Published:Updated:

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

Published:Updated:

நாச்சியாள்
ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?
ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"அவுட்சோர்ஸிங் சலுகைகள் கட்..."

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

ஜனவரி மாதம்... சந்தோஷமும் உற்சாகமும் பொங்கும் வருடத்தின் முதல் மாதம். ஆனால், 2010 ஜனவரி இறுதி வாரத்தில், ''அமெரிக்க வேலைகளை, 'அவுட்சோர்ஸிங்' மூலம் வெளிநாடுகளுக்குத் தருகிற வியாபார நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்; சலுகைகள் கட்டுப்படுத்தப்படும்'' என்று அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

இதைச் செய்தித்தாள்களிலும் டி.வி-யிலும் பார்த்த நம் நாட்டு ஐ.டி. ஊழியர்களும், 'ஐ.டி' கனவோடு படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளும், அவர்களின் பெற்றோர்களும் உள்ளுக்குள் உதறல் கண்டு போயிருக்கிறார்கள்.

'இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள் 'அவுட்சோர்ஸிங்' பிஸினஸை இந்தியாவுக்குத் தராமல் போய்விட்டால், இந்திய ஐ.டி. (Information Technology), ஐ.டி.இ.எஸ். (Information Technology Enabled Services), பி.பீ.ஓ. (Business process outsourcing) ஊழியர்கள் பாதிக்கப்படுவார்களா? வேலை நிச்சயம் என்ற நம்பிக்கையோடு ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்காண மாணவர்கள் இத் துறை சார்ந்த படிப்புகளைத் படித்து வரு கிறார்களே... அவர்களின் எதிர்காலம் என்ன வாகும்?' - இப்படி எழுந்து நிற்கும் கேள்வி களுக்கு விடை காணக் கிளம்பினோம்.

''ஒபாமாவின் அறிக்கைக்காக அலற வேண்டிய நிர்ப்பந்தமோ, அவசியமோ இந்தியாவுக்கும், அவுட்சோர்ஸிங் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இல்லை. காரணம், இந்தியாவிடம் இருக்கிறது 'மனிதவளம்' என்கிற மிகப் பெரிய பலம்!'' என்று பாஸிட்டிவ் குளூக்கோஸ§டன் ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த 'நாஸ்காம்' (NASSCOM-National Association of Software and Services Companies) நிறுவனத்தின் மண்டல இயக்குநர் புருஷோத்தமன்.

''இன்று இந்தியாவில் இருக்கும் அளவுக்கு ஐ.டி. மற்றும் ஐ.டி. சார்ந்த பிற துறைகளில் குறைந்த விலைக்கு குவாலிட்டியாக வேலை செய்து கொடுக்கக் கூடியவர்கள் அமெரிக்காவில் இல்லை. ஒரு ரூபாய்க்கு நம்மவர்கள் செய்து கொடுக்கும் அதே வேலையை அங்கே செய்வதற்கு 30 ரூபாய்கூட செலவாகும். அதனால்தான், 'அவுட்சோர் ஸிங்' மூலம் நமக்கு வேலை கொடுக்கிறார்கள்.

ஆனால், அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார சரிவு, அந்நாட்டு நிறுவனங்களின் வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸிங்' மூலம் முடிக்கப்படுவதால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைவது போன்ற காரணங்களுக்காக தன் நாட்டு நிறுவனங்களின் மீது நிதிச் சுமைக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தாலும், அது இந்திய ஐ.டி. இண்டஸ்ட்ரியை பாதிக்காது. ஏனெனில், இப்போது ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என நம்முடைய ஐ.டி சந்தை விரிவடைந்துள்ளது. அமெரிக்காவை நம்பி மட்டுமே இல்லை. இது நமக்கான பெரிய பலம்.

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

இந்த விஷயத்தை வேறு கோணத்தில் பார்க்கும்போது, அமெரிக்க விதித்திருக்கும் இந்தத் தடை, இந்தியர்களைவிட அமெரிக்க நிறுவனங்களுக்கு சரிவை ஏற்படுத்தலாம்! எனவே, எந்த நாடானாலும் 'அவுட்சோர்ஸிங்' முறை அதன் முன்னேற்றத்துக்கு பாதை போடும் பட்சத்தில், அதை அடைக்க முயற்சிப்பது ஆரோக்கியமான முடிவாக இருக்காது. உதாரணத்துக்கு, இன்று இந்தியாவில் நிறைய ஏர்லைன்ஸ் கம்பெனிகள் வந்து விட்டன. ஆனால், அந்த கம்பெனிகளுக்குத் தேவைப்படும் அளவுக்கு நம்மிடம் திறமையான பைலட்டுகள் இல்லை. அதற்காக ஏர்லைன்ஸ் கம்பெனிகளை இழுத்து மூடி விட முடியுமா? அதனால், மற்ற நாடுகளிலிருந்து நாம் திறமையான பைலட்டுகளை 'அவுட்சோர்ஸிங்' செய் துள்ளோம்...'' என்று விளக்கிய புருஷோத்தமன்,

''உலக நாடுகள் இந்தியாவில் அதிகமாக 'அவுட் சோர்ஸிங்' செய்யும் அளவுக்கு நம் ஐ.டி., ஐ.டி.இ.எஸ். பிஸினஸின் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது மற்ற நாடுகளைவிட சட்டம், கட்டுமானத்துறை, அக்கவுன்ட்ஸ், சேவைத்துறைகள், நிதித்துறை என பல துறைகளிலும் அதிகமான திறமைசாலிகள் நம் நாட்டில் உள்ளனர். எனவே, இந்தத் துறை சம்பந்தப்பட்ட வேலைகளை இந்தியாவுக்குக் கொடுத்து 'அவுட்சோர்ஸிங்' செய்யத்தான் உலகக் கம்பெனிகளும் விரும்புகின்றன. ஆக, நம்முடைய கல்வி நிறுவனங்கள் இந்தத் துறைகளில் எல்லாம் திறமையான மாணவர்களை, அவர்களுக்குக் காத்திருக்கும் உறுதியான எதிர்காலத்தை மனதில்கொண்டு உருவாக்க வேண்டும். இன்று இந்திய அளவில் சென்னை சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் டுகள்தான் 'தி பெஸ்ட்' என்கிறார்கள். அந்த பெயரை எல்லா துறைகளிலும் பெற கல்வி, தனி மனிதத் திறமை, வாய்ப்புகள் உருவாக்கப்படுதல் - இவை மூன்றும் இணையாகச் செல்ல வேண்டும்!'' என்று நம்பிக்கை அளித்தார் புருஷோத்தமன்.

இன்றைய ஐ.டி. சூழலை மையப்படுத்தி அரசு எடுத்திருக்கும் முயற்சிகள், முடிவுகளை அறிய, மாநில ஐ.டி. துறை அமைச்சர் பூங்கோதையிடம் பேசினோம்.

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?

''பொருளாதர மந்தநிலை நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. அதன் காரணமாக நம் ஐ.டி. சந்தையை உலகின் எல்லாப் பகுதிகளிலும் விரிவு படுத்தியுள்ளோம். மேலும், இந்தியாவின் உள்நாட்டு ஐ.டி. சந்தையே பெருமளவு விரிவடையப் போகிறது. இதற்காக 'இ-கவர்னென்ஸ்' சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி. இன்கம்டாக்ஸ் ஃபைல் பண்ணுவதிலிருந்து, அடையாள அட்டை பணி வரை எல்லா அரசுத் துறைகளிலுமே ஐ.டி. சார்ந்த பணிகள் உருவாக்கப்படும். இதன்மூலம் இந்திய அளவில் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, நம் அரசாங்கமே உருவாக்க உள்ளது. அதனால் இந்தத் துறை சார்ந்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்!'' என்று பயரேகைகளை அகற்றும் 'டானிக்' பதிலைக் கொடுத்தார் பூங்கோதை.

ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் 'ஐ.டி. வேலை' கனவுகளுடன் கல்லூரிக்கு சென்று கொண்டுள்ளார்கள். அவர்கள் கனவுகளுக்கு வண்ணம் பூசட்டும் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களும், அதிகார மையங்களும்!

ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?
ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?
 
ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?
ஒபாமாவின் அறிவிப்பு இந்திய ஐ.டி.துறையை பாதிக்குமா ?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism