Published:Updated:

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

Published:Updated:

ரேவதி
படங்கள் ஆ.முத்துக்குமார்
பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !
பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

''உங்களோட பழைய பட்டுப் புடவை எந்த நிலையில இருந்தாலும், நல்ல விலை கொடுத்து நாங்க வாங்கிக்கிறோம். புடவையை எடுத்துக்கிட்டு வாங்க... பணத்தை அள்ளிக்கிட்டு போங்க...''

- ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு ஆட்டோக்களில் அலறுகிறது இப்படியரு பிரசாரம். பத்திரிகைகளிலும் கூட விளம்பரங்கள் படபடக்கின்றன!

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

'என்ன இது... பழைய பட்டுப் புடவைக்கு வந்த மவுசு..?' என்ற ஆச்சர்யத்தோடு, 'இதையெல்லாம் வாங்கிட்டுப்போய் என்ன செய்வாங்க?' என்றொரு கேள்வியும் ஒட்டிக்கொள்ள... சென்னை, மேற்கு மாம்பலத்தில் 'பழைய பட்டுப் புடவைகள் வாங்கப்படும்' என்ற பேனர் தொங்கிக் கொண்டிருந்த திருமண மண்டபம் ஒன்றுக்குள் நுழைந் தோம். பெண்கள் பலரும் பழைய பட்டுப் புடவைகளைக் கொடுத்துவிட்டு, பணமும், 'பளிச்' புன்னகையுமாக சென்று கொண்டிருந்தனர்.

புடவைகளை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த முருகனை நெருங்கிப் பேச்சு கொடுத்தபோது... ''பட்டு ஜரிகை வெள்ளியிலதான் பெரும்பாலும் தயாராகுது. பழைய பட்டுப் புடவைகள வாங்கி, அதுல இருக்கற வெள்ளி ஜரிகையை மட்டும் பிரிச்செடுத்து, திரும்பவும் ஜரிகை, பாத்திரம்னு தயாரிக்கறாங்க. அதுக்காகத்தான் பழைய பட்டுப் புடவைங்கள வாங்குறோம். கை மேல பணத்தைக் கொடுத்துடறதால... நம்பிக்கையோட மக்கள் வந்து புடவைகளைக் கொடுக்கறாங்க. வீடு தேடிப்போய் வாங்கறதும் உண்டு.

20, 30 வருஷத்துக்கு முன்ன 500 ரூபாய்க்கு வாங்கின பட்டுப் புடவைக்கு, இப்ப 1,000 ரூபாய்க்கு மேல கிடைக்கும். தரத்தைப் பொறுத்து விலை அதிகமாவே கிடைக்கும்'' என்றவர்,

''ஒரிஜினல் வெள்ளி ஜரிகையா... டெஸ்டர்ட் வெள்ளி ஜரிகையாங்கிறது பார்த்த உடனே தெரிஞ்சுடும். கடப்பா கல்லுல ஜரிகையை தேய்ச்சா, வெள்ளையா வரும். அப்படி வந்தா... அது நல்ல ஜரிகை. சிவப்பா வந்தா, செம்பு மாதிரியான வேற பொருட்கள் தயாரிச்ச ஜரிகைனு தெரிஞ்சுக்கலாம். வீட்டுல கூட நீங்களே சோதிச்சிப் பார்க்கலாம்'' என்றார்.

கையில் பணத்தோடு புன்னகை மாறாமல் வெளியில் வந்த சாவித்திரியிடம் பேசியபோது, ''பழைய புடவைகள கடைகளுக்கு கொண்டு போனா... பெருசா யாரும் மதிக்கறதில்ல. எப்பவாச்சும் எக்சேஞ்ச் ஸ்கீம் போடறப்ப எடுத்துக்கறாங்க. அதுலயும் சிலர் புதுப் புடவையோட விலையைக் கூட்டி வெச்சு ஏமாத்திடாறாங்க. அதையெல்லாம் பார்க்கறப்ப... இந்த மாதிரி கைமேல பணத்தை வாங்கறது திருப்தியாத்தான் இருக்கு'' என்று சொன்னார்.

அது சரி... பழைய புடவையிலிருக்கும் வெள்ளி ஜரிகையின் மதிப்புக்கு ஏற்ப பணம் கிடைக்கிறதா என்பதுதானே முக்கியம்?

இதைப் பற்றி சென்னை சில்க்ஸின் பட்டுப் பிரிவில் உள்ளவர்களிடம் கேட்டபோது... ''உங்கள் கையில் 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஒரு பட்டுப் புடவை இருக்கிறது. அதில் 18 காரட் வெள்ளி ஜரிகை (டெஸ்டர்ட் ஜரிகை) பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், அதில் 40% அளவுக்குதான் ஒரிஜினல் வெள்ளி சேர்க்கப்பட்டிருக்கும். அந்த வெள்ளியின் எடை எவ்வளவு இருக்கிறதோ... அதற்கு தக்கவாறுதான் விலை இருக்கும். அதாவது 100 கிராம் ஜரிகை இருக்கிறதென்றால், ஒரிஜினல் வெள்ளி 40 கிராம்தான். இன்றைய நிலவரப்படி அதன் மதிப்பு சுமார் ஆயிரம் ரூபாய்.

இதுவே ஒரிஜினல் வெள்ளி ஜரிகை என்றால், அதன் மதிப்பு தனி, ஆனால், பெரும்பாலும் 18 காரட் ஜரிகைதான் பயன்படுத்தப்படுகிறது. இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்துதான் உங்களுக்குப் பணம் கொடுப்பார்கள்.

டெஸ்டர்ட் ஜரிகையா... ஒரிஜினல் ஜரிகையா என்பதையெல்லாம் கண்டுபிடித்து, அது எவ்வளவு எடை இருக்கும் என்பதையும் விசாரித்து தெரிந்து கொண்டு விற்பனை செய்யும்போது உங்களுக்கு கிடைத்த தொகை சரியானதுதானா என்பதை நீங்கள் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியும்'' என்று சொன்னார்கள்.

நிமிர வைத்த ஆர்வம் !

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !

சிவில் இன்ஜினீயருக்கான தேர்வில் அவன் தோல்வி அடைந்துவிட்டான். ஆனால், கட்டட அமைப்புகள் பற்றிய ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. பிரமாண்டமான, அதேசமயம் எடை குறைந்த கட்டட அமைப்புகளை எப்படி உருவாக்குவது என்று அதிகம் ஆராய்ந்தான். மனிதனின் கால் எலும்புகள் வலுவாகவும் அதேசமயம், எடையில்லாமலும் இருப்பதை அறிந்து, அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கட்டடங்களை உருவாக்கி வெற்றி கண்டான். அவர்... பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் இன்றைக்கும் உலக அதிசயமாக இருக்கும் ஈஃபிள் டவரை வடிவமைத்த கஸ்டேவ் ஈஃபிள்!

பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !
 
பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !
பணமாகும் பழைய பட்டுப் புடவைகள் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism