானது!

பின்குறிப்பு காய்கள் மரங்களிலிருந்து கீழே விழாமல் பறித்தெடுக்கப்பட்டால்தான் பழுக்கும். அடிபட்டிருந்தால்... அழுகிவிடும்.

62. தூய்மையான ஒரு அறையில் வைக்கோல் பரப்பி, மாங்காய்களை வரிசையாக வைத்துவிட்டால் தன்னாலே அவை பழுத்துவிடும். ஆவாரம் செடியின் தழைகள் கிடைக்கும் இடங்களில் அதிலும் பழுக்க வைக்கலாம்.

63. வாழைக்காயை காற்றுப் புகாத அறையில் வைத்து, அடிக்கடி புகை போட்டால்... பழுத்துவிடும். வாழைக்காயின் காம்பில் சுண்ணாம்பு தடவினால், சீக்கிரம் பழுத்து விடும்.

64. பலாக்காய் வெயிலில் வைத்தாலே பழுத்துவிடும்.

65. மா, கொய்யா, நாரத்தை என்று எந்த வகைக் காயாக இருந்தாலும், அரிசிப் பானைக்குள் போட்டு வைத்தால் பழுத்து விடும்.

66. எத்தகைய காய்களையும் கூடையில் வைக்கோலை நிரப்பி, அதில் வைத்தும் பழுக்க வைக்க லாம். நொச்சி இலையைப் போட்டும் பழுக்க வைக்கலாம்.

67. காய்களை நெல் உமியில் திணித்து வைத்தால் சீக்கிரம் பழுத்துவிடும்.

68. வெப்பாலை, வேப்பிலை, துளசி... இந்த மூன்று இலை களையும் பரப்பி, அதன் மீது காய்களை வைத்து, மீண்டும் இலைகளைப் பரப்பி பாத்திரத்தை வைத்து மூடினால், ஒரு வாரத்தில் பழுத்துவிடும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

இதெல்லாம் விளையாட்டுக்கல்ல!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

ப்போதெல்லாம்... விளையாட்டுகள் என்றாலே, அதற்கான தளவாட பொருட்களை நினைத்தால் பலருக்கும் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். ஒவ்வொன்றுக்கும் நூறு, ஆயிரம் என்று செலவழித்து மாளாது. ஆனால், கிராமப்புற விளையாட்டுகளின் தாத்பர்யமே... 'வெறுங்கையில் முழம் போடுவதுதான்'! அட, ஆமாங்க... சும்மா ஒரு குச்சியை எடுத்துக்கிட்டு நாலு கோடு போட்டாலோ... நாலைஞ்சு கல்லைப் பொறுக்கினாலோ... விஷயம் முடிஞ்சுது. பொருளாதார இழப்பில்லாம... அதேசமயம் சந்தோஷத்துக்கு குறைவில்லாம விளையாடி முடிச்சுடலாம்.

69. கிச்சுகிச்சு தாம்பாளம் இருவர் பங்கு பெறும் இந்த விளையாட் டில் எதிரெதிரே அமர்ந்து கொண்டு நீளவாக்கில் மணலைக் குவிப்பார்கள். ஒருவர் அந்த மணலுக்குள் ஏதாவது ஒரு பாகத்தில் சிறுகுச்சியை ஒளித்து வைப்பார். எதிராளி, தன் இரு கைகளையும் இணைத்து சரியாக அந்தக் குச்சி இருக்கும் இடத்தில் வைத்து கண்டுபிடிக்க வேண்டும்.

மனதை ஒருமுகப்படுத்துவதோடு, மூளைக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டு!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

70. தட்டாங்கல் ஐந்து கற்களை வைத்து, 'எட்லாச்சி... குட்லாச்சி... ஏகப் புரட்டாசி, தம்பி பொறந்தான் தடபுடலாச்சி' என்றெல்லாம் பாட்டுப்பாடி ஒரு கல், இரண்டு கல் என மேலே தூக்கிப்போட்டுப் பிடிக்க வேண்டும். கை விரல்களின் இடையில் கல் இருக்கும்போதே... மேலேயும் வீசி கல் பிடிக்க வேண்டும் கையின் பின்புறப்பகுதியால்.

கவனத்தை ஒருங்கிணைத்து, கை விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு.

71. கண்ணாமூச்சி ஒருவர், மற்றொருவரின் கண்ணைப் பொத்திக்கொள்ள, குழுவில் உள்ள பிறர் ஒளிந்து கொள்வார்கள். கண்களை மூடியிருந்தாலும், காதின் வழியாக கேட்டும், மூக்கின் வழியாக நுகர்ந்தும் கண்டுபிடிக்க வேண்டும். புலன்கள் அனைத்தையும் விழிப்பாக வைத்திருக்கும் மனப்பழக்கத்தை உண்டாக்கும் விளையாட்டு!

72. கட்டுத்தாவல் குச்சியால் தரையில் கட்டங்களைப் போட்டு, ஒரு ஓட்டு சில்லை வைத்துக் கொண்டு அந்த கட்டங்களைத் தாவித் தாவி சென்று பாயின்ட் எடுக்கும் விளையாட்டு. இதில் பல ரகங்கள் உள்ளன.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

காலுக்கு மட்டுமல்ல... உடலுக்கே நல்ல பயிற்சி!

73. பல்லாங்குழி பன்னிரண்டு குழிகளை வைத்து அதில் புளியங்கொட்டைகளைப் போட்டு விளையாடுவார்கள். வரிசையாக குழியில் கொட்டைகளைப் போட்டுக் கொண்டே வந்து, அது முடியும் இடத்தில் வெற்றுக்குழியாக இருந்தால்... அடுத்திருக்கும் குழியில் உள்ள அனைத்து புளியங்கொட்டைகளையும் அள்ளிக் கொள்ளலாம்.எண்களை மனதில் ஏற்றி, சரியாகக் கணக்கிடுவதற்கு சரியான பயிற்சி கிடைக்கும்.

74. பதினைந்து நாயும் ஒரு புலியும் முக்கோண வடிவில் கட்டங்களைப் போட்டு விளையாடுவார்கள், செஸ் விளையாட்டு போல. செஸ் விளையாட்டின் தாய் இது!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

மனப் பயிற்சிக்கும், புத்தி கூர்மைக்குமான விளையாட்டு.

75. தாயக்கட்டை கட்டம் போட்டு, தாயத்தை உருட்டி, அதில் வரும் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டிக் கழித்து விளையாடுவார்கள்.

மூளைத் திறனை அதிகப்படுத்தும் விளையாட்டு.

76. கிட்டிப்புல் (கில்லிதாண்டு) சிறிய குச்சி மற்றும் பெரிய குச்சி இரண்டுதான் தேவை. சிறிய குச்சியை பெரிய குச்சியால் அடிப்பார்கள். அது எங்கு விழுகிறதோ... அந்த தூரத்தை அளந்து அளந்து விளையாடுவார்கள்.

குச்சியை அடிப்பது உடல் வலிமையை அதிகரித்து தசைகளை உறுதியாக்கும்.

77. கபடி இரண்டு குழுக்களாகப் பிரிந்து 'கபடி கபடி' என்று பாடிக்கொண்டே வந்து விளையாடுவது. எதிராளியை அவர் தொட்டால்... எதிராளி வெளியேற வேண்டும். எதிராளிகள் பிடித்துவிட்டால், இவர் வெளியேற வேண்டும்.

வியர்க்க விறுவிறுக்க விளையாடுவதால், உடலில் உள்ள தேவையற்ற அசுத்தநீர் வெளியேறி உடல் வலிமை பெறும்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

78. கல்லா... மண்ணா? கூட்டமாக விளையாடும் விளையாட்டு. ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கையில் குச்சியை வைத்திருக்க வேண்டும். குச்சியில்லாதவர் 'கல்லா, மண்ணா?' என்று கேட்பார். 'கல்' என்று சொன்னால்... அருகிலிருக்கும் கற்களைத் தேடிச் சென்று கையிலிருக்கும் குச்சியை அனைவரும் வைக்க வேண்டும். அதற்குள் அந்த ஒருவரிடம் யார் பிடிபடுகிறார்களோ... அவர்கள் மறுபடியும் விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும். அவர் மரம், மண், இலை என்று எந்தப் பொருளை வேண்டுமானாலும் சொல்லலாம்.

எப்போதும் 'அலர்ட்'டாக இருக்க வேண்டும் என்ற விழிப்பு நிலையையும், சுறுசுறுப்பையும் உருவாக்கும் விளையாட்டு.

பொண்ணு பாக்க போலாமா?

'பட்டனைத் தட்டினால் பெண் ரெடி... கம்ப்யூட்டரில் பார்த்தே கல்யாணம் முடி' என்கிற காலமாகிவிட்டது. அதனால்தான், அடுத்தடுத்த நாட்களிலேயே அத்தகைய கல்யாணங்களின் கதையும் முடிந்துவிடுகின்றன. ஆனால், 'அது ஆயிரம் காலத்துப் பயிர்' என்றபடி பலப்பல விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்ததால்தான், அந்த பந்தம் பல நூறாண்டுகளாக இன்றைக்கும் பசையாக இருக்கிறது. இதற்காக கிராமத்தினர் வைத்திருக்கும் வரையறைகள் ஏராளம்!

79. பெண் பார்க்கும் படலத்தில் முக்கிய இடம் சகோதரிக்குத்தான். பிறந்ததிலிருந்து, அம்மா- அப்பாவைவிட சகோதரன் கூடவே அதிகம் வாழ்வது சகோதரிதான். அவளுக்குத்தான் அண்ணன்/தம்பி பற்றி அதிகம் தெரியும். அவர்களின் சுபாவத்துக்கு ஏற்ற பெண்ணைத் தேடிப்பிடிக்க சகோதரியால் மட்டுமே முடியும் என்பதுதான் காரணம்.

80. பெண் பார்க்கச் செல்லும்போது... ஆண்கள் எல்லாம் திண்ணையோடு நின்றுவிட, சகோதரி மட்டும்தான் அடுப்படி வரை சென்று அனைத்தையும் அலசி ஆராய்வாள். பெண்ணுக்கு தலைவாரி, பூச்சூடி, புடவை கட்டி... என்று எல்லாவற்றையும் உரிமையோடு செய்வாள். இந்த சாக்கில் பெண்ணைப் பற்றிய அனைத்தையுமே அவள் கண்டுபிடித்து விடுவாள். அதாவது, உடல் நிலை எப்படி, பேச்சு எப்படி, நடை-உடை எப்படி என்று எல்லாவற்றையும்! அதை வைத்துதான் அந்தப் பெண்ணை சகோதரனுக்கு முடிப்பதா... வேண்டாமா என்று தீர்மானிப்பாள்!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

81. 'ஆணை அருநிழலில் கொடு... பெண்ணை பெருநிழலில் கொடு' என்பார்கள். ஆண் தன்னைவிட வசதி குறைவான பெண்ணை மணப்பதும், பெண் தன்னைவிட வசதியான ஆணை மணப்பதும் இருவருக்கும் நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு இது உத்தரவாதம் அளிக்கும் என்பது அவர்களின் எண்ணம்.

82. அதேபோல சகோதரிக்கு மாப்பிள்ளை தேடுவதில் அண்ணன்/தம்பிக்குதான் முக்கிய பங்கு. வயதில் மிகக்குறைந்த தங்கை வீட்டில் இருந்தால்கூட, 'வீட்டுல பொட்ட புள்ள இருக்குல்ல... அதுக்கு கல்யாணம் முடிச்ச பிறகு, நமக்கு பார்க்கலாம்' என்று அண்ணன்கள் தள்ளிப்போடுவது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது.

83. 'மாடு வாங்க வந்தேன்' என்றபடிதான் மாப்பிள்ளை வீடு பார்க்கப் போவார்கள். அந்த நேரத்தில், மாப்பிள்ளையானவர் மாட்டுத் தொழுவத்துக்கு வந்து மாட்டைப் பிடித்துக் காண்பித்து எல்லாவற்றையும் விளக்கும்போதே... மாப்பிள்ளையைப் பார்த்துவிடுவார்கள்.

84. மாப்பிள்ளையின் சொத்துபத்து பற்றி, வீட்டு வைக்கோல் போர் மற்றும் மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தே உறுதி செய்வார்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு இரண்டும்தான் காலத்துக்கும் கஞ்சி ஊற்றும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம்!

சம்பிரதாயமெல்லாம்... வெத்துவேட்டு இல்ல!

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

வீட்டில் ஒரு விசேஷம் என்றால்... உடனே 'கூப்பிடு பெருசை' என்று அவர்களின் வழிகாட்டுதல்களோடுதான் ஒவ்வொன்றையும் செய்வார்கள். காரணம்... அவர்களின் அனுபவம் நல்லபடி வழிகாட்டும் என்பதுதான். சடங்குகள் என்றாலே பல சமயங்களில்... முகம் சுளிக்கும் அளவுக்குப் போய்விடும். சடங்குகள் என்ற பெயரில் நடத்தப்படும் ஒவ்வொன்றின் பின்னணியிலும் இருக்கும் உண்மையான 'காரணங்கள்' மறைந்து... 'காரியங்கள்' மட்டுமே வெளிப்படுவதால் சங்கடங்களைத் தவிர்க்க முடியவில்லை இக்காலத்தில். இங்கே காரணங்களையும் தெரிந்துகொள்வோம்.

85. வீடுகளில் எந்தச் சடங்குகளாக இருந்தாலும், பெண்களை முன்னிலைப்படுத்தியே நடத்தப்படுகின்றன. தமிழ்ச் சமூகம், தாய்வழிச் சமூகமாக இருப்பதால், பெண்களின் மனம் கோணாமல் பார்த்து நடந்தால்தான் வீடும், வாழ்க்கையும் சிறக்கும் என்ற அக்கறையின் வெளிப்பாடு இது.

86. திருமணத்தின்போது வேம்பு மற்றும் அரச மரக் கிளைகளை வைத்து 'அரசாணிக்கால்' நடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு, அந்தக் கிளைகளை வீட்டுக் கொல்லையில் வைத்து தண்ணீர் ஊற்றி கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும். குடும்பம் என்பதை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தருவதுதான் அரசாணிக்கால். அந்த மரங்கள் நன்றாக வளர்ந்தால்... அந்த ஜோடி நன்றாக குடும்பம் நடத்துகின்றது என்று அர்த்தம்.

87. திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு 'மாமன் பட்டம்', 'நாத்திப் பட்டம்' என நெற்றியில் கட்டப்படும். அதில் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் வட்ட அல்லது மாங்காய் வடிவ காசு கட்டியிருப்பார்கள். பொன் சேர்ப்பதற்கும், உறவு தொடர்வதற்குமான வழி இது.

88. தண்ணீர் நிரம்பிய ஒரு பானையில்... பாலாடை, எழுத்தாணி, மோதிரம் போன்றவற்றைப் போட்டு, மணமக்கள் இருவரை ஒரே நேரத்தில் பானையில் கைவிட்டு போட்டிப் போட்டுக்கொண்டு எடுக்கச் சொல்வார்கள். இதுபோல இன்னும் பலப்பல விளையாட்டுக்கள் உண்டு - தாம்பத்யம் பற்றிய தயக்கத்தைப் போக்க!

89. திருமணம் முடிந்த மூன்றாம் நாள் 'மறுவீடு அழைத்தல்' என்று ஆரம்பித்து... அடுத்தடுத்த வாரங்களில் மகள்-மருமகனை வீட்டுக்கு வரவழைத்தபடி இருப்பார்கள். பிறந்ததிலிருந்து வீட்டிலேயே இருந்த மகள், உடனடியாகப் பிரிந்து போனால்... அவளுக்கு வெறுமை அதிகரித்து, அது மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற உயரிய நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டதுதான் மறுவீடு. ஆடி, தலை தீபாவளி, தலைப் பொங்கல் என்று வரிசையாகப் பெண்ணைக் கொண்டாடுவதும் இந்த வரிசையில்தான்!

90. திருமணத்தின்போது கட்டப்படும் தாலி, மணமகன் வீட்டாருடையது. அடுத்த முடிந்த சில வாரங்களில் 'தாலி பெருக்கிப் போடுதல்', 'தாலி பிரித்துப் போடுதல்' என்று பெண் வீட்டில் விழா நடத்தி, அந்தத் தாலியுடன் கூடுதலாக தங்கக்காசு, தங்கக் குண்டு என்றெல்லாம் போடுவார்கள். பிறந்தவீட்டு பந்தம் இதுபோல தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை அறிவிப்பதற்காக!

91. திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும்... ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளிக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர்வரிசை சென்று கொண்டே இருக்கும். ஏழைகளாக இருந்தாலும் 10 ரூபாய் மணியார்டராவது சென்றுவிடும்... 'பிறந்த வீட்டுடனான உன் பந்தம் முடிந்து விடவில்லை' என்று காலத்துக்கும் தங்களுடைய பெண் தைரியமாக வாழ்க்கையை ஓட்டுவதற்காக.

92. பிறந்த வீட்டிலிருந்து பெண்ணைப் பார்க்கப் புகுந்த வீட்டுக்கு யார் சென்றாலும்... பை நிறைய தானியம், வாழைத்தார், காய்கனிகள் என எதையாவது கட்டாயம் எடுத்துச் செல்வார்கள். இது, 'நீ அடுத்த வீட்டுக்குப் போனாலும் நம் வீட்டு வருமானத்தில் உனக்கும் பங்குண்டு' என்று உணர்த்த!

93. பெண் கருவுற்றால் ஐந்தாவது மாதம் மருந்து கொடுப்பது, ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நடத்துவது என அந்தப் பெண்ணை மனதளவில் சந்தோஷப்படுத்துவது தொடங்கி, முதல் பிரசவ செலவு வரை பெண் வீட்டாரே ஏற்றுக்கொள்வார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக!

94. வளைகாப்பு என்பது வெறுமனே வளையல்களை அணிவிக்கும் நிகழ்ச்சியல்ல... ஏற்கெனவே குழந்தை பெற்ற சீனியர் பெண்கள் எல்லாம் ஒன்றுகூடி, தலைப்பிரசவத்துக்கு தயாராக இருக்கும் பெண்ணுக்கு ஏற்படும் பிரசவ பயத்தைப் போக்கும் நிகழ்ச்சிதான்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

உறவுக்கு மரியாதை!

'பங்காளி, பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு எங்கு வாழும்?' என்று 'சிவாஜி' படத்தில் கேட்கும் பாடல் வெறும் வார்த்தைகள் அல்ல... இன்றைக்கும் கிராமங்களைப் பிணைத்து வைத்திருப்பதே முழுமையாக அறுந்துபட்டுவிடாத மனித உறவுகள்தான். ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும், ஆபத்து என்று வந்துவிட்டால்... காசு, பணம் இருக்கிறதோ... இல்லையோ... வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஓடோடி வருவார்கள். அதைத்தான் 'தானாடா விட்டாலும், தன் தசை ஆடும்' என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!

95. உறவு முறையில் தாய், தந்தையரை அடுத்து முக்கியமான உறவு என்றால்... உடன்பிறப்புக்கள்தான். அதிலும் அக்கா-தங்கை உறவு இறுதி வரை கூடவே வந்து கொண்டிருக்கும். அதாவது, அக்காவுக்கோ... தங்கைக்கோ... காலத்துக்கும் துணையாக நிற்பது அண்ணன் அல்லது தம்பிதான். சொல்லப்போனால், சகோதரியின் குடும்பத்தையே தாங்கிப் பிடிக்கும் உறவு அது. தாய்-தந்தையர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களில் பெண்ணுடைய பங்கானது... சீர்-செனத்தி, வரிசை, சடங்கு என்று காலமெல்லாம் தொடர்வதை உறுதிப்படுத்துவதும் இந்த உறவுதான்.

96. அடுத்தபடியாக உடும்புப்பிடி போல இருப்பது தாய்மாமன் உறவு. திருமணம், காது குத்து தொடங்கி இறப்பு வரை குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கூடவே வருவது தாய்மாமன்தான். அதற்கு தமிழ்ச் சமூகம் கொடுத்து வைத்திருக்கும் மரியாதை மிகப்பெரியது. எல்லோருமே 'மாமன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் 'அம்மான்' என்பதுதான் சரி. அதாவது, அம்மாவுடன் பிறந்தவன் என்பதைக் குறிக்கும் வகையிலான சொல் அது.

97. அடுத்து நிற்பது அத்தை. 'அத்தனின் தங்கை... அத்தை' என்கிறது இலக்கியம். ஆம், ஒரு காலத்தில் அப்பாவை, 'அத்தன்' என்றுதான் அழைத்தார்களாம் (இப்போதுகூட முஸ்லிம் மதத்தினர் 'அத்தா' என்று அழைக்கின்றனர்). தாய்மாமன் அளவுக்கு இல்லாவிட்டாலும்... இதுவும் இறுதி வரைகூடவே வரும் உறவுதான்.

98. பங்காளி உறவு... தந்தை வழியில் பெரியப்பா, சித்தப்பா வீட்டு ஆண் பிள்ளைகளுடன் ஒற்றுமை பாராட்டுவதுதான் பங்காளி உறவு. பிரச்னைகளிலும், குடும்ப விழாக்களிலும் முதல் ஆளாக நின்று தோள் கொடுப்பார்கள் இவர்கள். 'நான் தனி ஆள் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு உதவ ஆள் இருக்கிறார்கள்' என்பதை ஊருக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் உறவு இது.

99. பேரன்/பேத்தி, அப்பா/அம்மா, பாட்டன்/பாட்டி, பூட்டன்/பூட்டி, ஓட்டன்/ஓட்டி என்று ஐந்து தலைமுறைகள் கடப்பதற்குள்ளேயே 200 ஆண்டுகள் வந்துவிடும் என்பதால், அதற்கு மேலான உறவுகளைப் பற்றி பேசுவதற்கே வாய்ப்பிருக்காது. பெரும்பாலானவர்களுக்கு பூட்டன்/பூட்டி பெயர் தெரிந்திருப்பதே அபூர்வம்.

100. பெரும்பாலும் குழந்தைகளுக்கு பாட்டன்/பாட்டி பெயர்களைத்தான் வைப்பார்கள் அந்தக் காலத்தில். பாட்டன்/பாட்டியின் பெயர் சொல்ல வந்த பிள்ளைகள் என்பதற்காகவே 'பெயரன்-பெயர்த்தி' என்று உறவு முறையில் சொல்லப்பட்டு, அதுவே பேரன், பேத்தி என்றாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்... கிராமம் என்பது ஏதாவது ஒரு இடத்தையா குறிக்கிறது..? இல்லவே இல்லை... வாழ்க்கையைக் குறிக்கிறது. அது நம் பாட்டன், பூட்டனின் வீடு. அவைகளின்றி நம் இனத்துக்கு அடையாளம் ஏதுமில்லை!

கிராமங்கள் போற்றுதும்!

தொகுப்பு நாச்சியாள், எம்.மரிய பெல்சின், எஸ்.கதிரேசன்,
கரு.முத்து,
ஜி.பிரபு, ஆர்.குமரேசன், இரா.மன்னர் மன்னன்

அட்டை படம் 'தேனி" ஈஸ்வர்

படங்கள் மு.நியாஸ் அகமது, கே.குணசீலன்,
ஆ.முத்துக்குமார், து.மாரியப்பன்

சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!
 
சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!
சூப்பர் டிப்ஸ் கிராமிய சிறப்பிதழ்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism