Published:Updated:

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

Published:Updated:

 
10 சி.ஆர்.எஸ்.
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழுது தீர்ப்பதே அழகு

'எதற்கும் கலங்க மாட்டேன்' என்று சோதனைகளைக் கடப்பது தன்னம்பிக்கை. 'எதற்குமே கலங்கமாட்டேன்' என்று சாவு வீட்டில்கூட லெக்சர் கொடுப்பது..?! இப்படி ஒரு லெக்சர் பார்ட்டிதான் சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஃபீலிங்.. ஹீலிங்...!

அவளுடைய பாட்டி இறந்ததற்கு நான் துக்கம் விசாரிக்கச் சென்றபோது, ''அவ பாட்டிதான் அவள உயிரா வளர்த்தாங்க. ஆனா, இங்க எல்லாரும் அழுதுட்டிருக்க, அவ கண்ணுல துளி கண்ணீர் கசியல. கூடவே, 'எதுக்கு அழறீங்க..? வாழ்க்கையில இதுவும் ஒரு கட்டம்... கடந்துதான் ஆகணும்'னு எங்களுக்கு போதனை பண்றா. 'இப்படி கல்நெஞ்சக்காரியா போயிட்டாளே'னு சொந்தக்காரங்க மட்டுமில்ல, நானும்கூட கலங்கிட்டேன். அவகிட்ட கொஞ்சம் பேசிப்பாருங்க டாக்டர்'' என்று புலம்பிய சந்தியாவின் அம்மா, அவளை ஒரு விடுமுறை தினத்தில் என்னிடம் அனுப்பி வைத்தார்.

''கேர்ள்ஸ் ஏன் டாக்டர் இப்படி அழுவாச்சியா இருக்காங்க? ரீசன்ட்டா என் கிளாஸ்மேட் ஒருத்தி, அஞ்சு பவுன் செயினைத் தொலைசுட்டா. அப்படி ஒரு அழுகை. அழுதா, செயின் திரும்பி வந்துடுமா? எவ்ளோ சொல்லியும் திருந்தல அவ...'' என்று என்னிடம் சலித்துக்கொண்டாள் சந்தியா. ''நான் எப்பவுமே ஏதாச்சும் சுய முன்னேற்ற புத்தகங்கள் படிச்சுட்டேதான் டாக்டர் இருப்பேன். அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்...'' என்று அவள் சொன்ன நேரத்தில், புரிந்துபோனது பிரச்னைக்கான காரணம் எனக்கு.

புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை மட்டும் மனதில் எடுத்துக் கொண்டு, 'எந்த விஷயத்துக்கும் கவலைப்படக் கூடாது, வருதப்படக் கூடாது' என்பது போன்ற எண்ணங்களை மனதில் ஆழமாக பதித்து வைத்திருக்கிறாள். சுருக்கமாகச் சொன்னால், 'வருத்தப்படா வாலிபர் சங்கம்' ஒன்றை ஆரம்பித் தால், அதன் தலைவி சந்தியாதான். நடந்த சம்பவங்களை வைத்தே அவளுக்கு கவுன்சிலிங் தந்தேன்.

''மிருகங்களிடமிருந்து நம்மை வேறுபடுத்துவது ஆறாவது அறிவு. அந்த அறிவில்தான் உணர்ச்சிகளும் அடங்கும். சிரிப்பு, அழுகை, ஏக்கம், தவிப்பு... இதையெல்லாம் அந்தந்த சூழ்நிலையில் வெளிப்படுத்துவது மனித இயல்பு. இல்லாவிட்டால் மூளை எந்த விஷயத்துக்கும் ரியாக்ட் செய்யாமல் போய்விடும். எனவே, சந்தோஷமான விஷயத்தை கொண்டாடுவதைப் போல, துக்க விஷயத்துக்கு வருத்தப்படுவதிலும் தவறில்லை.

உன் தோழி எதற்காக அழுதாள்? தன் பொறுப்பற்றதனத்துக்கு வருந்தியும், பெற்றோர் திட்டுவர் என்று பயந்தும். இன்றைய தேதியில் தங்கம் விற்கும் விலையில் அவள் தொலைத்திருப்பது அறுபதாயிரம் ரூபாயை. அந்த இழப்பை அவள் தன் கண்ணீரால் வெளிப்படுத்துகிறாள். இது இயல்பான உணர்வு வெளிப்பாடு.

அதேபோல், இறப்புக்கு பின் என்னதான் கதறி அழுதாலும் யாரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்றாலும், கண்ணீர் விடுவதும், வருத்தப்படுவதும்... அவர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருந்தார்கள், இனி அவர்களின்றி நாம் எவ்வளவு வருந்தப் போகிறோம் என்பதை வெளிப்படுத்தவும்தான். அது, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு நாம் செய்யும் இறுதி மரியாதையும் கூட!'' என்றேன்.

''ஸீ யூ டாக்டர்'' என்று கிளம்பினாள். நிச்சயமாக வீட்டில் போய் அழுது தீர்த்திருப்பாள்!

இவள் இப்படி என்றால், இந்த சந்தியாவுக்கு நேரெதிர் குணக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி...

- ஃபீல் பண்ணுவோம்...

ஃபீலிங்.. ஹீலிங்...!
 
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism