கிராமத்தில் வசிக்கும் சித்தி, மலிவு விலையில் கிடைக்கும் புளியை வாங்கி, சுத்தம் செய்து வைத்திருப்பார். நாங்கள் அங்கு செல்லும்போது, எங்கள் அம்மாவும், சித்தியும் அதை பகிர்ந்து கொள்வார்கள். அன்று தன் வீட்டுக்கு ரெகுலராக வரும் காய்கறிப் பெண்ணிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, புளியை நிறுக்க படிக்கல் கேட்டார் சித்தி. சமமான இரு பங்குகளைப் பிரித்தபின் ஒரு சிறு புளி உருண்டை மிச்சமாக, அதை எங்கள் பங்கில் போட்டார் சித்தி. உடனே, என் சித்தி வீட்டு வாண்டு மஞ்சு, "புளியை வாங்குறது நாம; கஷ்டப்பட்டு கொட்டையெடுக்கறது நாம; எச்சாப்புளி (எக்ஸ்ட்ரா புளி) மட்டும் அவுங்களுக்கா?"என்று கோபமாகப் பொரிய, "ஆத்தா... புளிய யாரு வேணா வெச்சுக்கோங்க.... ஆனா, இந்தப் புள்ளய எனக்குக் கொடுத்துருங்க. இது புத்தியக் கேட்டுப் பொழச்சாலே நான் முன்னுக்கு வந்திருவேன்!"என்று அவளை அள்ளிக் கொஞ்சிக்கொண்டார் காய்கறிப்பெண்.
பின்குறிப்பு இறுதியில் ஏகமனதாக முடிவெடுத்து அந்த 'எச்சாப்புளி’யைக் காய்கறிக்காரப் பெண்மணிக்கே கொடுக்க, கஞ்சக்காரி மஞ்சு முகத்தில் மட்டும் ஈயாடவில்லை!
- எஸ்.லக்ஷ்மி, மதுரை
அம்மாவுக்குப் பிடிக்காத கம்ப்ளெயின்ட்!
|