Published:Updated:

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

Published:Updated:

ஜோதிடம்
'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசி பலன்கள் !

பிப்ரவரி 17-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை

மேஷம் அதிமேதாவித்தனம் அதிகம் உள்ள நீங்கள், அடுத்தவர் மனதைப் புரிந்து கொள்பவர்கள்!

முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. மாமனார், மாமியார் மதிப்பார்கள். முற்பகுதியில் வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும் பிற்பகுதியில் பணப்புழக்கம் அதிகமாகும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். கேது வலுவாக நிற்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். செவ்வாய் நீச்சமாகி நிற்பதால் உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமை யும். எதிர்பாராத வெற்றி கிட்டும் வேளையிது.

ரிஷபம் கலை ஆர்வம் கொண்ட நீங்கள், எந்த விஷயத்தையும் புதிய கோணத்தில் யோசிப்பீர்கள்.

சூரியன், புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புது முயற்சிகள் நிறைவேறும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். செவ்வாய் வலுவாக நிற்பதால் வீடு, மனை விற்பது வாங்குவது லாபத்தில் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் நிற்பதால் உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை கொடுக்க முயல்வீர்கள். 10-ல் நிற்கும் குருவால் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். சாதிக்கத் தூண்டும் நேரமிது.

மிதுனம் பொறுமை காக்கும் குணம் கொண்ட நீங்கள், பிறர் நலன் பேணுவதில் வல்லவர்கள்.

குரு பகவான் சாதகமாக இருப்பதால் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர் களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்விக சொத்தை சீர் செய்வீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். வெள்ளியிலான பொருட்கள் வாங்கு வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். ராசிக்குள் கேது நிற்பதால் படபடப்பு, வீண் பயம், அலட்சியம் வந்து போகும். 4-ல் சனியும், 2-ல் செவ்வாயும் இருப்பதால் முன்கோபம் வரும். வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத் தில் ஓரளவு லாபம் வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படலாம். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பழைய பிரச்னை ஒன்று தீரும் வேளையிது.

கடகம் நீதி, நியாயம் பேசும் நீங்கள், உலக நடப்பை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.

சுக்கிரன் 8-ல் மறைந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். 8-ல் குரு நிற்பதால் அநாவசிய செலவுகளைத் தவிருங்கள். கணவருடன் விவாதம் வந்து நீங்கும். கேட்டதை வாங்கித் தந்து பிள்ளைகளை உற்சாகப்படுத்துவீர்கள். நண்பர்கள், உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் உடல் உபாதை வந்து நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனம் தேவை. சனி பகவான் வலுவாக நிற்பதால் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஷேர் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். இடம் மாற்றம் உண்டு. நட்பு வட்டம் விரியும் தருணமிது.

சிம்மம் எதிலும் தெள்ளத் தெளிவாக முடிவு எடுக்கும் நீங்கள், யார் நிழலிலும் வாழ மாட்டீர்கள்.

குரு பகவான் வலுவாக நிற்ப தால் தொட்ட காரியம் துலங்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. புது சொத்து வாங்குவீர்கள். கணவர் உங்கள் புது முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். மகளுக்கு நல்ல வரன் அமையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டுக்குத் தேவையான அடிப்படை சாதனங்களை வாங்குவீர்கள். 17, 18 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிருங்கள். லாப வீட்டில் உள்ள கேதுவால், உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். 5-ல் நிற்கும் ராகுவால் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். செவ்வாய் 12-ல் நிற்பதால் வீண் செலவு, தூக்கமின்மை வந்து நீங்கும். பாதச்சனி நடைபெறுவதால் யாரையும் நம்பி முக்கி முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தடைகள் உடைபடும் தருணமிது.

கன்னி வசீகரமாகப் பேசி எல்லோரையும் கவரும் நீங்கள், இளகிய மனசுள்ளவர்கள்.

6-ம் வீட்டில் சூரியன் நுழைந்ததால் சோர்வு நீங்கும். கடன் பிரச்னையைத் தீர்க்க புது வழி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். செவ்வாயின் ஆதிக்கம் சாதகமாக இருப்பதால் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. கேது 10-ல் நிற்பதால் புது வேலைக்கு விண்ணப்பம் செய்வீர்கள். குருவும், சுக்கிரனும் மறைந்திருப்பதால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். 19-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் மறைவதால் உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 19-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 9 மணி வரை பயணங்களில் கவனம் தேவை. 24-ம் தேதி முதல் சந்திரனின் பலம் கூடுவதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வரலாம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் வேளையிது.

துலாம் தோல்வி கண்டு துவளாத நீங்கள், அனுபவ அறிவு அதிகம் உள்ளவர்கள்.

செவ்வாய் 10-ம் வீட்டில் தொடர்வதால் அச்சப்படாமல் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் கம்பீரம் கூடும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். குரு பகவான் சாதகமாக இருப்பதால் மகன் பொறுப்பாக நடந்து கொள்வார். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மை யான பாசத்தை இப்போது உணர்வார்கள். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். 21-ம் தேதி காலை 9 மணி முதல் 23-ம் தேதி மதியம் 2 மணி வரை யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் பிள்ளைகளால் டென்ஷன், காரிய தாமதம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது தொழிலில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வசதி, வாய்ப்பு பெருகும் நேரம் இது.

விருச்சிகம் எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே!

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீடு வாங்க லோன் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். 23-ம் தேதி மதியம் 2 மணி முதல் 25-ம் தேதி மாலை 5 மணி வரை எதிலும் நிதானித்து செயல்படுங்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் கணவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசலாம். குரு 4-ல் இருப்பதால் அலைச்சலும், டென்ஷனும் தொடரும். செவ்வாய் நீச்சமாகி நிற்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வரும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தன்னம்பிக்கை தேவைப்படும் தருணமிது.

தனுசு காலம் பொன் போன்றது என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் நேர்பாதையில் செல்வீர்கள்.

உங்களின் யோகாதிபதி சூரியன் 3-வது வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசாங்க காரியங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். இழுபறியாக இருந்த காரியங்கள் கைகூடும். புது நகை வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். ராசிக்குள் ராகு நிற்பதால் கணவரை அனுசரித்துப் போவது நல்லது. 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி இரவு 7.30 மணி வரை எதிலும் பொறுமையுடன் செயல்படுங்கள். 8-ல் செவ்வாய் நிற்பதால் வாகனம் பழுதாகலாம். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வேளையிது.

மகரம் மண்ணை மதிக்கும் நீங்கள், மனித நேயம் அதிகம் உள்ளவர்கள்.

சுக்கிரன் தன ஸ்தானத்தில் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கணவருக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். சொத்துத் தகராறு தீரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புதன் சாதகமாக இருப்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கேது 6-ல் நிற்பதால் உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 2-ல் சூரியன் நிற்பதால் காரசாரமான பேச்சுகள் வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 27-ம் தேதி இரவு 7.30 மணி முதல் 1-ம் தேதி வரை அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அந்தஸ்து ஒரு படி உயரும் வேளையிது.

கும்பம் சகிப்புத்தன்மை உடைய நீங்கள், சண்டைக்காரர்களிடமும் சகஜமாகப் பேசுவீர்கள்.

செவ்வாய் 6-ல் நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள் விலகும். உங்களின் மனோபலம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பணத்தட்டுப்பாடு ஒரளவு குறையும். சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. ஜென்ம குருவும், அஷ்டமத்துச் சனியும் தொடர்வதால் எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர் ஏற்படலாம். ராகு 11-ல் நிற்பதால் பழைய வழக்குகளில் வெற்றி கிட்டும். 2-ம் தேதி எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். ராசிக்குள் சூரியன் இருப்பதால் முன்கோபம், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும். போராடி வெற்றி பெறும் நேரமிது.

மீனம் பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிவதில் வல்லவர் நீங்கள்.

சுக்கிரன் மறைந்திருப்பதால் வாகன வசதி பெருகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் வரும். 12-ல் குருவும், சூரியனும் பலவீனமாக இருப்பதால் முன்கோபம், வீண் கவலை, காரியத் தடை வந்து நீங்கும். கேது 4-ல் நிற்பதால் பழைய கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். சனி பகவான் 7-ல் நிற்பதால் கணவர் கொஞ்சம் எரிந்து விழுவார். உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். தூக்கம் குறையும். சந்திரன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார். மாறுபட்ட அணுகுமுறையால் விட்டதைப் பிடிக்கும் வேளையிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
 
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism