அமுக்கிராங்கிழங்கு சூரணம் அரை ஸ்பூன் எடுத்து, தேன்ல கலந்து காலை நேரத்துல சாப்பிட்டு வந்தா... இந்தக் கோளாறெல்லாம் காணாமப்போயிரும்.
கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ரெண்டையும் சம அளவு எடுத்து அரைச்சி, அதுல நெல்லிக்காய் அளவு எடுத்து, பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா... கல்லடைப்பு, கல்லீரல் வீக்கமெல்லாம் சரியாயிரும்.
கோவை இலை 100 கிராம், சீரகம் 20 கிராம், சின்ன வெங்காயம் 3... இது மூணையும் ஒண்ணா சேர்த்து இடிச்சி, சாறு பிழிஞ்சுக்கோங்க. இதக் காலைல, சாயங்காலம் வெறும் வயித்துல சாப்பிட்டு வந்தாலும் கல்லடைப்பு நோயெல்லாம் சரியாயிரும். இதச் சாப்பிடும்போது பேதியாகும். அதுக்காக பயப்படத் தேவையில்ல. இதை மூணு நாள் குடிச்சுட்டு, மூணு நாள் இடைவெளிவிட்டு திரும்ப மூணு நாள் குடிக்கணும். குணம் தெரியற வரை இதேமாதிரி இடைவெளி விட்டு விட்டுக் குடிக்கணும்.
கொடிகள்ளியை எடுத்து தீயில வதக்கி சாறு பிழிஞ்சி ஒரு ஸ்பூன் எடுக்கணும். அதோட விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து காலைல வெறும் வயித்துல சாப்பிடணும். இதச் சாப்பிடும் போதும் பேதியாகும். கவலைப்படக் கூடாது. மூணு நாள் சாப்பிட்டு, மூணு நாள் இடைவெளி விட்டு நோய் தீருற வரை குடிக்கணும்.
|