Published:Updated:

வாசகிகள் விமர்சனம் !

வாசகிகள் விமர்சனம் !

வாசகிகள் விமர்சனம் !

வாசகிகள் விமர்சனம் !

Published:Updated:

வாசகிகள் விமர்சனம் !
வாசகிகள் விமர்சனம் !
வாசகிகள் விமர்சனம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.75

"கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிரிப்போ சிரிப்பு' நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் - அரவிந்த் சேர்ந்து நடத்தும் காமெடி (?) அரங்கேறியது. அரவிந்த், நம் பாரம்பரிய பரதநாட்டிய உடையில் ஆபாச பாடல்களுக்கு ஏற்ப, பார்க்க சகிக்காத அங்க அசைவுகளுடன் ஆடியது அருவருப்பைத் தந்தது. காமெடி என்ற பெயரில் பண்பாடு, கலாசாரம் இதற்கெல்லாம் இழுக்கு ஏற்படுத்தும் இதுபோன்ற கண்றாவி நிகழ்ச்சிகளுக்குத் தடை போட வேண்டும்" என்று குமுறுகிறார் கோவையிலிருந்து கே.ஜே.சௌம்யா.

"மாமியார் தவறே செய்திருந்தாலும், உணர்ச்சி வேகத்தில் அவசரப்பட்டு, கொட்டும் மழையில் விரட்டிவிட்டு, செய்த தவறை நினைத்து துடித்து, மற்றவர்களுடைய உணர்ச்சி கொந்தளிப்பு பார்வையிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் மருமகள். அவளின் கணவன் செல்வமோ... வழக்கமான பாணியில் மனைவியை அடித்து துன்புறுத்தாமல், பார்வையாலேயே அனலைக் கக்கி, கண்டுபிடித்து அழைத்து வரச் செல்லும் காட்சி... ஒரு ஜென்டில் மேனுக்குரிய முத்திரை!" என்று 'திருமதி செல்வம்' சீரியலைப் பாராட்டுகிறார் சென்னையிலிருந்து உஷா நாராயணன்.

" 'அலெக்ஸாண்டர் போருக்குச் செல்லும்போது ஞாபக மறதி ஏற்பட்டால், நியூட்டன் ஆப்பிள் விழும்போது தூங்கிவிட்டால், போர்க்களத்தில் பாபருக்கு திடீரென்று வயிறு அப்செட் ஆகிவிட்டால்...' என சுட்டிகளின் குறும்பான கற்பனைகளோடு வரும் ஊட்டச்சத்து பான விளம்பரம்... அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது" என்று மெச்சுகிறார் பாண்டிச்சேரியிலிருந்து அனுராதா ரமேஷ்.

"கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ஒரு குறும்படம், பார்வையாளர்களுக்கு சரியாகப் புரியவில்லை. இதுகுறித்து பேசிய 'சீஃப் கெஸ்ட்'டான நடிகர் லாரன்ஸ், 'ஜட்ஜ்'களில் ஒருவரான பிரதாப் போத்தன் இருவரும் குறை கூறி விமர்சிக்க... குறும்பட இயக்குநரின் முகம் தொங்கிப்போனது. மற்றொரு ஜட்ஜான கார்ட்டூனிஸ்ட் மதன், பாஸிட்டிவாக விமர்சித்தது நன்றாக இருந்தது. இந்த அணுகுமுறையை மற்ற ஜட்ஜுகளும் பின்பற்றலாமே!" என்று எடுத்துக் கொடுக்கிறார் கீழக்கரையிலிருந்து மு.சுலைஹா உம்மாள்.

வாசகிகள் விமர்சனம் !
 
வாசகிகள் விமர்சனம் !
வாசகிகள் விமர்சனம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism