Published:Updated:

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

Published:Updated:

வெற்றிக்கு பாஸ்வேர்ட்!
ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு...
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கேம்பஸ் இந்தர்வியூ' மோசடிகள்....
பெற்றோர்களே உஷார் !

கேம்பஸ் இன்டர்வியூ... பொறியியல் மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய கட்டம் இது! இறுதி ஆண்டின்போது, பெரிய பெரிய நிறுவனங்களால் கல்லூரிக் குள்ளேயே நடத்தப்படும் இந்த எம்ப்ளாய்மென்ட் போர் டில் 'டிக்' ஆகிவிட்டால், எதிர்காலம் டக்கர்தான்!

பொதுவாக, ஒரு கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களின் திறமைகள், 'இந்த காலேஜ் ஸ்டூடன்ட்ஸோட பெர்ஃபாமன்ஸ் நல்லாயிருக்கு' என்று அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தினரால் கவனிக்கப்படும்போது, அந்தக் கல்லூரியின் மீது அவர்களின் பார்வை ஆழமாகப் படியும். இதையடுத்து, 'இன்னும் பல பணியாளர்களை அங்கிருந்தே நாம் தேர்வு செய்யலாமேÕ என்று அவர்கள் விரும்பி, மாணவர்களை முன்கூட்டியே தேர்வு செய்து தங்கள் நிறுவனத்துக்காக ரிசர்வ் செய்வார்கள்! இதுதான் பிரபல, தரமான கல்லூரிகளின் மாணவர்களை படிப்புக் காலத்திலேயே தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களாக தேர்ந்தெடுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ! இது நம் இந்திய கல்வி வரலாற்றில் ஐம்பது ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது.

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

இடையில், கணினி மற்றும் பல்வேறு துறைகளின் முன்னேற்றங்களும் அதன் காரணமாக பணியிடங்களும் அதிகரித்தன. அதனை ஈடுகட்ட, பெரிய எண்ணிக்கையில் புதியவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியில் அமர்த்த, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற 'தரமான' கல்லூரிகளில் மட்டுமே கேம்பஸ் இன்டர்வியூ என்ற நிலை மாறி, பெரும்பாலான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு விரிந்தது. இன்றைய காலகட்டத்தில் பொறியியல் மாணவர்கள் அனைவருக்குமே இந்த வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 'கேம்பஸ் இன்டர்வியூ' என்பதற்கான சூத்திரங்கள், சூட்சமங்களை இந்த இதழில் பார்ப்போம்!

பலர் நினைப்பது போல, எண்பது சதவிகிதம் மதிப்பெண் வைத்திருக்கும் மாணவர்களை மட்டுமே தேடி நிறுவனங்கள் கேம்பஸ§க்குள் வருவதில்லை. மதிப்பெண் தவிரவும், அவர்களின் தனித்தன்மை, ஆளுமை, பொறுமை, சமயோஜிதம், உடல்மொழி, தன்னம்பிக்கை என்று நிர்வாகத்திறன் சம்பந்தப்பட்ட அத்தனை கூறுகளிலும் தங்களை முன்னிறுத்தும் மாணவர்களையே அவர்கள் விரும்புகிறார்கள்.

குறிப்பாக, மாணவர்களின் ப்ராஜெக்ட்டுகள் தனிக்கவனம் பெறுகின்றன. ஏற்கெனவே சொன்னதுபோல, அதில் மாணவர்கள் மெனக்கெட்டிருக்கும் கல்வி சமாசாரத்துக்கு மட்டுமல்லாது, தங்களின் ப்ராஜெக்ட்டுக் கான கருப்பொருளை (தீம்) தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டும் தனித்தன்மை, அதை பிரசன்ட் செய்யும் விதம், அதில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடன் பதில் சொல்லும் நேர்த்தி என்று எல்லாமும் கவனிக்கப்படும்.

உதாரணமாக, ஒரு பெரிய, பிரபல கல்வி நிறுவனத்தில் எல்லா மாணவர்களும் ஏறக்குறைய 80% மதிப்பெண்களை வைத்திருந்தார்கள்! அனைவரும் வழக்கம்போல தங்களின் சீனியர்களின் ப்ராஜெக்ட் தடங்களை பின்பற்றியே தங்களின் ப்ராஜெக்ட்டுகளை சமர்பித்திருக்க, ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் சாஃப்ட்வேர் டெவலப் செய்திருந்தார். மற்றவர்களைவிட அவரின் மதிப்பெண்கள் சில பர்சன்டேஜ் குறைவாக இருந்தாலும், அவரின் அந்த 'ரிஸ்க் டேக்கிங்' முயற்சியின் காரணமாக, 'செலக்டட்' கார்ட் கொடுத்தார்கள் அந்த மாணவருக்கு. பிற்காலத்தில் தங்கள் நிறுவனத்துக்கான பல முன்னோடி முயற்சிகளை அவன் மேற்கொள்வான் என்பதை, அந்த நிறுவனத்தினர் உணரும் வண்ணம் அந்த மாணவன் ஏற்படுத்திய நம்பிக்கைதான் அதற்கு காரணம். இப்போது புரிகிறதா சூட்சமம்?!

அடுத்ததாக, ரிட்டர்ன் டெஸ்ட், குரூப் டிஸ்கஷன், எக்ஸ்டெம்பரரி டாக்கிங், பர்சனல் இன்டர்வியூ மற்றும் டெக்னிக்கல் இன்டர்வியூ, ஃபைனல் இன்டர்வியூ என கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படும். இந்தக் கட்டங்களில் எல்லாம், 'எப்படி செயல்படவேண்டும்' என்பதை அறிந்துகொள்வது முக்கியம். அதோடு, 'எப்படி செயல்படக்கூடாது' என்பதிலும் புரிதல், பக்குவம் வேண்டும்.

ரிட்டர்ன் டெஸ்ட் ஆப்டிடியுட், ஆட்டிடியுட், டெக்னிக்கல் வியூ பற்றியெல்லாம் எழுத்துத் தேர்வில் கேள்விகள் கேட்பார்கள்.

குரூப் டிஸ்கஷன் இதில் தங்களுடைய கருத்துகளை மாணவர்கள் எப்படி நிதானமாக, நாகரிகமாக சபையில் வைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, குழுவில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கிறார்களா, அவர்கள் கருத்துகளை மதிக்கிறார்களா, உற்சாகப்படுத்துகிறார்களா என்று அனைத்தும் கவனிக்கப்படும். பெயர்கள் 'ஷார்ட் லிஸ்ட்' செய்யப்படும்.

எக்ஸ்டெம்பரரி டாக்கிங் ஏதேனும் ஒரு டாபிக் கொடுத்து, அவர்களின் கருத்துக்களை கவனிக்கும் இந்த நிலை, ஒரு டாபிக்கைப் பற்றிய அவர்களின் அறிவை, அணுகுமுறையை சோதிப்பதற்கு.

பர்சனல் இன்டர்வியூ, டெக்னிக்கல் இன்டர்வியூ இதில் ஆட்டிடியூட், ஆப்டிடியூட், முடிவெடுக்கும் திறன், பர்சனாலிட்டி போன்றவை கவனிக்கப்படும்.

ஃபைனல் இன்டர்வியூ சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள், அந்த மாணவருடன் ஒரு நேரடி இன்டர்வியூ செஷன் முடித்து, தகுதியானவரெனின் இறுதியாக தேர்ந்தெடுப்பார்கள்.

இதுதான் கேம்பஸ் இன்டர்வியூ என்பதற்கான பொது இலக்கணம். ஆனால், இன்று பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் 'கேம்பஸ் இன்டர்வியூ இருந்தால்தான் நம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகமாகும்' என்று, புரோக்கர்கள் மற்றும் ஏஜென்ட்டுகளை நியமித்து, சில தனியார் நிறுவனங்களுடன் பேசி, தங்கள் கல்லூரிக்கு 'கேம்பஸ் இன்டர்வியூÕ நடத்துவதற்காக அவர்களை வரவைக்கின்றனர்.

அவர்களும் 'கமிஷ'னின் பொருட்டு 'பேருக்காக' வந்து சில மாணவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு, பின் டிரெய்னிங் பீரியடில் 'தகுதி இல்லை' என்று அவர்களை ஈஸியாக வெளியேற்றி விடுகிறார்கள். அல்லது, பொறியியல் மாணவர்களை, தங்களின் 'டெக்னிக்கல் ஜாப்'களுக்கு பயன்படுத்தாமல், 'நான் டெக்னிக்கல் ஜாப் (பி.பி.ஓ)'ல் பணி அமர்த்துகின்றனர். 'கேம்பஸ் இன்டர்வியூவில் குளறுபடிகள்' என்று அவ்வப்போது தலைப்புச் செய்தி வருவதற்கு இதெல்லாம்தான் காரணம்!

மொத்தத்தில், மாணவர்களின் எதிர்காலத்துக்கு வெளிச்சம் பாய்ச்சும் இந்த 'கேம்பஸ் இன்டர்வியூ' கலாசாரம், தரமான கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை வசப்படுத்துவதாக இருக்கிறது. ஆனால், பல கல்லூரிகளில் கண் துடைப்பாகவே இருக்கிறது. மாணவர்களும் பெற்றோர்களும் உஷார்!

- மீண்டும் சந்திப்போம்...

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
 
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism