மேனுஃபேக்சரிங் துறை (Manufacturing) உற்பத்தித் துறையில் இன்னும் பல முன்னேற்றங்கள் வசமாகும். குறிப்பாக, வாகனங்களுக்கு பாகங்கள் தயாரிக்கின்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தொடர்பான பொருட்கள் தயாரிக்கின்ற நிறுவனங்கள், எலெக்ட்ரிக்கல் பாகங்கள், உணவு மற்றும் உற்சாக பானங்கள் மற்றும் கெமிக்கல் பொருட்களைத் தயாரிக்கின்ற அத்தனை நிறுவனங்களிலும் அவர்களின் உற்பத்தித் தேவை அதிகமாகும் என்பதால், லேபரர் வரை மேனேஜிங் கிரேடு வரை தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவார்கள்.
ஃபார்மசூட்டிகல், ஹெத் கேர் மற்றும் லைஃப் சயின்ஸ் துறை (Pharmaceutical, Health care and Life science) மருத்துவத்துக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருப்பதுடன், வெளிநாட்டில் கண்டுபிடித்த ஒரு மருந்தை சோதனை செய்ய, சர்வதேச மருத்துவ உலகம் இந்தியாவை 'டெஸ்டிங் கிரவுண்டா'க பயன்படுத்துவதும் இப்போது அதிகரித்திருப்பதால் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளார்கள், பயோ டெக்னாலஜிஸ்ட்கள், கிளினிக்கல் ரிசர்ச் அசோஸியேட்கள், பயோ ஸ்டாட்டிஸ்டிகன்ஸ், மெடிக்கல் அட்வைசர்கள், பாரா மெடிக்ஸ்கள், டிரக்ஸ் சேஃப்டி அசோஸியேட்கள் போன்றவர்களுக்கு வாய்ப்பு, பணி முன்னேற்றம் வரிசை கட்டும்.
ஜவுளித் துறை (Textile) உலக மார்க்கெட்டில் இரண்டாவது இடத்திலும், காட்டன் தயாரிப்பில் முதல் இடத்திலும் இருக்கக்கூடிய இந்தியாவுக்கு எப்போதுமே வளமான எதிர்காலத்தை தரக் கூடியது ஜவுளித் துறை. எனவே, நிட்டிங், டையிங், பிராசஸிங் என பல்வேறு வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கக் காத்திருக்கிறது இந்தத் துறை.
விருந்து உபசரிப்பு துறை (Hospitality) உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படும் இந்தியாவில், ஹாஸ்பிட்டாலிட்டி செக்டார், டூரிஸம், ரெஸ்டாரன்ட்கள், கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று சுற்றுலாத் துறையை மையப்படுத்தி இயங்கும் அத்தனை துறைகளிலும் காத்திருக்கிறது பிரகாசமான வாய்ப்புகள்.
ரியல் எஸ்டேட் துறை (Real estate) பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வீழ்ந்த ரியல் எஸ்டேட் துறை, இந்த ஆண்டு மீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நிலம் விற்பதில் தொடங்கி, கட்டடங்கள் எழுப்புவது வரை கான்ட்ராக்டர்கள், சிவில் இன்ஜினீயர்கள், எலெக்ட்ரிகல் இன்ஜினீயர்கள், டெக்னீஷியன்கள், ஐ.ஐ.டி. படித்தவர்களுக்கு எல்லாம் மீண்டும் வருகிறது வாய்ப்பு.
|