"எந்த சீரியல்ல பார்த்தாலும் இந்த நீலிமா பொண்ணுதான் ரீட்டா... பின்னி பெடலெடுக்குது!" - வாசக தோழி ஒருத்தங்க வாயார பாராட்ட, 'நீலிமா... வேர் ஆர் யூ மா?!'னு விட்டேன் ஸ்கூட்டியை!
"சன் டி.வி. நைட் ஸ்லாட்கள்லயே 'இதயம்', 'தென்றல்', 'செல்லமே'னு மூணு சீரியல்கள், இன்னும் பல சேனல்கள்லயும் பல சீரியல்கள்... நான் ரொம்ம்ம்ப பிஸி ரீட்டா!"னு 'தென்றல்' ஷுட்டிங் டீ பிரேக்ல ஜாலி பந்தா விட்டிருந்த நீலிமாகிட்ட, "எல்லா சீரியல்லயும் வீட்டுல மாப்பிள்ள தேடற பொண்ணாவே வர்றீங்களே... ரியல் லைஃப்ல எப்போ கல்யாணம்?"னு கேட்டா, இடியா சிரிக்கறாங்க நீலிமா!
"எனக்குக் கல்யாணமாகி ஒன்றரை வருஷம் ஆகப்போகுது. என் ஹஸ்பண்ட் இசைவாணனும் இதே மீடியா ஃபீல்ட்லதான் இருக்காருங்கறதால, எங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. லைஃபும் ஸ்மூத்தா போயிட்டிருக்கு"னு சொன்ன நீலிமாகிட்ட,
"பெரிய திரையிலயும் இப்போ நீலிமா பிஸி போல!"னு சொன்னா, சட்டுனு பிரைட்டாகுது பொண்ணு.
"யெஸ் ரீட்டா! 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'ஜக்குபாய்'னு சில படங்கள் பண்ணினேன். இப்போ 'வெண்ணிலா கபடி குழு' டைரக்டர் சுசீந்தரன் சார் எடுக்கற 'நான் மகான் அல்ல' படத்துல, கார்த்திக்- காஜல் அகர்வால் ரெண்டு பேருக்கும் ஃப்ரெண்டா ஒரு ரோல் பண்றேன்!"னு சொன்ன நீலிமாவுக்கு 'வாழ்த்துக்கள்' சொல்லிட்டு ஜூட்!
வெள்ளித்திரையிலயும் கலக்குங்க!
"இந்த 'போஸ்' வெங்கட் பையன ரொம்ப நாளா ஆளையே காணாமே ரீட்டா..?!"
- இது இன்னொரு சீனியர் வாசகியோட கவலை. டிங், டிங்... வெங்கட் வீட்டோட காலிங் பெல்லை அழுத்தினேன். தம்பதி சகிதமா வரவேற்றாங்க சோனியாவும் வெங்கட்டும்! "என்னையா தேடி வந்திருக்க?! உன் ஏரியா கவரேஜ்ல இருந்து நான் வெளிய வந்து நாலு வருஷமாச்சே ரீட்டா?!"னு ஆச்சர்யமான வெங்கட்கிட்ட,
"அதான் ஏன்னு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்"னு உரிமையா கோபப்பட்டேன்.
"சினிமாவுல சில நல்ல சான்ஸ்கள் வந்தது ரீட்டா. அதான் சின்னத்திரைக்கு பிரேக் விட்டுட்டேன். இப்போகூட 'சிங்கம்' படத்துல சூர்யாவோட ஒரு நல்ல ரோல் பண்றேன். சினிமா பாஷையில சொல்லணும்னா, 'குணச்சித்திர நடிகர்'. அப்பறம் 'ஆறாவது வனம்' படத்துல ஆன்ட்டி ஹீரோவா நடிக்கிறேன். 'பிள்ளையார் தெரு கடைசி வீடு' படத்துல வில்லன் ரோல். மலையாளப் படங்கள்லயும் நிறையா அழைப்பு கள் வந்துட்டு இருக்கு. இன் னொரு இன்ட்ரஸ்ட்டிங் நியூ ஸும் கேட்டுக்கோ... கூடிய சீக்கிரம் ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறேன். டிஸ்க ஷன் நடந்துட்டு இருக்கு!"னு அடுக்கின வெங்கட்கிட்ட, "அப்போ சீரியல் அவ்ளோ தானா?"னு கேட்க,
|