'' 'கோழை நூறு பேரோட வந்தாலும் ஒரு ஆளு. வீரன் ஒரு ஆளா நின்னாலும் நூறு பேறு'... என்னோட ஃபியான்ஸ் ஒரு வீரனாதான் இருப்பாரு பாருங்க..!''னு 'தெனாவட்Õடா பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி ஆரம்பிச்ச ஷாலினி, அக்மார்க் திருநெல்வேலி தமிழச்சி!
''அவங்க குடும்பமே ஒரு வீரக் குடும்பமா இருப்பாங்க. அவருக்கு கராத்தேயில இருந்து சிலம்பு சண்டை வரைக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கும். புலியை 'பென்Õனால விரட்டிடுவாரு, பாம்பை பென்சிலால அடிச்சிடுவாரு! என்னை யாராச்சும் கிண்டல் பண்ணினா, குடலை உருவிடுவாரு. எல்லாத்துக்கும் மேல, என் குழந்தைங்களுக்கு ஒரு நல்ல ரோல் மாடலா இருப்பாரு...''னு ஷாலினி முடிக்க,
''கல்வி, செல்வம், வீரம்... இதெல்லாத்தையும் விட அழகுதான் முக்கியம் எனக்கு! யெஸ்... மனசால அவன் அழகனா இருக்கணும்!''னு ஷீஜா சிம்ப்பிள் அண்ட் ஸீவீட்டா முடிக்கப் பார்த்தாங்க.
ஆனா, ''அழகுக்கு இலக்கணம் முருகக் கடவுள்தான். அதனால, உனக்கு பழனியாண்டி மாதிரி ஃபியான்ஸ் கிடைக்க ப்ளெஸ் பண்றேன்!''னு அதுலயும் லிடியா ஒரு ஆப்பு வைக்க, அவங்களுக்கு எல்லாரும் ஆதரவுக் குரல் கொடுக்க, அவங்களை எல்லாம் ஷீஜா துரத்தி, விரட்டி விளையாட ஆரம்பிக்க, கலவரத்தோட கலைஞ்சது சபை!
ஸ்ஸப்பா... காலம் கலிகாலம். இல்ல, இல்ல... இவங்களுக்கு 'வரப் போறவங்களுக்கு' எல்லாம் 'கிலி'காலம்!
- இரா.பரணீதரன்
படங்கள் ஆ.வின்சென்ட் பால்
|