Published:Updated:

என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?

என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?

என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?

என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?

Published:Updated:
என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?
என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?
சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...
வாசகிகள் பக்கம்

இன்று பாகற்காய்... நாளை பலாப்பழம் !

என் டைரி 219-ன் சுருக்கம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?

''மூத்த அண்ணன் விபத்தில் இறந்துவிட, இரண்டு குழந்தைகளுடன் தனி மர மாகக் கஷ்டப்படும் அண்ணியுடனேயே தங்கி வேலைக்குச் சென்று வந்தேன். பெற் றோர் ஆலோசனைப்படி, மாத சம்பளத்தில் ஒரு தொகையை தந்து உதவியும், என்னை இளக்காரமாகவே நினைக்கும் அண்ணி, அக்கம்பக்கத்தினரிடமும் என்னைப் பற்றித் தவறாகச் சொல்லி வருகிறார். அங்கிருந்து வந்துவிடலாமென்றால்...'அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ' என்கிறார்கள் என் பெற்றோர். நான் என்ன செய்யட்டும் தோழிகளே?''

 

'வாழ்க்கைப் பயணத்தில் அன்புக் கணவன், பாதியில் 'அம்போ' என்று விட்டுப் போன சோகமும், ஆடம்பர வாழ்வைத் தொடர முடியவில்லையே என்ற ஏக்கமும்தான் உன் அண்ணியின் ஆழ்மனதில் பதிந்து போயிருக்கிறது. அவர் சூழ்நிலையில் யார் இருந்தாலும் போக்கு இப்படித்தான் இருக்கும். அவருடைய கோணத்தில் இருந்து உன்னைப் பார். சிக்கன விஷயத்தில், நாம்தான் தண்டச் செலவு செய்து பழகி விட்டோம். கணவரின் தங்கைக்காவது சேமிப்பின் அருமை புரியட்டும் என்று நினைத்திருக்கலாம். 'இன்று வயதானவருடன் காரில் வந்து இறங்குபவள், நாளை ஒரு இளைஞனுடன் பைக்கில் வந்து இறங்கிவிடுவாளோ?' என்ற ஒருவித பயமும் இருந்திருக்கலாம்.

'அண்ணிக்கு உதவியாக' என்று பெற்றோர் உன்னை அனுப்பி வைத்தாலும், உன்னுடைய பாதுகாப்பை அண்ணியின் கையில் ஒப்படைக்கும் வகையில்தான் அதைச் செய்துள்ளனர். அந்த நற்பணியைத்தான் அண்ணி செய்து கொண்டிருக்கிறார். எனவே, திருமணம் வரை பொறுமையைக் கடைபிடித்து, அண்ணியுடனேயே இரு. வலிமையும், உணர்ச்சியும் சாதித்ததைவிட பொறுமையும், சகிப்புத்தன்மையுமே சாதித்திருக்கின்றன என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. இன்று பாகற்காயாக கசக்கும் அண்ணி, நாளையே பலாப்பழமாக இனிக்கலாம். யார் கண்டது?

- ஜி.கே.எஸ்.பரிமளா மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

'காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறி' என்பார்கள். உதட்டளவு உறவும் உறவல்ல. சரிப்பட்டு வராத உறவை வெட்டி எறிவதும் தவறல்ல. உள்ளத்தில் உயரிய இடத்தை நமக்குத் தருபவர்கள்தான் உண்மையான உறவினர்கள். கல்யாணம் ஆக வேண்டிய பெண் எனத் தெரிந்தும், அக்கம் பக்கத்தினரிடம் தவறாக சொல்லும் அண்ணி, நாளை திருமணத்துக்காக பெண் பார்க்க வருபவரிடம் ஏதேனும் உங்களைப் பற்றித் தவறாகச் சொல்லமாட்டார் என்பது என்ன நிச்சயம்?

பெற்றோரிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி நல்லதோர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள். 'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பார்கள். பொருளாதார ரீதியாக உதவும் உனக்கு நன்றிக் கரம் நீட்டாவிட்டாலும், வார்த்தைகளால் சுடாமலிருக்கலாம் அல்லவா!

மதிக்கத் தெரியாதவர்களை மறந்து விடு. மன்னித்து விடு. சிறந்ததோர் துணையை தேடிக் கொள். அதுவே உன் மனதுக்கு நிம்மதியை தரும்.

- சுகந்தாராம், சென்னை- 59


என் டைரி -220
வாசகிகள் பக்கம்

விதவை மகள்...விபரீத நட்பு ?

பெற்ற மகள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து மனம் மகிழாத தாயும் உண்டா? ஆனால், என் மகளின் சிரிப்புகூட என் மனதை ரணமாக்கிக் கொண்டிருக்கிறது.

என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?

ஒரே மகள். பாசத்தைக் கொட்டி வளர்த்து, சீரும் சிறப்புமாக மணமுடிக்க நினைக்கையில், ஒரு வட இந்தியரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு வந்து நின்றாள். எங்களின் ஆதங்கம், வேதனை அத்தனையையும் அவளிடம் கொட்டி அழுதபோது, இரக்கமில்லாமல், தன் கணவருடனேயே சென்றுவிட்டாள். வீட்டில் ஒற்றைப் பறவையாக ஓடித் திரிந்த அருமை மகளின் பிரிவு எங்களை வாட்டி வதைக்க, நாங்கள் மனம் மாறி அழைத்தபோதும் வர மறுத்துவிட்டாள். முதல் ஆண் குழந்தை நடக்க ஆரம்பிக்கும் வரை எங்களுக்கும் அவளுக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. பேத்தியும் பிறந்து கணவரின் வேலை நிமித்தம் அவளும் சென்னையில் வந்து செட்டிலாக, நாங்களும் பாசத்தில் போய் பார்க்க... இரு குடும்பங்களும் ஒன்றானது. வட இந்தியரை மணந்தாலும், தமிழ் கலாசாரத்தை அவள் துளியும் மறக்கவில்லை.

மகளின் சந்தோஷத்தைப் பொறுக்காத விதி, விபத்து ரூபத்தில் வந்தது. நான்கு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் மருமகன் இறந்துவிட, அதிர்ச்சியில் எங்கள் குடும்பமே மீளாத்துயரத்தில் மூழ்கிவிட்டது. அவளுடைய கணவன் வீட்டு சொத்து கொஞ்சம் இருந்ததால், பொருளாதார ரீதியில் எந்த கஷ்டமுமில்லை. மன மாற்றத்துக்காக எங்களுடன் வந்து தங்கிக் கொள்ளச் சொல்லியும் மறுத்துவிட்டாள். அவளுக்குத் துணை யாக, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, அவள் வீட்டிலேயே நாங்கள் தங்கி விட்டோம்.

மகளை கம்ப்யூட்டர் கிளாஸ் ஒன்றில் சேர்த்துவிட்டதோடு, டிகிரியோடு நிறுத்திய படிப்பை தொடர ஏற்பாடு செய்தோம். கடந்த ஆறு மாதங்களாக, இருபத்திநாலு மணிநேரமும் முகம் தெரியாத மனிதர்களுடன் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு, கம்ப்யூட்டர் முன்பு பழியாகக் கிடக்கிறாள். வயது வந்த பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவழிக்காமல், அவர்கள் படிப்பு பற்றி பேசாமல் இருப்பது, எங்களுக்கு அவள் மீது கோபத்தைதான் வரவழைக்கிறது.

இப்போது, அவளுடன் படித்த நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு, இரண்டு ஆண்கள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நடை, உடை, பாவனை மாறி... எப்போதும் அக்கறையாக தன்னை அலங்கரித் துக் கொள்கிறாள். பழைய வாழ்க்கையை மறந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், உள்ளுக்குள் லேசாக ஒருவித பயம் எங்களை தொற்றிக் கொண்டுவிட்டது. எங்கள் முன்னரே எல்லோருடன் பேசுவதால், அவளை தப்பாகவும் நினைக்க முடியவில்லை. நட்புரீதியான பேச்சுதான் என்றாலும், மற்றவர்கள் புறணிப் பேச்சுக்கு ஆளாகக் கூடிய விபரீத நட்பாகிவிடுமோ என்று பயப்படுகிறோம்.

மறுமணம் செய்து கொள்ளவும் மறுப்பதுடன், ''இப்பதான் நான் சந்தோஷமா இருக்கேன். அதை கெடுத்துடாதீங்க'' என்கிறாள்.

'நல்ல நட்பு நல்லன எல்லாம் தரும். ஆனால், கூடா நட்பு குழி பறிக்கவும் தயங்காது' என்பதை அவளுக்கு எப்படி புரிய வைப்பது?

குழப்பத்துக்கு விடை சொல்லுங்கள் தோழிகளே...

- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்' வாசகி

என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?
என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?
 
என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?
என் டைரி 220 - விதவை மகள்...விபரீத நட்பு ?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism