Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"பரபரப்பில் குறையும் மதிப்பெண்கள்...

தடுத்து நிறுத்துவது எப்படி?"

"இந்த வருடம் பள்ளிப் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் என் மகன், நன்றாகப் படித்திருந்தும் பதிலை மாற்றி எழுதுவது, நேரமின்மை, ஒன் வேர்ட் பதில்களில் பதற்றத்தில் ஓரிரு மதிப்பெண்களை கோட்டைவிடுவது என தேர்வு அறை டென்ஷனால் காலாண்டு, அரையாண்டு என்று எல்லா தேர்வுகளிலும் பத்து முதல் இருபது மதிப்பெண்கள் வரை அநியாயமாக இழந்துவிடுகிறான். கட் ஆஃப் மார்க்குகளில் அரை மதிப்பெண், கால் மதிப்பெண்களில் எல்லாம் முந்தலும் பிந்தலும் இருக்கும் இந்தக் காலத்தில், என் மகன் தேர்வறை குழப்பங்களில் இருந்து மீள வழி சொல்லுங்களேன்..." என்று தேர்வு நேர 'பக் பக் கவுன்ட் டவுன்' தொடங்கிவிட்ட சூழலில் கேள்வி எழுப்பியிருக்கும் மேட்டுப்பாளையம் ரெய்சல் ராணிக்காக, குறிப்புகளைத் தருகிறார் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரான முனைவர் எம்.சிவசுப்ரமணியம்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

''தேர்வுக்கு மட்டுமல்ல, தேர்வு அறைக்கும் மாணவர்களைத் தயார் செய்வது முக்கியம்தான். அதற்கான இந்த எளிய வழிகளை மாணவர்கள் பின்பற்றலாம்... மதிப்பெண்களைச் சிதறவிடாமல் காப்பாற்றலாம்.

தேர்வுக்கு முந்தைய இரவு 5 மணி நேரமேனும் உறங்கி எழ வேண்டும். அரை மணி நேரம் முன்பாகவே தேர்வு அறையில் ஆஜராகி ஆசுவாசம் பெற வேண்டும். இரண்டு நிமிடம் பிரார்த்தனை அல்லது ஆழ்ந்த மௌனம் மூலம் மனதை ஒருமுகப்படுத்திவிட்டு விடைத்தாளை நிரப்பத் தொடங்க வேண்டும்.

வினாத்தளை ஒருமுறைக்கு இருமுறை படித்து, நன்கு பதில் தெரியும் என நாம் நினைக்கும் வினாக்களுக்கு முதலில் பதில் எழுதிவிட வேண்டும். வினாத்தாளை வாசிக்கும்போதே நேரிடையான வினாக்கள் எவை, மறைமுகமான வினாக்கள் எவை என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். மறைமுக வினாக்களை கூடுதலாக இருமுறை படித்துப் புரிந்துகொண்டு அதற்கான பதிலையும் திட்டமிட்டுக் கொள்ளலாம். பெரும்பாலான மறைமுக வினாக்களில் அவசரத்தில் ஒரு பதிலை எழுதிவிட்டு, திருப்பிப் பார்க்கும்போது பகீரிட்டு அவசர அவசரமாக அதை அடித்து புதிதாக எழுதுவது நடக்கிறது. எனவே, மறைமுக வினாக்களிடம் உஷாராக இருக்கவேண்டும். ஏனைய வினாக்களிலும் நன்கு தெரிந்த, எளிமையான, அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத வினாக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, பக்கம் நெடுக சிரத்தையாக எழுத வேண்டிய கேள்வியை விட, ஒரு ஃபார்முலாவில் தீர்த்துவிட வேண்டிய கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதுவதன் மூலம் அந்தக் கேள்விக்கான ஒதுக்கீட்டு நேரத்தில் பாதி மிச்சமாகும்.

ஒருவேளை ஏதாவது ஒரு வினாவுக்கான விடை எழுதும்போது பாதியில் மறக்க நேரிட்டால், அதை அப்படியே விட்டுவிட்டு நன்கு தெரிந்த அடுத்த வினாவை எழுதலாம். மீதி பதிலை சாவகாசமாக கடைசியில் பார்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, தலையை உதறி யோசிப்பதால் தேவையற்ற பதற்றம் உருவாகி, அடுத்த விடையளிப்பிலும் தடுமாற்றம் தொடரக்கூடும். சக மாணவர்கள் அடுத்தடுத்து அடிஷனல்களை வாங்கிக் குவிப்பதையோ, பதில் தெரியாமல் தவிப்பதையோ நோட்டமிடக் கூடாது. தேர்வறையில் இப்படிப்பட்ட ஒப்பீடு, சுய செயல்பாட்டை பாதிக்கும்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவற்றின் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறே எழுதிப் பழக வேண்டும். ஏனெனில்... ஒரே கேள்வி ஐந்து மார்க், பத்து மார்க் இரண்டில் எதில் வேண்டுமானாலும் கேட்கப்படலாம். 'எஸ்ஸே'வுக்கான கேள்வி, பாராகிராஃபில் கேட்கப்பட்டிருந்தால், மாணவர்கள் படித்ததை எல்லாம் எழுத பரபரப்பார்கள். தேவைக்கும் அதிகமான வரிகளை எழுதி நேரத்தை நழுவவிடுவார்கள். அதைத் தவிர்த்து, மதிப்பெண்களைப் பொறுத்து சுருக்கியோ விரித்தோ பதில் எழுத வேண்டும்.

சில மாணவர்கள் பதிலுக்கான படத்தை வரையும்போது போதிய முன்பயிற்சி இன்மையால் தடுமாறி நேரத்தை விழுங்குவர்கள். அல்லது இயல்பிலேயே சிறப்பாக படம் வரையும் திறன் பெற்றிருக்கும் மாணவர்கள் அதீத ஆர்வத்தில் பதில் எழுதுவதற்கான பெரும்பாலான நேரத்தை படம் வரைவதிலேயே போக்கிவிடுவார்கள். இந்த இரண்டு தவறுகளுமே பயிற்சியின் மூலம் போக்கியாக வேண்டும்.

இன்னும் சில மாணவர்கள் நன்றாகப் படித்து மனதில் வைத்திருப்பார்கள்; ஆனால், எழுத்தில் வேகமின்றி இருப்பர்கள். நம்முடைய தேர்வுமுறை பெரும்பாலும் எழுத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எனவே, வேகமான எழுத்துப் பயிற்சியை துவக்கத்திலிருந்தே பெற்றிருக்க வேண்டும். அதேபோல, வரிகளை நேராக எழுதாதவர்களுக்கும் நேரம் அதிகமாகக் கரையும். அவர்கள் தாளின் அடியில் அழுத்தமாக கோடிட்ட மற்றொரு தாளை வைத்து பயிற்சி செய்வதன் மூலம் நிவர்த்தி பெறலாம். ஸ்டைலாக எழுத முயற்சிப்பது, தலைப்புகளின் வார்த்தைகளை அலங்கரிப்பது போன்றவை நேரத்தை வெகுவாக விழுங்கிவிடும். திருத்துபவருக்கும் எரிச்சலையே தரும். முக்கிய பாயின்ட்டுகளைத் தனித்துக்காட்ட அடிக்கோடிட்டால் போதும். ஒவ்வொரு கேள்விக்கும் நேர வரையறை வகுத்துக் கொள்வது போல, எழுதிய வினாக்களைத் திருப்பி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த முயற்சிகளை எல்லாம் பொதுத்தேர்வு அறைகளில் பழகாமல், 'ப்ளூ ப்ரின்ட்' எனப்படும் மாதிரி வினாத்தாள்களை பலமுறை எழுதிப் பழகி திருத்திக் கொள்ள வேண்டும். மாதிரி தேர்வில் குறிப்பிட்ட கேள்வி அதிகப்படியான நேரத்தை விரயமாக்குவதாக தெரிந்தால் அதை குறித்து வைத்துக்கொண்டு அடுத்த நாளே அந்தப் பதிலை குறித்த நேரத்தில் எழுதிப் பழகிட வேண்டும். கூடவே, விடைத்தாள் திருத்துபவர் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார், ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் எத்தனை மதிப்பெண்களை தீர்மானிப்பார் போன்றவற்றையும் மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் அறிந்து வைத்திருப்பது, நேரத்தோடு மார்க்கு களையும் சேகரிக்க உதவும்.

தேர்வறையிலும் தேர்விலும் வெல்ல வாழ்த்துக்கள்!"

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
 
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism