Published:Updated:

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!

Published:Updated:

 

லாவண்யா,இரா.மன்னர்மன்னன்
படங்கள் து.மாரியப்பன்

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!
வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட்நோட்டீஸ் வலை'!

உஷார்... உஷார்... உஷார்...

'டென்த், ப்ளஸ் டூ படித்தவரா? மாதம் ஆறாயிரம் சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது!'

'கணினி பரிச்சயம் உள்ளவரா? வீட்டில் இருந்தே வேலை செய்து மாதம் பத்தாயிரம் சம்பாதிக்க அரிய வாய்ப்பு!'

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!

'உங்களிடம் ஒரு மொபைல் போன் உள்ளதா? ஐந்தாயிரம் சம்பளத்தில் காத்திருக்கிறது வேலை!'

- பஸ் ஸ்டாண்ட், பேருந்து, புறநகர் ரயில், பொதுக் கழிப்பறை என்று திரும்பிய பக்கமெல்லாம் இத்தகைய 'வேலைவாய்ப்பு (!) விளம்பரங்கள்' டாலடிப்பதைக் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள்.

வேலை தேடி வெந்துருகிக் கொண்டிருப்பவர்களையும், ஏற்கெனவே ஓரளவு சம்பளத்துடன் உருப்படியான வேலையில் செட்டில் ஆகியிருப்பவர்களையும் குறிவைத்து புறப்பட்டு வரும் இத்தகைய விளம்பரங்களில் எத்தனை உண்மையானவை என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதேபோல... இதன் மூலம் வேலை பெற்றவர்களின் விவரங்கள், தேடினாலும் தெரிவதற்கில்லை. ஆனால், இத்தகைய விளம்பரங்களினால் ஏமாந்தவர்களின் சதவிகிதம், பெரு நகரங்களில் எல்லாம் பெருகிக்கிடக்கிறது.

சில சாம்பிள்கள் இங்கே... உங்களை உஷார்படுத்த!

முதலில் வருவது நம்முடைய நேரடி அனுபவம்...

'மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்...' என சென்னையின் ஒரு பஸ் ஸ்டாப்பில் விநியோகிக்கப்பட்ட அந்த பிட் நோட்டீஸில் இருந்த நம்பருக்கு போட்டோம் போன்.

''பேர் என்ன? என்ன படிச்சிருக்கீங்க? பார்ட் டைம் ஜாப்-ஆ, ஃபுல் டைம் ஜாப்-ஆ... எதை எதிர்பார்க்கறீங்க?''

- வரிசை கட்டிய கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாகப் பதில் சொன்னோம். இறுதியாக, 'உங்களுக்கு ஃபைனான்ஸ் பிரிவுல வேலை தர்றோம். நேர்ல வாங்க' என்றார்கள். சென்றோம். ஒரு லாட்ஜ் அறை அது. ரூமுக்கு வெளியே ஐந்தாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என பணமாகவும், காசோலைகளாவும் கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள் இளைஞர்கள் சிலர்.

உள்ளே சென்ற நம்மிடம், ''உங்கள எங்க பார்ட்னரா சேர்த்துக்கறோம். எங்க புராடக்டோட ஷேர் கொஞ்சத்த நீங்க வாங்க வேண்டி இருக்கும். 10,000, 20,000 ஷேர் வாங்கினா.. லாபத்துல உங்களுக்கு பங்கு வந்துகிட்டே இருக்கும்' என்று நயமாகப் பேசினார் ஒரு நபர்.

''என்ன புராடக்ட்? பார்ட்னர்னா இதுல என்னோட வேலை என்ன? பணம் எப்படி என் கைக்கு வரும்... இதையெல்லாம் சொல்லுங்க...'' என்றோம். புருவத்தை உயர்த்திப் பார்த்தவர், ''அடுத்த சண்டே இங்க எங்களோட கான்ஃபரன்ஸ் இருக்கு... வாங்க. உங்களோட எல்லா சந்தேகமும் தீர்ந்து போகும்'' என்றார்.

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!

அடுத்த சண்டே, ''ரூம் வெக்கேட் பண்ணிட்டாங்க சார்'' என்றர் லாட்ஜ் பாய்! ஏற்கெனவே எட்டு இளைஞர்கள் ஏமாற்றம், ஆத்திரத்துடன் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். நம்பரை டயல் செய்தோம். ஸ்விட்ச்டு ஆஃப்.

''பஸ் ஸ்டாண்டுல எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்த பையன மறுபடியும் பார்க்க... கப்புனு அமுக்கிட்டோம். 'நூறு ரூபா கொடுத்தா... நோட்டீஸ் விநியோகம் செய்வோம். வேற விவரமெல்லாம் தெரியாது சார்'னு அப்பாவியா சொன்னான். அதுக்குப் பிறகு அந்த ஆளுங்கள தேடி அலைஞ்சோம். போலீஸ்ல புகார் பண்ணோம். ஒண்ணும் பிரயோஜனம் இல்ல!'

- அலுப்புடன் சொன்னார் ஒரு 'அனுபவஸ்தர்'.

இப்படியாக ஒரு 'மோசடி' கதை நாம் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ§டனேயே முடிந்தது - பைசா செலவில்லா மல்! ஆனால், இதுபோன்றவர்களிடம் ஆயிரம், பத்தாயிரம் என்று அள்ளிக் கொடுத்து ஏமாந்தவர்களின் கதைகள் ஏரளமாகவே இருக்கின்றன.

'உங்களுக்கு வேலை வேண்டுமா? முழு நேரம் 10,000 ரூபாய், பகுதி நேரம் 5,000. உடனே தொடர்பு கொள்ளுங்கள்...' இப்படி ஒரு விளம்பரம். தொடர்ந்து, இன்டர்வியூவுக்குச் சென்றாள் அந்தக் கல்லூரி மாணவி.

''புதியவகை பெர்ஃபியூம் ஒன்றை விற்க உள்ளோம். எங்களோட நீங்களும் இணையணும்னா, முதல்ல 7,000 கொடுத்து இந்த பெர்ஃபியூம் பேக்கேஜை வாங்கணும். அடுத்து உங்களுக்குத் தெரிஞ்ச 2 பேரை வாங்க வைக்கணும். அவுங்க ஆளுக்கு 2 பேரை வாங்க வைப்பாங்க. ஆள் சேரச் சேர உங்க அக்கவுன்ட்ல பணம் சேர்ந்துட்டே இருக்கும்...'' என்று வலை விரித்திருக்கிறார்கள்.

அடுத்த நாள், வீட்டிலிருந்த வளையலை அடமானம் வைத்து காசோடு சென்றவர்... பிறகு, தன் நண்பர்களையும் அதில் சேர்த்து விட்டிருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து, ''எப்போ சார் பணம் கொடுப்பீங்க..?'' என்று இவர் போன் செய்ய, ''உங்க அக்கவுன்ட்ல 14,000 ரூபாய் பணம் இருக்கு, 30 பேர் சேர்ந்த பின்னாடிதான் 50,000 ரூபாயை மொத்தப் பணமா தருவோம்!'' என்றிருக்கிறார்கள். சில நாளில் இவரது 'செயின்'-ல் உள்ள ஒருவர் ''அவுங்கள காணோம்!'' என்று பதறி வந்து நிற்க, அதிர்ந்து போய் தேடிய அந்த இளைஞிக்கு கிடைத்தது ஏமாற்றமும் நட்பு வட்டத்தில் கெட்ட பேரும்தான்!

''உங்களிடம் செல்போன் இருக்கிறதா..? உங்களுக்கான வேலை எங்களிடம் இருக்கிறது!'

- 'இந்த செல்போனை வச்சுட்டு வெட்டியா இருக்கற நமக்கு, இப்படி ஒரு வாய்ப்பா..?' என்று அந்த 'எம்ப்ளாயரி'டம் போனில் தொடர்புகொண்டு, நேரில் சென்றிருக்கிறார் அந்த நடுத்தர வயதுப் பெண்.

''நாங்க ஒரு சைக்யாட்ரிஸ்டோட டை-அப் வெச்சுருக்கோம். தனிமையால மன உளைச்சலுக்கு ஆளான அவரோட பேஷன்ட்களுக்கு, அவங்க விருப்பப்படறப்போ தங்களோட எண்ணங்களை பகிர்ந்துக்க ஒரு ஆள் வேணும். அந்த 'கவுன்சிலிங் மெம்பர்'தான் நீங்க. பேஷன்ட்டுகளுக்கு உங்களோட மொபைல் நம்பரைக் கொடுத்துடுவோம். அவங்கள தனிமையிலஇருந்து மீட்க, அவங்க கால் பண்ணும்போதெல்லாம் தன்னம்பிக்கை தர்ற மாதிரி பேசுறதுதான் உங்க வேலை!'' என்றவர்கள், ''மாசம் ரெண்டாயிரம் சம்பளம். ஆனா, திடீர்னு நீங்க மொபைல் நம்பரை மாத்திட்டா? பிரச்னையாயிடும். அதனால, எட்டாயிரம் ரூபா டெபாஸிட் கட்டணும்'' என்றிருக்கிறார்கள்.

அந்தப் பெண்ணின் எண்ணுக்கு வரத்தொடங்கிய போன் கால்கள், சில வாரங்களில் ஆபாச அழைப்புகளாக மாறியிருக்கின்றன. 'முதலாளி'க்கு போன் செய்தால், ஸ்விட்ச்டு ஆஃப்!

கட்டிய டெபாசிட் பணமும் கிடைக்கப் பெறாமல், வரும் ஆபாச போன் கால்களையும் சமாளிக்க முடியாமல் கடைசியாக தன் நம்பரை மாற்றிவிட்டார் அந்தப் பெண்.

'பெண்கள் வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டர் மூலம் இருபதாயிரம் சம்பாதிக்கலாம்...'

- மார்கெட்டிங் வேலை பார்க்கும் தன் கணவர் மாதத்தில் பல நாட்கள் வெளியூரில் இருப்பதால், வீட்டில் தனியாக இருக்கும் தனக்கும் கம்ப்யூட்டருக்கும் நல்ல வாய்ப்பு என்று நோட்டீஸில் இருந்த நம்பருக்கு தொலைபேசியிருக்கிறார் அந்தப் பெண். 'கம்பெனியின் பிரதிநிதி' என்று சொல்லிக்கொண்டு அவர் வீட்டுக்கே வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண், ''இதுக்கு நீங்க ஒரு வெப்சைட் திறக்கணும். அது எதைப்பற்றியும் இருக்கலாம். அந்த வெப்சைட்ல எங்க நிறுவனத்தோட விளம்பரம் தருவோம். உங்க வெப்சைட்டுக்கு எத்தனை பார்வையாளர்கள் வர்றாங்களோ, அவ்வளவு கமிஷன் உங்களுக்கு. பதிவுக் கட்டணமா நீங்க ஐயாயிரம் கட்டணும்'' என்று அவர் பேச, அதன்படியே செய்திருக்கிறார் இந்தப் பெண்.

முதல் வாரம் அவர் வெப்சைட்டில் ஆடைகள் பற்றிய விளம்பரம் வர, அவரும் தன் தோழிகளுக்கு எல்லாம் தகவலைச் சொல்லி, தன் வெப்சைட்டைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்குப்பின் அதில் ஒரே ஆபாச விளம்பரம்தான். இடையே, அவருக்கு சொல்லப்பட்ட கமிஷனும் நின்றுபோக, விஷயத்தை தன் கணவரிடம் சொல்லியிருக்கிறார் அந்தப் பெண். அதிர்ந்த அவர், இன்டர்நெட் இணைப்பையே நிறுத்திவிட்டார்.

இந்த ஏமாற்றங்களுக்கெல்லாம் தூண்டில் போடும், பேருந்து, ரயில்களில் ஒட்டப்படும் 'நகரும் சுவரொட்டி விளம்பரங்க'ளை, 'டிரான்சிஸ்ட் மீடியா' என்கின்றனர். அவசர அவசரமாக நகரும் பயணிகளிடம் மிகச் சுருக்கமாக தகவலைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டவை என்பதால், இதில் தகவல் குறைவாகவே இருக்கும். இந்த அம்சமே ஏமாற்ற நினைக்கும் மோசடிக்காரர்களுக்கு பெரிய ப்ளஸ் ஆகி கிடக்கிறது - அவர்களெல்லாம் மாதம் ஆயிரங்கள், லட்சங்கள் என்று சம்பாதிக்க..!

நாம்தான் ஆரம்பத்திலேயே உஷாராக இருக்க வேண்டும், கடைசியில் போலீஸிடம் போய் புலம்பிக் கொண்டிருக்காமல்!

வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!
 
வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!
வேலை தேடுவோரை குறி வைக்கும் 'பிட் நோட்டீஸ் வலை '!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism