உதாரணத்துக்கு அலுவலகத் தோழியுடன் ஆரோக்கியமாக தொலைபேசும் கணவரை மனைவி சந்தேகிக்கும்போது, கடுப்பாகும் கணவர் அந்த அலுவலகத் தோழியிடமே அதையும் கொட்டி வடிகால் தேட முற்படுவார். இது மனைவியின் சந்தேகத்தை மேலும் ஊதிவிடும். எனவே, இம்மாதிரியான பிரச்னைகளின்போது பார்ட்னரின் தவறுக்கு தன் தரப்பில் ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற அக்கறையுடனான அலசல், தவறிழத்தவரையும் இறங்கி வரச்செய்யும். சுமூகமும் படிப்படியாக சாத்தியமாகும்.
தம்பதி என்பவர்கள்... கணவன் - மனைவியாக மட்டுமல்லாது பொறுப்பான தாய் - தந்தையாகவும், முதிர்ச்சியான புரிதலோடும் இதை எதிர்கொள்ள வேண்டும். சமரசத்தில் இறங்கும் மூன்றாம் நபர்களும், இரு தரப்பிலும் கரிசனம் கொண்டவர்களாகவும், குடும்பநலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
இப்போது ரணகளமாகிக் கிடக்கும் உங்கள் மகளின் குடும்ப விவகாரத்தைப் பொறுத்தவரை, உடனடியாக மனநல மருத்துவரை நாடுவது அவசியம். அவர், தம்பதிக்கு பிரச்னையை யதார்த்தத்தோடு புரிய வைப்பார். தேவையெனில் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வார். பின் அவரின் பரிந்துரையின் கீழ் 'மணவாழ் ஆலோசகர்', தம்பதியரின் அடுத்தகட்ட இணக்கத்துக்கு முயற்சிப்பார். மருமகன் மீதே தவறு இருப்பின், தம்பதியர் பரஸ்பரம் ஒருமித்து பிரச்னையை களைய ஆலோசனை வழங்கப்படும். மருமகன் தனது பிடிவாதத்தில் தீவிரமாக இருப்பின், தேவையைப் பொறுத்து உங்கள் மகளுக்கு அடுத்தக்கட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள பாஸிட்டிவ் ஆலோசனைகளும் வழங்கப்படும். உரிய மனநல ஆலோசனை பெறுவதே அவசியமும் அவசரமுமாகும்!"
ஒரு நாளைக்கு ஒரு சிக்ரெட்....அனுமதிக்கலாமா ?
|