ஆனால், படாதபாடுபட்டு படிக்க வைத்தாலும் வேலை கிடைக்கத் தாமதமானால்... ''ம்.. அத்தனை கஷ்டப்பட்டு படிக்க வெச்சதுக்கு, உருப்படியா ஒரு வேலை கிடைக்கலியே..." என்று ஏமாற்றமாகத்தான் இருக்கும்.
இது, இப்படி என்றால்... ''சின்னதா ஒரு முதலீட்டைப் போட்டு சொந்தத் தொழில் தொடங்கலாம்னு பார்த்தா... அதுக்கும் நேரம் வரமாட்டேங்குதே!" என்று புலம்புவார்கள் சிலர்.
வேறு சிலரோ... ''எல்லோரும் சொன்னாங்கனு இருந்ததையெல்லாம் வித்துட்டு, புதுசா ஒரு தொழிலைத் தொடங்கிட்டேன். ஆனா, ஒண்ணும் வளரமாட்டேங்குதே...'' என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
இத்தகையோருக்கெல்லாம்... புரவலராக மாறி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் 'கஞ்சனூர்' சுக்கிரன். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், ஆடுதுறை அருகில் இருக்கிறது கஞ்சனூர் (கம்ஸபுரம் என்பது கம்ஸனூர் ஆகி இப்போது கஞ்சனூர் என மருவிவிட்டதாம்). இங்கே மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது கற்பகாம்பாள் உடனுறை அக்னீஸ்வரர் திருக் கோயில். தெற்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந் தால்... கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் கற்பகாம் பாள் அருள் பொங்க காட்சியளிக்கிறாள். கொஞ்சம் தள்ளி லிங்க வடிவில் தனி சந்நிதியில் அக்னீஸ் வரன். இரண்டுக்கும் இடையில் இருக்கிறது பக்தர் கள் துயர் துடைக்கும் அந்தச் சந்நிதி. அது... ஈஸ்வரன், சுக்கிரனாக வடிவெடுத்து, உமையாளோடு வீற்றிருக் கும் அற்புத சந்நிதி. இறைவனே சுக்கிரனாக வீற்றிருப் பதால், கோயிலின் முக்கியத்துவம் கூடுகிறது.
|