Published:Updated:

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

Published:Updated:

உங்களை, உங்களுக்கே உணர்த்தும் தொடர் ...
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்ணே...ரிலாக்ஸ் ப்ளீஸ் !

நேசப் பார்வையில் பூக்கும் பாசப் பூ !

சுவாமி சுகபோதான்ந்தா

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் பிணக்குகளை வெடிக்கச் செய்யும் கச்சாப்பொருளாக மாறும் விஷயங்களைப் பட்டியலிட்டால்... முன்னணியில் இருப்பது, உறவினர்கள் வந்து வைத்துவிட்டுப் போகும் திருமணப் பத்திரிகை.

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

"கல்யாணத்துக்குக் கட்டிட்டுப் போக எங்கிட்ட நல்லதா ஒரு பட்டுப் புடவைகூட இல்ல. போட்டுக்க நகை நட்டும் இல்ல. நான் கல்யாணத்துக்கு வரல. நீங்க மட்டும் போயிட்டு வாங்க..." என்று சலிப்பும் சண்டையும் ஆரம்பிக்கும்.

'சரி' என்று எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து, திருப்திப்படுத்தி, திருமணத்துக்கு அழைத்துச் சென்று வந்தால், "எவ்வளவு செலவு செஞ்சு கல்யாணத்துக்குப் போனோம்?! ஆனா, அங்க உங்க வீட்டு ஆளுங்க நம்மள ஒழுங்காவாச்சும் உபசரிச்சாங்களா, முகம் கொடுத்தாச்சும் பேசுனாங்களா? அட்லீஸ்ட், 'சாப்பிட வாங்க'னு நம்மள கூப்பிடக்கூட இல்ல..." என்று கணவன் - மனைவிக்கு இடையே யான சண்டை நிற்காமல் தொடரும்.

"சுவாமி, என் மனைவி ரொம்ப நல்லவ. வயசான என் பெற்றோரைப் பக்கத் துல இருந்து பார்த்துக்கணுங்கறதுக்காக, அவளோட வேலையைக்கூட விட்டுட்டுட்டா. அவள நான் மனசார நேசிக்கறேன். ஆனா, சமயங் கள்ல ரொம்ப டாம்பீகமா இருக்கிறா. ஊர் மெச்சணும்கறதுக்காக தாம் தூம்னு செலவு செய்ய நெனைக்கறா. அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகுமா சுவாமி..?!" என்று இளம் கணவர் ஒருவர் முன்பொரு சமயத்தில் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார்.

ஒருவர் பார்வையில் டாம்பீக செலவாகப் படுவது, இன்னொருவர் பார்வையில் அத்தியாவசியமான செலவாகத் தெரியும் என்பதால்... "எதை வைத்து உன் மனைவியை இப்படி குற்றம்சாட்டுகிறாய்?" என்று கேட்டேன்.

"அடுத்த ஊர்ல நடக்கற சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு கார்ல போகணும்கிறா. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவைதான் ஒரு பஸ் இருக்கே... அப்பறம் எதுக்கு சுவாமி காருக்கு வீண் செலவு..? அப்படியும் அவளுக்காக கார் எடுத்துக்கிட்டு போனா, அங்க சாப்பிடாம, என்னையும் சாப்பிட விடாம கூட்டிட்டு வந்துட்டா. அவளுக்கு அங்க சாப்பிடறது கௌரவக் குறைச்சலா இருக்கு போல!" என்று தன் பொருமலை அடுக்கிக் கொண்டே போனார் இளம் கணவர்.

கணவர் குற்றப்பத்திரிகையை வாசித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த மனைவி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசினார்... "இனி, ஒரு குண்டு மணி தங்கம்கூட வாங்க முடியாதுங்கற அளவுக்கு தங்கத்தோட விலை ஏறிப்போய் கிடக்கு. இந்த நெலமையில எங்க வீட்டுல போட்ட தங்க நகைகளையும் நெரிசலான பஸ்ல போட்டுட்டுப் போறது எவ்ளோ ரிஸ்க்னு இவருக்குப் புரிய வேண்டாமா சுவாமி. சாதாரண நாள்லயே பஸ்ல கூட்டம் நெரிக்கும். அப்போ முகூர்த்த நாள்ல எவ்ளோ கூட்டம் வரும்... அதுல நகை களை போட்டுக்கிட்டுப் போறது பாதுகாப்பானதில்லைனு தெரிய வேண்டாமா?

அன்னிக்கு நாங்க போன கல்யாணத்துல, மண்டப டைனிங் ஹால்ல அம்பது பேர்தான் உட்கார முடியும். அதனால சாப்பிடறதுக்கு எத்தனாவது பந்தியில எங்களுக்கு இடம் கிடைக்கும்னு எங்களுக்கே தெரியாது. பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து திரும்பறதுக்குள்ள வீடு வந்து சேர வேண்டாமா?"

- மனைவி பேசப் பேச கணவர் திகைத்து நின்றார்.

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

இந்த வாதங்களை தர்க்கரீதியாக கணவரால் எதிர்கொள்ள முடியாவிட்டாலும், தன்னுடைய கருத்துதான் சரி என்பது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

இளம் கணவர் தன் பேச்சின் துவக்கத்தில் தன் மனைவியை மிகவும் நேசிப்பதாகச் சொன்னார் இல்லையா? அதை அவருக்குச் சுட்டிக்காட்டி, "நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கவில்லை. பொய் சொல்கிறீர்கள்!" என்றேன். இதைக் கேட்ட தும் அவரது முகத்தில் ஓர் அதிர்ச்சி.

ஆம்... பலர் தங்கள் மனைவியை நேசிப்பதில்லை என்பதுதான் உண்மை. மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஓர் அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள். மனைவி அந்த அபிப்பிராயப்படி இருந்தால் மனைவியை நேசிக்கிறார்கள்.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மனைவி என்கிறவள் விடியற்காலையில் எழுந்து பரபரவென அலுவலகம் கிளம்புவதற்குள் டிபன், லஞ்ச் செய்து கொடுத்து, பிள்ளைகளை சரியான நேரத்துக்கு ஸ்கூலுக்கு கிளப்பி, வீட்டை 'நீட்'டாகப் பராமரித்து... இப்படிஎல்லாம் இருக்க வேண்டும் என்று அபிப்பிராயம் கொண்டிருப்பார்கள். இவர்களின் அபிப்பிராயப்படியே மனைவி நடந்து கொண்டால்... மனைவியை நேசிப்பார்கள். இதுவே தன் மனைவி ஒரு நாள் உடம்பு சரியில்லை என்ற காரணத்துக்காக காலையில் ஒன்பது மணிக்கு எழுந்திருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். இத்தனை நாள் மனைவி காலையில் எழுந்து செய்த வேலைகளை எல்லாம் மறந்துவிட்டு, எள்ளும் கொள்ளுமாக வெடிப்பார்கள். இப்படி மனைவியைப் பார்க்கும் கணவர்கள்தானே இங்கே அதிகம்?!

மகன், மகள், அண்ணன், தம்பி, நண்பர் என்று யாரை நாம் நேசிப்பதாகச் சொன்னாலும் உண்மையில் நாம் அவர்களை நேசிக்கவில்லை. அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அபிப்பிராயத்தைத்தான் நேசிக்கிறோம். புரியும்படி சொன்னால்... நாம் நம்முடைய அபிப்பிராயத்தைத்தான் நேசிக்கிறோம்.

நான் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இளம் கணவரின் தலை தானாகவே கவிழ்ந்தது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்க வேண்டியது இப்படிப்பட்ட நேசமல்ல. சென்ற இதழில் சொன்னதைப் போல கணவனுக்கு மனைவிக் கும் இடையே இருக்க வேண்டியது நிபந்தனையற்ற காதல். இது பல கணவன், மனைவிக்குத் தெரியும். ஆனாலும் பல தம்பதிகளுக்குள் இப்படிப்பட்ட காதல் பூப்பதேயில்லையே... அது ஏன்?

ஒரு நாள் இரவு முல்லாவைப் பார்க்க வெளியூரில்இருந்து அவருடைய நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது வீசிய பெரும்காற்றில் விளக்கு அணைந்துவிட்டது. அதை மீண்டும் ஏற்றுவதற்கு முல்லா எந்தப் பிரயத்தனமும் செய்யவில்லை. இதைப் பார்த்த நண்பர்கள், "உன் வீட்டில் விளக்கும் தீப்பெட்டியும் எங்கிருக்கிறது என்று உனக்குத்தானே தெரியும். விளக்கை ஏற்று..." என்று சொன்னார்கள். அதற்கு, "விளக்கும் தீப்பெட்டியும் எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், என் கைகள் எங்கிருக்கிறது என்றுதான் எனக்குத் தெரியாது!" என்றாராம்.

இங்கே பல தம்பதிகளும், 'தாம்பத்தியத்தை சிறக்க வைக்கும் வழிமுறைகள் எங்களுக்குத் தெரியாது' என்று காட்டிக் கொள்வது... முல்லாவுக்கு தனது கை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருந்ததைப் போலத்தான்!

- அமைதி தவழும்...

சிந்தனை செய் மனமே!

தம்பதிகளுக்குள் காதல் தழைத்தோங்க... ஒருவரின் லட்சியத்துக்கு இன்னொருவர் உறுதுணையாகவும் உந்து சக்தியாகவும் இருந்தாலே போதும்.

உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உங்கள் கணவர் முன்னுரிமை கொடுப்பவராக இருந்தால், விடியற்காலையில் வாக்கிங் செல்ல அவருக்கு உற்சாகம் கொடுங்கள். முடிந்தால் நீங்களும் அவருடன் சென்று பாருங்கள். அல்லது சுமாராக படிக்கும் உங்கள் பிள்ளைகள் படிப்பில் கெட்டியாக மாற வேண்டும் என்பதுதான் உங்கள் கணவரின் கனவாக இருந்தால், உங்கள் கணவரின் கனவு நனவாக பாடுப்பட்டுப் பாருங்கள். நிலம், கார் என்று ஏதாவது முதலீடு செய்ய வேண்டும் என்று உங்கள் கணவர் விரும்பினால், செலவுகளைக் குறைத்து சில காசுகள் சேமித்து அவர் கையில் கொடுத்துப் பாருங்கள்.

கலங்கிய நேரத்தில்...
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரு நகரங்களிலும் அமெரிக்காவின் அணுகுண்டு விழுந்ததால், ஒட்டுமொத்த ஜாப்பான் நாடே கலங்கிப் போயிருந்த நேரம் அது. அகியோமோரிடோ என்ற நபர், தொழிற்சாலை துவங்குவதற்காக தீவிரமாக இடம் தேடிக் கொண்டிருந்தார். "இனிமேல் நம் நாட்டுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை. இந்நிலையில், உங்கள் தொழிற்சாலைக்கு என்ன எதிர்காலம் இருந்துவிடப் போகிறது?" என்று பலரும் அவரை பயமுறுத்தினார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் துவக்கிய நிறுவனம்தான் ரேடியோ, டி.வி. என்று தரமான தயாரிப்புகளுக்காக உலக புகழ்பெற்றிருக்கும் ‘சோனி’. அன்று அவர் பயந்திருந்தால்... இன்றைக்கு இப்படி ஒரு நிறுவனமே இருந்திருக்காது.

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
 
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism