Published:Updated:

நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !

நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !

நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !

நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !

Published:Updated:

 
ஜி.பழனிச்சாமி
நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !
நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் - வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !"

எச்சரிக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்

"இன்றைக்கு நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கத்திரிக்காய் வெஜிடேரியன். ஆனால், நாளை சாப்பிடப்போகும் கத்திரிக்காய்... நான்-வெஜிடேரியனாக இருக்கலாம்!"

- இப்படி குண்டு போடுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்

நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !

ஆராய்ச்சி என்ற ஜோரில், உணவுப் பயிர்களின் விதைகளில்கூட வேறொரு உயிரியின் ஜீன்களைப் புகுத்தி பி.டி. ரகங்கள் (மரபணு மாற்று தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விதையில் பயிரிடப்பட்டது) என்ற பெயரில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், அரிசி என்று பலவற்றையும் கண்டுபிடிக்கும் வேலைகள் அமெரிக்காவில் நடக்கின்றன. அதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்கும் களமாக... கோடி கோடியாக மக்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இந்தியாவைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அதற்கு இங்கிருக்கும் அதிகார வர்க்கமும் துணைபோய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாடு முழுக்கவே பி.டி. ரகங்களுக்கு எதிராக பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டிருக்கிறார் ஈஷா யோக மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

தற்போது, இந்தப் போரில் ஒரு தற்காலிக வெற்றியாக, 'பி.டி. ரக கத்திரியைப் பயிரிட தற்போதைக்கு அனுமதி இல்லைÕ என்று மத்திய அரசு கூறியிருப்பது பெரும்பாலானவர்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.

கோயம்புத்தூர் அருகேயுள்ள வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் வரிசையாக ஆண்கள், பெண்கள் என்று மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. அவர்களையெல்லாம் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு நம்மிடம் பேசிய சத்குரு, ''நம் நாட்டில் ஆயிரத்துக்கும் மேலான நாட்டுக் கத்திரி ரகங்கள் இருக்கின்றன. கடந்த 4,000 ஆண்டுகளாக இங்கே கத்திரி விவசாயம் சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ரக கத்திரிக்காய் பயன்பாட்டில் இருக்கிறது. இவற்றில் அதிக விளைச்சல் கொடுக்கும் ரகங்களும் இருக்கின்றன. மண்ணுக்கேற்றவாறு இயற்கையே அதையெல்லாம் கொடுத்திருக்கிறது. அதையெல்லாம் பாதுகாத்து தற்போதும் பயிரிட்டு வருகின்றனர் விவசாயிகள். அந்தக் காய்களுக்கு இருக்கும் ருசி காரணமாக நம் மக்கள் பலரும் அதை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, வேறு உயிரியின் ஜீன்கள் மூலம் உருவாக்கப்படும் மரபணு கத்திரிக்கு அனுமதி தரவேண்டிய தேவை என்ன இருக்கிறது? தாவரத்தில் வேறு ஒரு உயிரியின் புரதத்தைப் புகுத்தினால், அது எப்படி வெஜிடேரியனாக இருக்க முடியும். அது நான்-வெஜிடேரியன் கத்திரிக்காயாக அல்லவா மாறிவிடும். இது நம்முடைய நாட்டின் அடிநாதமான சைவம் என்பதையே சிதைக்கும் முயற்சி அல்லவா?

மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதித்தால், மண்ணை மலடாக்குவதோடு... மனிதகுலத்துக்கே கேடாக அமையும். மரபணு மாற்றுக் கத்திரியை புழு, பூச்சிகள்கூட சாப்பிடாது என்கிறார்கள். அப்படிப்பட்ட விஷ கத்திரிக்காயை மக்கள் எப்படி சாப்பிட முடியும்?

மண், சுற்றுச்சூழல், ஆரோக்கியம் என்று எல்லாவற்றையும் கெடுக்கக்கூடிய இந்த பி.டி. கத்திரியை இங்கே பயிரிட ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் வியாபார நோக்கம் இருக்கிறது. இதை அனுமதித்தால், நாட்டுரக விதைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விடும். இதனால், முதலில் விவசாயிகள் அடிமைப்படுத்தப்படுவார்கள். அதன் தொடர்விளைவாக நுகர்வோர்களான நாமெல்லாம் பாதிக்கப்படுவோம். மக்களின் உணவு பாதுகாப்புதான் ஒரு அரசாங்கத்தால் மிகமிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அத்தகைய உணவுப் பாதுகாப்பை பி.டி. ரக விதைகள் நிச்சயமாக அழித்துவிடும்.

உலக அளவிலேயே பல்வேறு துறையிலிருக்கும் மெஜாரிட்டியான விஞ்ஞானிகள் இதை எதிர்த்து வருகிறார்கள். சுகாதார ஆய்வு சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அந்த ரகத்தைப் புறந்தள்ளுகிறார்கள். ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில் நாம் மட்டும் நம்முடைய மக்களின் வாழ்க்கையோடு விளையாடலாமா?

ஆராய்ச்சி என்பது வேறு... அதைச் சந்தைபடுத்துதல் என்பது வேறு. விஞ்ஞானிகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் ஆண்டுக் கணக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கலாம். ஆனால், சந்தைப்படுத்தும்போது மக்கள் நலனை மட்டும்தான் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று சொன்ன ஜக்கி,

''பி.டி. ரக விதைகள், மக்களின் உணவு விஷயத்தில் விளையாடுவதாகவே இருக்கும் என்கிற நம்முடைய கருத்தை மத்திய - மாநில அரசுகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறோம்.

110 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு கிடைக்க, இயற்கை வளம் மாசுபடாமல் இருக்க இயற்கை வழியே சிறந்த வழி என்பதை அவர்களிடம் எடுத்து வைத்திருக்கிறோம். நல்லதே நடக்கும்" என்று ஆசிகள் கூறி அனுப்பி வைத்தார்.

நாம் விரும்புவதும் நல்லதைத்தானே!

நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !
 
நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !
நான் -வெஜ் கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism