Published:Updated:

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டோ அனுப்புங்க ....சேதி சொல்லுங்க !

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ100

'செண்பகமே... செண்பகமே...'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

எப்போதும் துறுதுறுவென்று இருப்பாள் என் மகள். ஒருநாள் நான் பால் கறந்து கொண்டிருப்பதைப் பார்த்தவள், 'நானும் பால் கறக்கிறேன்' என்று விளையாட்டாக ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கன்றுக்குட்டியின் அருகில் அமர்ந்து விட்டாள். அப்போது அவளுக்கு மூன்றரை வயது. இன்று அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிகிறாள்.

அவள், அருகில் இல்லாத குறையை இதுபோன்ற போட்டோக்கள்தான் தீர்த்துக் கொண்டிருக்கின்றன.

- மனோரஞ்சிதம் நடராஜன், நாமக்கல்

'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

அமெரிக்கா என்றதுமே... பெரிய பெரிய கட்டடங்கள், விஞ்ஞான சாதனைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், 1997-ல் அங்கு சென்றிருந்தபோது அவையெல்லாம் என் கவனத்தை ஈர்க்கவில்லை. நம் ஊர் போல் பலவேடங்களில் அமெரிக்கர்களும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சிதான் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பணக்கார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வாழும் பிரஜைக்கு, ஏழை நாடான இந்தியாவிலிருந்து சென்ற நான் பிச்சைபோடும் காட்சிதான் இந்த போட்டோ.

- எம்.சரோஜா, சென்னை - 21

'பாரடி கண்ணே கொஞ்சம்... பைத்தியமானது நெஞ்சம்!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

என் கணவர் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கே, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கும் கெட்டுகெதர் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். ஒரு தடவை அந்த நிகழ்ச்சி நடந்தபோது, பார்வையாளர்கள் பகுதியில் திடீரென ஒரு கிறுக்கன் வந்து நிற்க... ஒரே பரபரப்பாகிவிட்டது. கொஞ்சம் சுதாரித்தபோதுதான் அனைவருக்கும் புரிந்தது... மாறுவேடப்போட்டிக்காக மேடைக்குப் போக வேண்டிய நபர் கூட்டத்தில் புகுந்த விஷயம். அவர் வேறு யாருமல்ல.. என்னவர்தான். முன்னதாக இதே வேஷத்துடன் அரங்கத்தினுள் நுழைய முயற்சித்தபோது, அவரை காவலாளிகள் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- இராஜாத்தி கதிரவன், பாதரக்குடி

'இதோ எந்தன் தெய்வம்... முன்னாலே!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

படுசுட்டியான என் ஐந்து வயது பேத்தி பிரியங்கா, படிப்பில் மட்டுமல்ல... பாட்டு, நடனம், பேச்சு, ரைம்ஸ், நடிப்பு, விளையாட்டு, தியானம், யோகா போன்றவற்றிலும் சகலகலாவல்லி. ஒருநாள்... மகளை குளிப்பாட்டிவிட்ட அவளின் அம்மா, துண்டை சுற்றிவிட்டு, மாலை அணிவித்து, விபூதி, குங்குமம் இட்டு பூஜை அறையில் உட்கார வைத்தாள். நாங்கள் சற்று எதிர்பார்க்காத நேரத்தில், பிஞ்சு விரல்களால் தன் சிறிய கீ போர்டை வைத்துக்கொண்டு, கண்களை மூடியபடி அன்னையின் முன்பு அமர்ந்து வாசிக்க ஆரம்பித்துவிட்டாள். உடனே, ‘க்ளிக்' செய்தோம். தெய்வீக ஒளிவீசுவதுபோல் அபூர்வமாக அமைந்துவிட்டது இந்த போட்டோ.

- கே.எம்.தங்கம்மாள், பீளமேடு

 

'தாவணி போட்ட தீபாவளி'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

தோழிகள் திலகம், கீதா மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் நானும் சேர்ந்து 1987-ல் எடுத்துக் கொண்ட படம் இது. அப்போது எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் போட்டோக்கள் என்றாலே அபூர்வமான விஷயம் என்பதால்... மாப்பிள்ளையிடம் காட்டுவதற்கு இந்த போட்டோதான் கிடைத்தது. அவரிடம் இதைக் கொடுத்து, 'இதில் தாவணி போட்டு நிற்கும் பெண்களில் ஒருவர்தான் உன் மனைவியாகப் போகிறவர்' என்று கூற... மிகச்சரியாக என்னை யூகித்திருக்கிறார் என்னவர். என் தோழிகளின் திருமணத்துக்குப் பயன்பட்டதும் இதே போட்டோதான்.

இடது ஓரத்தில் கருப்பு தாவணி போட்டு அமர்ந்திருப்பது நான். வெள்ளைத் தாவணி திலகம், வலதுபுறம் நீண்ட முடியுடன் நின்றிருப்பவள் கீதா.

- விஜயலட்சுமி முருகேசன், கும்பகோணம்

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
 
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism