Published:Updated:

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

Published:Updated:

ம.பிரியதர்ஷினி
படம் து.மாரியப்பன்
'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !
'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்மென்ட்ஸ் சாஃப்ட்வேர்...பிஸினஸ்...வங்கி...

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !'

''வேலை கிடைக்கிறது பெரிய விஷயமில்ல... நல்ல கம்பெனியில கிடைக்கணுமே..."

- இங்கு எல்லோரின் வேண்டுதலும் இதுதான்!

அப்படி, சமுதாயத்தில் 'பளிச்' முத்திரையுடன், மரியாதையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் டாப் மோஸ்ட் கம்பெனிகள் பலவும் இன்றைய இளைய சமுதாயத்தின் கனவில் வந்து மின்னல் அடித்துக் கொண்டே இருக்கும். ஆனால், அவற்றுக்குள் எந்த ரூட்டில் நுழைவது என்பதுதான் சவாலான விஷயம். அத்தகைய நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான பணியாட்களைத் தேர்வு செய்யும் முறைகளை அறிந்து வைத்துக் கொள்வது, வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் பலம் தரும்.

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

இதற்கு முக்கிய தேவை... 'ஹெச்.ஆர்'. எனப்படும் ஹியூமன் ரிசோர்சஸ் (Human Resources) பொது இலக்கணங்கள். அதைப்பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் இந்தியாவில் முதன்மையான இடத்திலிருக்கும் தனியார் நிறுவனங்களில் கார்மென்ட்ஸ் துறை, சாஃப்ட்வேர் துறை, தொழிற் துறை, வங்கித் துறை என நான்கு துறைகளைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள்.

உஷா பெரியசாமி, வைஸ் பிரசிடென்ட், கிளாஸிக் போலோ கார்மென்ட்ஸ் - ராயல் கிளாஸிக் குரூப்ஸ், கோவை.

''பொதுவாக எல்லா நிறுவனங்களிலுமே விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் திறமை மட்டுமல்ல, அவர்களின் பொதுஅறிவு, விருப்பங்கள், பணி அனுபவங் கள் என்று பல விஷயங்களும் ஆராயப்படும். ஃபிரெஷ் கேண்டிடேட் எனில், அவருக்குத் துறை சார்பான டெக்னிக்கல் அறிவு அவ்வளவாக இருக்காது என்பதால், அதிலிருந்து அவரிடம் அதிக கேள்விகள் கேட்பதைவிட, ஒரு விஷயம் தொடர்பான அவரின் அணுகுமுறையைத் தெரிந்துகொள்ள ஒரு சிச்சுவேஷனை சொல்லி, அதை அவர் எவ்வாறு கையாள்வார் என்பதைக் கேட்போம். நாங்கள் கொடுத்த நிமிடங்களுக்குள் சிந்தித்து, வழக்கமான பதில்கள் தவிர்த்து... புதுவிதமாக, அதேசமயம் பிராக்டிகலாக அந்தச் சூழலை அணுகுபவர்களையே தேர்ந்தெடுப்போம். முக்கியமாக, தனக்குத் தெரிந்த விஷயங்களைத் தடுமாற்றமின்றிச் சொல்பவர்களும், தெரியாததை 'ஸாரி...' என்று ஒப்புக்கொள்பவர்களும், நம்பிக்கைக்குரியவர்கள் ஆவார்கள்.

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

பஞ்சு தொடங்கி, அதை உடையாக்குவது வரை எங்கள் கார்மென்ட் தொழிலில் டிரான்ஸ்போர்ட், டெஸ்பாட்ச், நிட்டிங், அக்கவுன்ட்ஸ், ஃபைனான்ஸ், லாஜிஸ்டிக், டிசைனிங், பிராண்டிங் என பல துறைகளும் இயங்குவதால், அதற்குத் தேவையான பணியாட்களை பத்திரிகை விளம்பரம், வேலை வாய்ப்பு முகாம் போன்றவற்றின் மூலம் நியமிக்கிறோம். 5,000 ரூபாயில் ஆரம்பித்து 60,000 ரூபாய் வரை சம்பளம் உள்ள பணிகளுக்கு ஆட்களை எடுக்கிறோம்."

ஆர்.ராம்குமார், வைஸ்-பிரசிடென்ட், காக்னிசன்ட் டெக்னாலஜிஸ், சென்னை.

''சாஃப்ட்வேர் நிறுவனங்கள், பெரும்பாலும் கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலம் அதிக பணியாட்களை வேலையில் அமர்த்துவார்கள். நாங்களும் அப்படியே. கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு மாணவரின் பிராப்ளம் சால்விங் எபிலிட்டியை முக்கியத் தகுதியாகப் பார்ப்போம். பொதுவாக, வேலை என்பது ஒரு கூட்டு முயற்சிதான். எனவே, மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் ஒரு டீம் பிளேயராக அவரின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்பதை அறிய முற்படுவோம். அதேபோல, சிங்கிள் ப்ராஜெக்ட்களை விட, பலருடன் இணைந்து 'குரூப் ப்ராஜெக்ட்' உருவாக்கிய மாணவரே எங்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருப்பார்.

படிப்பு முடித்த கையோடு எங்கள் நிறுவனத்துக்கு இன்ஜினீயர் கிரேடில் தேர்வாகும் மாணவர்களுக்கு, ஆண்டு வருமானம் மூன்று லட்ச ரூபாய் என்று நிர்ணயிக்கப்படும். ஆரம்பத்தில் 'புரோக்ராமரா'க பணியில் சேர்பவர்கள்... அடுத்தடுத்த கட்டங்களில் மாடியூல் (ப்ராஜக்டின் ஒரு பகுதிக்கான) லீடர், டீம் லீடர், ப்ராஜெக்ட் லீடர் என அவர்களின் திறமையைப் பொறுத்து உயர்வார்கள்.

எங்கள் கம்பெனிக்குத் தேவைப்படுபவர்கள்... இன்ஜினீயரிங், எம்.பி.ஏ. மற்றும் மல்டிமீடியா டிசைனிங் படித்தவர்கள்தான் என்றாலும்... லாயர், டாக்டர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், டென்டிஸ்ட் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களையும், அவரவர் துறை சார்ந்த பி.பீ.ஓ. வேலைகளுக்காக எடுத்திருக்கிறோம். பி.பீ.ஓ. துறையிலும் எங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதால், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!"

ஆப்ரகாம், வைஸ் பிரசிடென்ட் கார்ப்பரேட் ஹெச்.ஆர்

கெவின் கேர், சென்னை.

''நுகர்வோரை குறிவைத்து இயங்கும் எந்த நிறுவனமும், தங்கள் பணியாளர்களிடம் எதிர்பார்க்கும் முக்கிய தகுதி, ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர்களுக்கு எந்த அளவுக்கு திறமை இருக்கிறது என்பதைத்தான். இதில் அவர்களின் உழைப்பு, கிரியேட்டிவிட்டி, கஸ்டமர்களின் பல்ஸ் பார்க்கும் வித்தை ஆகியவை முக்கியமாகக் கவனிக்கப்படும்.

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

90% மதிப்பெண்கள் வைத்திருந்தும், 'எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்' (படிப்பு தவிர விளையாட்டு, பொது அறிவு, கலை, இலக்கியம் போன்றவற்றில் உள்ள ஈடுபாடு) எதுவும் இல்லாதவர்களை நாங்கள் பரிசீலிப்பதில்லை. ஏனெனில், எங்கள் பணியாளர் படிப்பாளி என்பதைவிட, பொறுப்பாளியாக, மல்டி பர்சனாலிட்டியாக இருக்கவேண்டும்.

ஷாம்பூ, ஜூஸ், ரெஸ்டாரன்ட், பியூட்டி க்ரீம், பியூட்டி சலூன் என்று ஏகப்பட்ட துறைகளில் விரிந்து கிடக்கும் எங்கள் நிறுவனத்துக்கு, எல்லா தரப்பு பணியாட்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சொல்லப்போனால், இப்போது எங்களுக்கு மோஸ்ட் வான்டட், 'வெட்னரி டாக்டர்ஸ்!' ஆம்... சமீபத்தில் பால் உற்பத்தியிலும் கால் பதித்திருப்பதால் விவசாயிகளிடம் தொடர்பு கொள்வதற்கான மீடியேட்டர்ஸ், பரிசோதனைகளுக்கு வெட்னரி டாக்டர்ஸ் தேவையாக இருக்கிறார்கள்.

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !

எங்கள் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் பியூட்டி சலூன்களுக்கு, ஹேர் கட்டிங் செய்ய ஆட்கள் தேவையாக இருக்கிறார்கள். இதற்காக எங்கள் அகாடமி சார்பிலேயே பயிற்சி அளித்து பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு சம்பளம் 6,000 முதல் 60,000 ரூபாய் வரை! ஆனால், இந்த வேலைக்கு பலரும் முன்வருவதில்லை என்பது, வருத்தத்துக்குரியது."

மைதிலி ராவ், கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மும்பை.

''எங்கள் வங்கிக்கான பணியாட்கள் அனைவரும், 'மணிப்பால் அகாடமி'யோடு சேர்ந்து நாங்கள் உருவாக்கிய ஒரு வருட டிரெய்னிங்கை முடித்த பிறகே, தகுதியின் அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவார்கள். மணிப்பால் மற்றும் ஹைதராபத்தில் உள்ள கேம்பஸில் தங்கிப் படிக்க வேண்டும். இதில் சேர நினைப்பவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 'போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் இன்ஷ¨ரன்ஸ்' (பி.ஓ. புரோக்ராம்ஸ்) எனும் இப்பயிற்சியை மேற்கொள்ளும்போது முதல் ஒன்பது மாதங்களுக்கு 2,500 ரூபாய் ஸ்டைபண்ட் வழங்கப்படும். அடுத்து எங்களின் ஏதாவது ஒரு வங்கியில் மூன்று மாதங்களுக்கு இன்டென்ஷிப்பாக பணியாற்ற வேண்டும். அதற்கு மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும். படித்து முடித்தவுடன் எங்கள் வங்கியிலேயே ஆரம்ப சம்பளமாக ஆண்டுக்கு 3.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். இவர்கள் அசிஸ்டென்ட் மேனேஜர் - பி பேண்ட் என்கிற கேட்டகிரியில் வருவார்கள். இவர்களுக்கு எல்லாம் எங்கள் வங்கியில் கார்ப்பரேட் பேங்கிங், பிரைவேட் பேங்கிங், ரிஸ்க் அண்ட் கிரெடிட் மேனேஜ்மென்ட், டிரஷரி, பிராஞ்ச் பேங்கிங், ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட் போன்ற இடங்களுக்கு தேவைகள் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்! இந்தப் பயிற்சிக்கூடங்களைத் தவிர மிகக் குறைந்த அளவிலேயே வெளியிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்கிறோம்."

என்ன... உங்களுடைய சி.வி-யை (CV-Curriculum vitae) ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா...?

-ம.பிரியதர்ஷினி

'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !
 
'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !
'டாப் மோஸ்ட் கம்பெனிகளின் வேலைகளை வசப்படுத்தலாம் வாங்க !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism