Published:Updated:

பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'

"ஏழாவது படிச்சப்போ, ஸ்கூல் ஃபங்ஷன்ல ஒரு சீஃப் கெஸ்ட், யோகா பத்தி பேசிட்டு இருந்தார். முதல் வரிசையில உட்கார்ந்திருந்த நான் தூங்கி விழ, 'இதோ பாருங்க ஒரு வருங்கால சாதனையாளர் தூங்கிட்டு இருக்காங்க...'னு நகைச்சுவையோட மைக்ல சொல்ல, மொத்த ஆடியன்ஸும் சிரிக்க, அரைத் தூக்கத்துல திடுக்கிட்டு எழுந்தேன்!

ஃபங்ஷன் முடிஞ்சவொடன அவர்கிட்ட போய் 'நீங்க பேசி னதை நான் மிஸ் பண்ணிட்டேன்...'னு சொல்லி 'ஸாரி' கேட்க, 'அதனால என்ன... இப்போ கேட்டுக்கோ...'னு யோகாவைப் பத்தி அவ்ளோ எளிமையா விளக்கினாரு. அதுலயிருந்துதான் தொடங்குச்சு என் யோகா பயிற்சி!"னு சுவாரஸ்யமா ஓப னிங் கொடுக்கற செங்கல்பட்டு, வித்யாசாகர் லேடீஸ் காலேஜ் ஸ்டூடன்ட் பரணிஸ்ரீ, ஒரு 'யோகா' சாதனையாளர்!

மாவட்டம், மாநிலம், நாடு, உலகம்னு யோகா போட்டிகள்ல முத்திரை பதிச்சிருக்கற பரணிஸ்ரீ படிக்கறது செகண்ட் பி.எஸ்சி., ஐ.எஸ்.எம்.

"பத்தாவது படிக்கிறப்போதான் முதன் முதலா யோகா போட்டியில கலந்துகிட்டேன். ஆனா, 'பதினெட்டு வயசு ஆகல'னு சொல்லி கிட்டத்தட்ட பதினெட்டு போட்டிகள்ல ரிஜக்ட் செஞ்சுட்டாங்க"னு சொல்ற பரணிக்கு, அதுக்கப்பறம்தான் யோகா பயிற்சிக்கு நல்ல களம் கிடைச்சிருக்கு.

"ப்ளஸ் டூ முடிச்சப்போ, யோகா மாஸ்டர் ராம் ரகுநாத், 'யோகால கண்டிப்பா சாதிக்கணுங்கற எண்ணம் இருக்கா..?'னு உறுதிமொழி வாங்கிட்டு, பெங்களூருல இருக்கற சுவாமி விவேகானந்தா யுனிவர்சிட்டியில பி.எஸ்சி., யோகா சேர்த்துவிட்டார். அங்க போன பிறகுதான் தேசிய அளவு வரைக்கும் வரிசையா கப்களை அள்ளினேன். பிறகு, Ôஇன்டர்நேஷனல் ஹிமாலயன் ஒலிம்பயர்' போட்டியில செகண்ட் பிரைஸ். பாண்டிச்சேரியில நடந்த இன்டர்நேஷனல் போட்டியில ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கினேன்"னு சந்தோஷப்படற பரணி, 2006-07-ம் வருஷம் யோகாவுக்கான 'யோகினி அவார்டு' வாங்கியிருக்கற இளம் சாதனையாளர்!

டான்ஸ், பாட்டு, டிராயிங், பேட்மின் டன்னு எல்லா ஏரியாவுலயும் அக்கா அசத்தல் வின்னர்தான்!

"யோகால பிஹெச்.டி. முடிச்சுட்டு, எங்க ஊர்ல ஒரு யோகா ஸ்கூல் ஆரம்பிக்கணுங்கறதுதான் என் ஆசை!"

- இப்படியரு திட்டத்தோட இருக்கற பரணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுட்டு விடைபெற்றோம்

- பா.ஜெயவேல்

பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
 
பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
பூஞ்சோலை பக்கங்கள்! -'நானெல்லாம் மழலையில இருந்தே மேதையாக்கும்!'
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism