Published:Updated:

அழகே... ஆரோக்கியமே...

அழகே... ஆரோக்கியமே...

அழகே... ஆரோக்கியமே...

அழகே... ஆரோக்கியமே...

Published:Updated:

அழகே...ஆரோக்கியமே
ராஜம் முரளி
அழகே... ஆரோக்கியமே...
அழகே... ஆரோக்கியமே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருத்த முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள் !

அழகே... ஆரோக்கியமே...

வீட்டு வேலை, அலுவலக வேலை... எந்த வேலையாக இருந்தாலும், பெண்களுக்கு அது ஓய்வின்மை மற்றும் சோர்வைத் தவறாமல் தந்துவிடும். அது அவர்களின் சரும நலனையும் பாதிக்கும். எனவே, அடிக்கடி தங்களை 'ரெஃப்ரெஷ்' செய்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கான சரும பாதுகாப்பு வழிகள் இங்கே...

பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்றிருப்பவர்களுக்கு டிடர்ஜென்ட் சோப் மற்றும் பவுடர் அவர்களின் கைகளை சொரசொரப்பாக்குவதுடன், வெடிப்புகள்கூட தோன்ற வைக்கலாம். இதிலிருந்து தீர்வுபெற, கால் டீஸ்பூன் பாதாம் எண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சூடு பறக்க தேய்க்கவும். கொதிக்கும் தண்ணீரிலிருந்து வெளியேறும் ஆவிக்கு மேலே உள்ளங்கைகளை நீட்டவும். இதன் மூலம் கைகள் பட்டு போல் மென்மையாக மாறும்.

ஓயாத அலைச்சலால் முகம் கருத்துப் போனவர்கள், கஸ்தூரி மஞ்சளை ஒன்றிரண்டாக ஒடித்து மிக்ஸியில் பொடியாக்கவும். இதில் தயிரைக் கலந்து முகத்தில் பூசி, பத்து நிமிடம் கழித்து மெல்லிய மஸ்லின் துணி (அ) பஞ்சு கொண்டு ஒற்றி எடுக்கவும். பிறகு, தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தடவினால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

கணினியில் வேலை செய்யும் பெண்கள், புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கம்ப்யூட்டரை பார்ப்பதால் முன்நெற்றியில் கோடுகள், புருவத்தின் கீழ் சுருக்கம் தோன்றலாம். இவற்றைத் தவிர்க்க, இரண்டு உள்ளங்கையிலும் தேங்காய் எண்ணெயைத் தடவி, நெற்றியின் நடுப்பகுதியில் கையால் நீவிவிட்டால்... கோடுகள் மறைந்துவிடும். கூடவே, வெதுவெதுப்பான தண்ணீரில் பஞ்சை நனைத்து கண் - புருவத்துக்கு இடையில் ஒற்றி எடுக்கலாம். அதை முடித்ததும், கட்டைவிரலில் வெண்ணெயைத் தடவி, நெற்றியின் மேல்பக்கமாக நீவலாம். சுருக்கம் தானாக மறைந்துவிடும்.

முகத்தின் தாடை, கை, கால், உதட்டின் மேல் தேவையற்ற முடிகள் முளைத்து அழகைக் கெடுத்துவிடும். கடலைமாவையும், மஞ்சள் தூளையும் சம அளவு எடுத்து, வெதுவெதுப்பான பாலில் கலந்து பேஸ்ட்டாக்கவும். இதை, முடிஇருக்கும் இடங்களில் பரவலாகப் பூசி, அரை மணி நேரம் கழித்து, சின்னச் சின்ன வெள்ளைத் துணிகள் கொண்டு, எதிர்பக்கமாகத் துடைத்து எடுக்கவும். சிலருக்கு இதனால் எரிச்சல் ஏற்படலாம். எனவே துடைத்தெடுத்தபின் பாதாம் எண்ணெயைத் தடவினால் எரிச்சல் இருக்காது. அந்தப் பகுதியில் முடிகளும் குறைந்துவிடும்.

காதின் ஓரங்களில் வரிசையாக காதணி அணிவது சிலருக்குப் பிடித்தமான விஷயம். இதற்காக துளையிடும்போது, காது புண்ணாகிவிடும். கடுக்காய் பவுடரை பாலில் கலந்து புண்ணில் பூசி, காய்ந்ததும் கழுவினால்... தோல் மென்மையாகி புண் விரைவில் ஆறிவிடும்.

- மிளிரும்...

அழகே... ஆரோக்கியமே...
 
அழகே... ஆரோக்கியமே...
அழகே... ஆரோக்கியமே...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism