Published:Updated:

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

Published:Updated:

சண்.சரவணக்குமார் படங்கள் ஜெ.தான்யராஜு
எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'
எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல... பாராட்டு!"

கால்களை இழந்தாலும் களத்தில் நிற்கும் ஃபாத்தி'மா'...

"வீல் சேர்தான் வாழ்க்கைனு ஆகிட்டா... அதோட எல்லாமே முடிஞ்சு போச்சா... என்ன? இந்த உலகத்தை தன்னோட திகில் படங்களால திணறடிச்ச டைரக்டர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், கடைசிக் காலத்துல வீல்சேர்ல உட்கார்ந்தபடியே படங்களை எடுத்திருக்கார் தெரியுமோ"

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

- வார்த்தைகள் கோத்துக் கதை சொல்லும் ஃபாத்திமா பீவி, தன் இரண்டு கால்களையும் போலியோவுக்கு பலி கொடுத்தவர். திரைத்துறையில் சாதிக்கக் கிளம்பியிருப்பவர்!

ஆம்... 'மா' எனும் தமிழ்ப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகப் போகும் பெண் இயக்குநர். வீல் சேரில் அமர்ந்தபடியே தமிழ்த் திரைப்படத்தை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர்.

"மதுரை பக்கத்துல இருக்கற திருப்பரங்குன்றம்தான் எனக்கு சொந்த ஊர். அக்கா, ரெண்டு அண்ணா, நான், ஒரு தங்கச்சினு எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பாசம் வச்சு பாதுகாத்துக்கற அன்பான குடும்பம் எங்களோடது. இயல்பிலயே இலக்கியம், கலை, விளையாட்டு, மேடைப்பேச்சு, எழுத்து... இப்படி எல்லாத்துலயும் எனக்கு ஆர்வமும் அறிவும் இருந்ததால, திருப்பரங்குன்றத்துல நடக்கற அத்தனை நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்குவேன். எங்க அம்மா, அக்காவோட இடுப்பும், என் சகோதரர்கள் மற்றும் நண்பர்களோட தோள்களும்தான் எனக்கு வாகனம்.

பாரதியிலயிருந்து டால்ஸ்டாய் வரைக்கும் எல்லோரோட எழுத்துக்களையும் படிக்கப் படிக்க, 'இந்த பூமியில பொறந்ததுக்கு நாமளும் ஏதாச்சும் சாதிக்கணும்'னு மனசுக்குள்ள ஒரு நெருப்பு வந்துச்சு. என் தேடலுக்குத் தீனியா கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள்னு எல்லாத்துலயும் ஆர்வமா ஈடுபட்டு சர்வதேச அளவுல பரிசு வாங்கினேன்" என்று பெருமையோடு சொன்ன ஃபாத்திமா, திரைத்துறை மீது பார்வை படிந்த கதையோடு தொடர்ந்தார்...

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

"பி.காம். முடிச்சதும் வானொலி, தொலைக்காட்சிகள்ல தொகுப்பாளரா கொஞ்சநாள் வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல எழுத்தாளர் சங்கத்துல நான் பார்த்த குறும்படங்கள் என்னை ரொம்பவே ரசிக்க வைக்க, எனக்கும் 'ஃபிலிம் மேக்கிங்' ஆசை வந்தது. 'திப்பு சுல்தான்' பத்தி ஒரு ஆவணப்படம் எடுக்கத் திட்டமிட்டு... ஸ்ரீரங்கபட்டினம், மைசூர், டெல்லினு பல இடங்களுக்கும் பயணப்பட்டேன். ஆனா, முழுமையான தகவல்கள திரட்ட முடியாததாலயும், போதிய பணம் இல்லாததாலயும் அதைத் தொடர முடியல..." என்றவர், தன் உடலின் இயல்பை வருத்தி மேற்கொண்ட இந்த முயற்சிகளுக்கு விலையாக... இதுவரை காலில் பதினோரு அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும், குறையாத ஆர்வமும் வேகமும்தான் அவரை திரைத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறது.

"அரசு திரைப்படக் கல்லூரியின் துணைத் தலைவர் மற்றும் பேராசிரி யர் மதன் கேப்ரியேல், என்னைப்போல மாற்றுத்திறன் கொண்ட நூற்றுக்கணக்கானோரை ஒருங்கிணைச்சு நடத்தின பல்வேறு திறனறிவு போட்டிகள்ல கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது. அதுல பத்து போட்டிகள்ல பங்கேற்று முதல் பரிசு வாங்கினேன். என் கிட்டயும், எனக்கு அடுத்தடுத்த ரேங்க்குகள் வாங்கியிருந்த வங்ககிட்யும் இருந்த கிரியேட்டிவ் ஆர்வங்களை கவனிச்சு, மதன் கேப்ரியல் சார் எங்களை சென்னை, ஃபிலிம் ஸ்கூல்ல சேர்த்தார். அங்க போட்டி நடுவர்கள். அங்க ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை எழுதறது, இசைனு எல்லாத்தையும் படிச்ச நான் இப்ப ஒரு இயக்குநர். என்னோட படிச்ச மற்ற இருபத்தி மூணு நண்பர் களும்தான், என்னோட 'மா' படத்தோட தொழில்நுட்ப கலைஞர்கள்! ஆமா... பார்வையற்ற இசையமைப்பாளர், ஒரு கால் இல்லாத நடன அமைப்பாளர்னு இந்தப் படத்தோட தூண்கள் அத்தனை பேருமே என்னைப் போலவே மாற்றுத்திறனாளிகள்தான்.

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'

'முழுக்க முழுக்க மாற்றுத்திறன் படைச்சவங்களால எடுக்கப்பட்ட படம்'ங்கற வகையில, தமிழ் சினிமாவுல எங்க படம் ஒரு முதல் ரெக்கார்டா இருக்கும்!" எனும் இவரின் 'மா' படத்தை, 'கலைவிழி' நிறுவனமும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பும் இணைந்து தயாரித்துள்ளன. கூடிய விரைவில் வெளிவரவிருக்கிறது படம்.

" 'மா' படம், மாற்றுத்திறன் கொண்ட இளைஞனைப் பத்தினது. எங்க உலகத்தோட வலிகள இந்தப் படம் மூலமா உங்களுக்குள்ள கடத்த முயற்சி செஞ்சுருக்கோம். படத்தை பாருங்க... மாற்றுத்திறனாளிகளா நாங்க உங்களோட கரிசனங்களை வாங்கிக்கறதவிட, கிரியேட்டர்களா நாங்க உங்களோட பாராட்டை வாங்கினா... அதுதான் எங்களோட உழைப்புக்கு கிடைச்ச வெற்றி!" என்று தீர்க்கமாகச் சொல்லும் ஃபாத்திமா,

" 'உன்னால படி ஏறி வர முடியாது...'னு என்னைப் புறக்கணிச்ச பள்ளி, 'இந்த நிலைமையில உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்...'னு எனக்கு லிமிட் வச்ச வாதங்கள், 'இல்லங்க... நீங்க இப்படி கஷ்டப்படறதை நாங்க விரும்பல...'னு நாசூக்கா உதாசீனப்படுத்தின வேலை வாய்ப்புகள்... நான் மட்டுமில்ல, என்னைப் போன்ற மாற்றுத்திறன் கொண்ட எல்லா நண்பர்களும் தோழிகளும் இந்த கறுப்புப் பக்கங்களை சந்திச்சுக்கிட்டுதான் இருக்கோம்.அதுக்கெல்லாம் காலம் வெகு விரைவுல பதில் சொல்லும்... (ஃபாத்தி)மா வடிவில்!" என்றார் நம்பிக்கையுடன்!

எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'
 
எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'
எங்களுக்குத் தேவை கரிசனங்கள் அல்ல...பாராட்டு !'
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism