Published:Updated:

நம்ம வீட்டுத் தோட்டம் !

நம்ம வீட்டுத் தோட்டம் !

நம்ம வீட்டுத் தோட்டம் !

நம்ம வீட்டுத் தோட்டம் !

Published:Updated:

நம்ம வீட்டுத் தோட்டம்!
நந்தினி படங்கள்எம்.விஜயகுமார்
நம்ம வீட்டுத் தோட்டம் !
நம்ம வீட்டுத் தோட்டம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இது எங்க வீட்டு மெடிக்கல் ஷாப் !"

"இது எங்க தோட்டம் இல்ல... மெடிக்கல் ஷாப் 'கம்' காய்கறி மார்கெட்...'' என்று சிரிக்கிறார் சேலம், ஆத்தூரைச் சேர்ந்த அருள்மொழி!

நம்ம வீட்டுத் தோட்டம் !

ஆம்... அவர் கூறுவது போலவே, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் 'கோளியஸ் கிழங்கு செடி', பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் 'கண்வலிகிழங்குச் செடி', பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சை தர உதவும் 'சிறியா நங்கை', 'பெரியா நங்கை' செடிகள், தலைமுடி உறுதியாக இருப்பதற்கு தைலம் காய்ச்சப் பயன்படும் 'மஞ்சள் கரிசலாங்கன்னி செடி', வயிற்றுப் புண் ஆற்றும் 'மணத்தக்காளி கீரை'... இன்னும் வெந்தயக்கீரை, சிறுகீரை, தக்காளி, கத்திரிக்காய், கொத்தவரங்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கடலைச் செடி என்று பசுமையாக சிரிக்கிறது அவர் வீட்டுத் தோட்டம்.

"எங்க அப்பா விவசாயத் துறையில இருந்தவர். அவருதான் என்னோட இந்தச் செடி வளர்ப்புக்கு ரோல் மாடல். எனக்குச் சின்ன வயசுல உடம்பு சரியில்லாம போனா, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போக மாட்டரு. வீட்டுல இருக்கற மூலிகை செடிகள்ல இருந்துதான் மருந்து எடுத்துக் கொடுப்பாரு. அதுலயே சரியாயிடும். அவர் சொல்லிக் கொடுத்த நல்ல பழக்கம்தான் இன்னிவரைக்கும் தினமும் காலையில தோட்டத்துல இருந்து ரெண்டு துளசி இலையைப் பறிச்சு நான் வாயில போட்டுக்கறதுக்கு காரணம்'' என்று பெருமைப்படும் அருள்மொழி,

"என் கல்யாணத்தப்போ எங்கப்பா எனக்கு சொன்ன புத்திமதி, 'நீ போற இடத்துலயும் கண்டிப்பா வீட்டுத் தோட்டம் போட்டுடு'ங்கறதுதான். அதன்படியே புகுந்த வீட்டுலயும் தோட்டம் போட்டேன். இப்பவும் என்னைப் பார்க்க வரும்போது பழம், ஸ்நாக்ஸோட ஏதாவது புது வகையான ரெண்டு நர்சரி செடிகளும் வாங்கிட்டுதான் வருவாரு. இப்ப எங்க தோட்டத்துல இருக்கற பல செடிகளும் அப்படி எங்கப்பா வாங்கிட்டு வந்து கொடுத்து வச்சதுதான்!'' என்று சந்தோஷப்பட்டார் அருள்மொழி.

தொடர்ந்தவர், "இப்போ நானும் என் பிள்ளைக்கு ஏதாச்சும்னா... உடனே ஆஸ்பிட்டலுக்கு ஓடாம, என் தோட்டத்து துணையோட கை வைத்தியமே பார்த்துக்கறேன். இப்போ என் பொண்ணுகிட்ட 'ஃபேவரைட் ஹாபி எது?'னு கேட்டா, 'கார்டனிங்'னு சொல்வா. ஸ்கூல் விட்டு வந்தவொடன தோட்டத்துக்குப் போய் தண்ணி விடறதுதான் அவளோட முதல் வேலை. ஆக, அடுத்த தலைமுறைக்கும் 'விதை' போட்டாச்சு!'' என்றவர்,

"லீவ் நாட்கள்ல ஹாலைவிட, இந்த தோட்டத்துலதான் நான், என் கணவர், பொண்ணுனு எல்லோரும் வந்து கிடப்போம். அவ்ளோ குளுமையா, சந்தோஷமா இருக்கும்!'' என்றார் தன் வீட்டுத் தோட்டத்தின் ஈர மண்ணை ரசித்தபடி!

புரூஸ் லீயின் 'டூப்'!

நம்ம வீட்டுத் தோட்டம் !

தைரியசாலி நடிகரான புரூஸ் லீயிடம், ''இந்தக் காட்சியில் நீங்கள் மிக உயரமான மாடியில் இருந்து குதித்தே ஆக வேண்டும்'' என்று வற்புறுத்தினார் படத்தயாரிப்பாளர். ஆனாலும் ''டூப் போட்டுவிடுங்கள்!'' என்று ஒதுங்கிக் கொண்டாராம் லீ. அந்த அளவுக்கு ஆபத்தான காட்சி அது. இதையடுத்து, அதில் லீக்கு டூப்பாக நடிக்க ஆள் தேடி விளம்பரம் கொடுத்தார்கள். அந்த வேலையை ஏற்க பலரும் தயங்கிய நிலையில், 18 வயது இளைஞன் ஒருவன் நம்பிக்கையோடு வந்து நிற்க... அந்தக் காட்சியும் வெற்றி-கரமாக படமாக்கப்பட்டது. அந்த டூப்... இன்றைக்கு உலக சூப்பர் ஸ்டாராக இருக்கும் 'ஜாக்கி சான்'!

நம்ம வீட்டுத் தோட்டம் !
 
நம்ம வீட்டுத் தோட்டம் !
நம்ம வீட்டுத் தோட்டம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism