Published:Updated:

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

Published:Updated:

ரேவதி படம் என்.விவேக்
தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்
தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்"

விளக்குகிறார் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர்

"கால் காசா இருந்தாலும் கவர்மென்ட்டு காசு. அரைக் காசா இருந்தாலும் அரசாங்க காசு’னு சொல்வாங்க. அதனால, அரசாங்க வேலையில இருக்கற வரனாவே பார்த்து கொடுங்க..."

"ஏம்மா... பிரைவேட் கம்பெனியிலயும்தான் இப்பல்லாம் நல்ல சம்பளம் கிடைக்குதே!"

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

"சம்பளம் இருக்கட்டும்... அரசு உத்தியோகத்துலதான் சாதாரண ஊழியரா சேர்ந்து, 30 வருஷ உழைப்புல உயர் பதவிய அடைஞ்சு, ரிடையர்டு ஆகிறவரைக்கும் வேலைக்கு உத்திரவாதம் கிடைக்கும். அதோட, பத்து மணிக்கு ஆபீஸ§க்குப் போனா... ஆறு மணிக்குள்ள வீட்டுக்குத் திரும்பிடலாம். வயசான காலத்துல பென்ஷனை வெச்சே பொழைச்சுக்கலாம்..."

- ஜாதக பரிவர்த்தனை சென்டர்களில் இதுபோன்ற உரையாடல்களை அதிகம் கேட்க முடியும்.

"ஆம்! என்னதான் தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சம்பளங்களில் கூவினாலும், அரசாங்க உத்தியோகத்துக்கு இருக்கும் மவுசு குறையவில்லை!" என்று பெருமிதத்துடன் ஆரம்பித்த தமிழக வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன், அரசு வேலை வாய்ப்புத் துறையின் அடிப்படை தகவல்கள், செயல்பாடுகள் குறித்த முக்கிய அம்சங்களை நமக்காக விளக்கினார்.

"தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டவாரியாக 32 வேலை வாய்ப்பு அலுவலகங்கள் செயல்படுகின்றன. தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்னையில் மட்டுமே இருந்தது. தற்போது தேவையைக் கருதி அதன் கிளையினை மதுரையில் துவங்கியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் 61,50,704 நபர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 3,50,000 பேருக்கு வேலை தந்திருக்கிறோம்" என்று பட்டியலிட்ட அமைச்சர், பணி நியமனங்கள் பற்றித் தொடர்ந்தார்.

"அரசு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும்போது எந்தெந்த துறைகளில் எத்தனை நபர்கள் தேவை, பதவி, தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை அந்தந்த துறைகளிலிருந்து எங்களுக்கு வரும். ஏதேனும் ஒரு அரசுத்துறைக்கு மட்டும் 50 நபர்கள் உடனடியாக தேவைப்பட்டால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படும். அதுவே எல்லாத் துறையிலிருந்தும் 10,000 நபர்கள் என்று மொத்தமாக தேவைப்படும்போது... வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் டி.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி. மூலமாகவும் ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள்.

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

இதைத்தவிர நோக்கியா, ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற சுமார் 60 தனியார் நிறுவனங்களுடன் வேலை வாய்ப்புத்துறை இணைந்து வேலைக்கான நேரடி இன்டர்வியூவை அவ்வப்போது நடத்தி வருகிறது. சென்ற முறை இதன் மூலம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இப்படி பணி நியமனங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

இப்போது எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புத் துறை மூலமாக இசை, ஓவியம், டெய்லரிங் போன்ற ‘ஸ்பெஷல் டீச்சர்’ வேலைக்கான பணி நியமனமும் நடந்து கொண்டிருக்கிறது. பணி நியமன உத்தரவு பற்றிய விவரங்களை ஆன்லைன் (new.tn.gov.in) மூலம் தெரிந்து கொள்ளலாம்!" என்று அலுவலக செயல்பாடுகளை புள்ளிவிவரங்களுடன் அள்ளி வழங்கினார் அமைச்சர்!

அதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகம் தொடர்பான சில முக்கிய குறிப்புகளைத் தந்தனர், அத்துறையின் அதிகாரிகள். அவை...

பதிவு செய்தல் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக்கல்வித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அதற்கு ரேஷன் கார்டு முக்கியம். படிப்புத் தொடர்பாக எதையெல்லாம் பதிவு செய்ய இருக்கின்றோமோ அந்தச் சான்றிதழ்களின் நகல்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும். உடல் ஊனமுற்றோராக இருந்தால், மாவட்ட ஊனமுற்றோர் துறை அதிகாரியிடமிருந்து சான்றிதழ் பெற்று இணைத்தல் வேண்டும். வயது வரம்பு இல்லை.

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்

புதுப்பித்தல் மூன்று வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் பதிவினை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கா விட்டால், சீனியாரிட்டி தகுதியை இழக்க நேரிடும். பதிவு செய்யும்போது 10-ம் வகுப்பு படித்தவராக இருந்து, அடுத்த 3 வருடத்தில் மேற்படிப்பு படித்திருந்தால், அந்தச் சான்றிதழ் நகல்களுடன் புதுப்பித்தல் வேண்டும். முறையாக புதுப்பித்து, சீனியாரிட்டியுடன் இருக்கும் ஒருவரின் பெயர் வேலைக்கான பரிந்துரையில் விடுபட்டு போயிருந்தால், அவர் பதிவு செய்திருக்கும் அலுவலகத்துக்கு நேரில் சென்று, விளக்கம் கேட்கலாம்.

உதவித்தொகை படித்து முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மூன்று ஆண்டு காலத்துக்கு மாத உதவித் தொகை உண்டு. பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.150, +2 படித்தவர்களுக்கு ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. இதைப் பெற, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதிவில் இருக்கவேண்டும்.

பயிற்சியளித்தல் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், கம்ப்யூட்டர், நேர்காணலுக்கான திறனை வளர்த்தல், மற்றும் ரெடிமேட் ஆடை, பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரித்தல் போன்ற பலதரப்பட்ட பயிற்சிகள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. தொழிற் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினருக்கும், மற்றவர்களுக்கு தகுதியின் அடிப்படையிலும் பயிற்சி காலத்தில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்
 
தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்
தனியார்துறை வேலைகளையும் நாங்கள் தேடித் தருகிறோம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism