இதுக்கு நடுவுல, "அநியாயம்! எங்கள மட்டும் இப்படி தீண்டத்தகாதவர்கள் ஆக்கி, எந்த ஆட்டைக்கும் சேர்த்துக்கற மாட்டேங்கறீங்களே"னு கோவிச்சுக்கிட்ட அந்த கோட் - எட் காலேஜ் கைஸ், "நாங்களும் ரங்கோலி போடுவோம்!"னு ட்ரை பண்ண, கலர்ஃபுல்லா களைகட்டிச்சு ஆஃப் ஸ்டேஜ் போட்டிகள்.
லஞ்ச் இன்டர்வெல் முடிஞ்ச கையோட, வெரைட்டி என்டர்டெய்ன்மென்ட். பிச்சை எடுக்கும் பெண் வேடம் தொடங்கி ஒபாமா வரைக்கும் அத்தனை பேரையும் மேடையில் 'கேட் வாக்'க வைத்தது ஜாலிலோ ஜிம்கானா. அடுத்து, குத்தாட்டம்... ஸாரி, குரூப் டான்ஸ் போட்டி! 'மன்னார்குடி கலகலகலக்க'னு ஆடுன ஆட்டத்துல கோயம்புத்தூரே கலங்கிருச்சுடா சாமீ. ஆடியன்ஸும் அருள் (!) வந்து ஸ்டேஜ்-க்கு கீழ 'சிக்குபுக்கு சிக்குபுக்கு' ரயில் ஓட்டி அலப்பறையக் கொடுத்தது ரொம்பவே அலம்பல்ஸ்!
கேர்ள்ஸுக்கான போட்டி முடிஞ்சதும், 'எங்க மேம்ஸுகளுக்கும் போட்டி வைங்களேன்...'னு கண்மணிகள் ரெக்வஸ்ட் வெக்க, சிக்கினாங்க லெக்சரர்ஸ். 'கவுண்டமணி பொண்ணு பார்க்க வந்தா, வெட்கப்படற மாதிரி நடிக்கணும்'னு ஒரே போடா போட, கலக்கிட்டாங்க கீதா மேம்! க்ளாப்... க்ளாப்... க்ளாப்!
|