Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

Published:Updated:

வாசகிகள் பக்கம்
ஓவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவங்கள் பேசுகின்றன் !

நெகட்டிவ் வேண்டாமே!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

சமீபத்தில் என் கணவருக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருந்தோம். அப்போது அவரைப் பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர், "என் மைத்துனிக்கும் இப்படித்தான் ஹார்ட் அட்டாக் வந்து, அடுத்த ஆறு மாசத்துலயே ரெண்டாவது அட்டாக்கும் வந்து இறந்தே போயிட்டா...” என்று பயமுறுத்தும் விதத்திலான கதைகளையே பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ மனசு பதறிவிட்டது. சூழ்நிலையைப் புரிந்துகொண்ட என் மகள், "டாக்டர் விசிட் வர்றார். எல்லாரும் ரூமை விட்டு வெளியே போங்க'' என்று ஒருவாறாக நாசூக்காக வெளியேற்றினாள். பின் என் கணவர் நல்லபடியாக குணமாகி வீட்டுக்கு வந்தது வேறு விஷயம்.

அன்பர்களே... நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது, 'எல்லாம் சரியாயிடும்' என்று எப்போதும் நம்பிக்கையாகப் பேசுங்கள். Ôநெகட்டிவ் கேஸ் ஹிஸ்டரிஸ்Õ அங்கு வேண்டவே வேண்டாம்!

- பிரபா டாக்கர், ஹைதராபாத்


பயணத்தில் பறிபோன பவுன்!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

சமீபத்தில் காசி யாத்திரை சென்றபோது, எங்களை வரவேற்ற நண்பர் ஒருவர், நாங்கள் போட்டிருந்த தங்க செயினைக் கவனித்துவிட்டு, "டிராவல்ல இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்... சரி, சரி... போட்டுட்டு வந்துட்டீங்க. கூட்டம் அதிகமா இருக்கும். அதனால செயினை ரூம்லயே கழட்டி வச்சிட்டுப் போங்க'' என்று எச்சரித்தார். "நாங்க பார்த்துக்கறோம்...'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம். கங்கை, அலகாபாத், கயா என்று பூரணமாக யாத்திரையை முடித்துவிட்டு ஊர் திரும்ப ரயில் பிடித்தோம். அதே ரயிலில் வந்த தோழியைப் பார்க்க... அவளுடைய கோச்சுக்குச் சென்றேன். அவளோ சோகமாக உட்கார்ந்து இருந்தாள். அவளுடன் வந்த உறவினர் ஒருவர், நடு பர்த்தில் படுத்திருக்க, அவரின் எட்டு பவுன் தங்க செயினை நிமிடத்தில் அறுத்துக்கொண்டு, தப்பியிருக்கிறான் திருடன். கிட்டத்தட்ட லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை பறிபோன அந்த நிகழ்வு... 'டிராவல்ல இதெல்லாம் எதுக்கு?' என்று ஆரம்பத்தில் நண்பர் கேட்ட கேள்வியை நினைவூட்ட, இனி எக்காலத்திலும் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை மனதுக்குள் பதித்துக் கொண்டேன்.

- ரமா ஜெயராமன், திருச்சி


மழலையில் துளிர்க்கும் தூய்மை!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

எங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்திருந்தோம். கேக் வெட்டிவிட்டு, அனைவருக்கும் ஸ்நாக்ஸும் குழந்தைகளுக்கு சாக்லேட்டும் வழங்கினோம். எல்லா குழந்தைகளும் சாக்லேட்டைச் சாப்பிட்டு, பேப்பரைக் கீழே போட, ஒரு குழந்தை மட்டும் எல்லா பேப்பர்களையும் பொறுக்கி குப்பைக் கூடையில் போட்டது. இதைக் கவ னித்த பெரி யவர்கள் எல் லாம், அந்தக் குழந்தைக்கு 'க்ளாப்' செய்து விட்டு, "எப் படி நீங்க மட் டும் சமர்த்தா இப்படி பண்ணீங்க..?!'' என்றோம் ஆச்சர்யத்துடன்.

" 'வீடு சுத்தமா இருக்கணும். குப்பையை எல் லாம் 'டஸ்ட் பின்'லதான் போடணும்னு அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க...'' என்று அது மழலை பேச... அம்மாவுக்கோ பெருமையும் சந்தோஷமும் பிடிபடவில்லை!

என்ன... நீங்களும் அப்படி ஒரு பெருமைக்குரிய பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கும் இது போன்ற நல்ல பழக்கங்களை, ஒழுக்கங்களை சொல்லித் தரலாம்தானே?!

- எம்.அம்புஜம் முராரி, சேலம்


'இன்று கார்களுக்கு விடுமுறை!'
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அமெரிக்காவில் என் மகள் வீட்டில் இருந்தபோது, 'இன்று ஒரு நாள் உங்கள் கார் களைப் பயன்படுத்தாதீர்கள். பேருந்துகளில் செல்லுங்கள். டிக்கெட் எடுக்கத் தேவையில்லை...' என பேப்பர்களிலும் டி.வி-யிலும் அந்நாட்டு அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டது. "ஏன் இப்படி... பெட்ரோல் மிச்சம் பிடிக்கவா?'' என்று கேட்டேன் என் மகளிடம். "இல்ல... இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக. கார்கள்ல இருந்து வெளிவர்ற புகை, காற்றை கெடுத்து, உலகத்தை வெப்ப மயமாக்குது. அதைப்பத்தி மக்கள்கிட்ட விழிப்பு உணர்வை ஏற்படுத்தறதுக்காக அரசாங்கம் இந்த மாதிரி வேண்டுகோள் விடுக்குது'' என்று விளக்கினாள்.

இதை அப்படியே இங்கே பின்பற்ற முடியாவிட்டாலும்... ஏதாவது ஒரு ரூபத்தில் விழிப்பு உணர்வு ஊட்டலாமே!

- ஸ்ரீ ராஜவேல், சென்னை-21


சங்கட சடங்குகளுக்கு சங்கு ஊதுங்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

உறவினர் ஒரு வரின் இறுதிச் சடங்குக்காக சென்றிருந்தேன். அங்கே பலவிதமான சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது இறந்தவரின் மனைவிக்கு அமங்கலம் செய்ய 'யாரைக் கூப்பிடலாம்' என்று யோசித்த 'பெரிய மனுஷிகள்' கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணை அழைக்க, அவரோ திடுக்கிட்டு மறுத்தார். காரணம் இதுதான்... அந்தச் சடங்கை ஒரு கைம்பெண்தான் செய்ய வேண்டுமாம். ஆனால், அக்கூட்டத்தில் மூத்த கைம்பெண்கள் யாரும் இல்லாமல் போக, இளவயதிலேயே கணவரை இழந்து, பின் மறுமணம் செய்துகொண்டு, குழந்தையுடன் இருக்கிற அந்தப் பெண்ணை "பரவாயில்ல வா...'' என்று 'அரைத் தகுதி' அடிப்படையில் அழைத்தனர். நிர்ப்பந்தத்தால் தர்மசங்கடத்துடன் அந்தப் பெண்ணும் அந்தச் சடங்கை செய்து முடித்தார்.

ஒருவரின் மனதைப் புண்படுத்தி செய்யும் இந்த சடங்குகள் எதைச் சாதிக்க என்று தெரியவில்லை! இதையெல்லாம் விட்டொழித்தால்தான் என்ன?

- ஜே.கிருத்திகா, திருச்சி

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
 
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism