Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

நமக்குள்ளே....
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுத, படிக்கத் தெரியாத ஐம்பது வயதைக் கடந்த அந்தப் பெரியவர், சர்ச்சில் மணி அடிக்கும் வேலையிலேயே வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தார். அங்கே புதிதாக வந்து சேர்ந்த பாதிரியார், 'மூன்று மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீங்கள் எழுத, படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்த வேலையில் நீடிக்க முடியாது' என்று கறாராகக் கூறிவிட்டார். 'இந்த வயதுக்கு மேல் படிப்பது அத்தனை சாத்தியமல்ல' என்று வேலையை விட்டு விட்டார் பெரியவர்.

வயிற்றுப் பாட்டுக்காக... கையில் இருந்த பணத்தை வைத்து, பெட்டிக் கடையன்றை தொடங்கினார். நன்றாக வியாபாரம் நடக்கவே, அடுத்த தெருவிலும் அதேபோல ஒரு கடை திறந்தார். வியாபார சூட்சமம், வாடிக்கையாளர்களின்

தேவை எல்லாவற்றையும் எளிதாகப் புரிந்து கொண்டதால்... அடுத்தடுத்து பல கடைகளைத் திறந்து பெரிய பணக்காரரானார். சொந்தமாகவே தொழிற்சாலை திறக்க நினைத்தவர், வங்கிக்குச் சென்றார். 'உங்களுக்கு இல்லாத உதவியா...' என்ற வங்கி அதிகாரி, விண்ணப்பப் படிவங்களையெல்லாம் பூர்த்தி செய்து, பெரியவரின் கையெழுத்துக்காக நீட்டினார்.

'எனக்கு எழுதப் படிக்கவெல்லாம் தெரியாதுங்க. கைநாட்டுதான்' என்று அவர் கூறிய பதிலில் அதிர்ந்து போன வங்கி அதிகாரி, 'படிக்கத் தெரியாம இருக்கும்போதே இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா இருக்கீங்க. படிச்சிருந்தா எப்படி இருந்திருப்பீங்க?' என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்டார்.

பெரியவரிடமிருந்து வந்த பதில் -

'சர்ச்சுல மணி அடித்துக் கொண்டு இருந்திருப்பேன்.'

சாமர்செட் மாம் எனும் ஆங்கில எழுத்தாளரின் உலகப் புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்றின் சாரம் இது.

வாய்ப்பு என்பது அடுத்தவரின் கைகளில் இல்லை. நம்முடைய பத்து விரல்களுக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் இந்தக் கதைக்குச் சரியான உதாரணம்... 'இல்லத்தரசியை ஜெயிக்க வைத்த இட்லி' கட்டுரையில் வரும் ஜெயந்தி.

வாய்ப்புகள் கதவைத் தட்டும் என்று காத்திருப்பதைவிட, நாம்தான் வாய்ப்புகளின் வீட்டுக் கதவுகளைத் தட்ட வேண்டும் என்பதுதான் சிறுகதைப் பெரியவரும்... நிஜக்கதை ஜெயந்தியும் சொல்ல வரும் உண்மை!

ஆக... திரும்பிய பக்கமெல்லாம் காத்திருக்கின்றன வாய்ப்புகள். அதைப் பற்றிய பல கட்டுரைகள் உள்ளே காத்திருக்கின்றன. கதவுகளைத் தட்ட தயாராவோமா!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே ....


ஆசிரியர்

நமக்குள்ளே ....
 
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism