Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

Published:Updated:

26-03-2010
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அனுபவங்கள் பேசுகின்றன !
அனுபவங்கள் பேசுகின்றன !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவங்கள் பேசுகின்றன !

அசர வைத்த அங்கோர்வாட்!

அனுபவங்கள் பேசுகின்றன !

சென்ற வருடம் நானும் என் கணவரும் கம்போடியா நாட்டுக்குச் சென்றிருந்தோம். உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெரிய கோயிலான 'அங்கோர்வாட்' ஆலயத்துக்குச் சென்றது, மகானுபவம்! அது ஒரு இந்துக் கோயில்! 'மகாமேரு' கட்டமைப்பில் கோபுரங்கள், கலை சிற்பங்கள் என்று அழகு கூட்டியதுடன், கோயில் சுவரெங்கும் மங்கி காட் (அனுமார்), அசுரா காட் (ராவணனுக்கு மேல்நோக்கி 10 தலைகள்), லார்ட் ஆஃப் லவ் (சிவன் மன்மதனை எரித்த கதை), எலிஃபன்ட் காட் (விநாயகர்) என்று ராமாயண, மகாபாரத, தசாவதார காட்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அனுபவங்கள் பேசுகின்றன !

கரடுமுரடான மலைப்பாதையில் 45 நிமிடங்கள் நடந்து 'கபல் ஸ்பியன்' என்ற ஆற்றுக்குச் சென்றோம். ஓடும் நீரின் அடியில், ஆற்றுப் படுகையில் வரிசையாக, வட்ட வட்டமாக 1008 லிங்கங்கள், அருகே இருந்த பாறைகளில் விஷ்ணு, லஷ்மி, பிரம்மா, உமா மகேஸ்வரன் என்று அழகிய சிற்பங்கள்... என சூழ்நிலைகளும், காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்தன.

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டிலும் நமது கலாசாரத்தின் பதிவுகள் நிமிர்ந்து நிற்பதை எண்ணிப் பெருமையாக இருந்தது.

- நந்தினி மணிவண்ணன், வேலூர்

12 மணிக்கு மேல் வந்த பெங்குயின்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் மகள் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட, மூன்று வருடங்களுக்கு முன் மெல்பேர்ன் நகருக்குச் சென்றேன். மகளைப் பார்க்கப்போகும் சந்தோஷத்தைவிட, 'ஃப்ளைட்ல போகணும்...' என்ற என் நீண்ட நெடுநாள் ஆசை நிறைவேறப்போவதில் குஷியோ குஷி எனக்கு! ''அம்மா, மெல்பேர்ன் வரும்போது யார்கிட்டயாச்சும் ஜன்னல் ஸீட்டை கேட்டு உட்கார்ந்துக்கோ. ஒளிவிளக்குல ஊரே பிரகாசமா தெரியும்'' என்று என் பெண் வேறு ஆசைகாட்ட, ஃப்ளைட் பாங்காக்-ல் இருந்து மெல்பேர்ன் கிளம்பியதும் ஒருவரிடம் கெஞ்சி கேட்டு 'விண்டோ ஸீட்' வாங்கிவிட்டேன். ஊருக்குள் நட்சத்திரங்களைத் தூவி விட்டதுபோல, மெல்பேர்ன் நகரம் விளக்கொளியில் ஜொலித்த காட்சியைக் காண கண்கள் இரண்டு போதவில்லை எனக்கு! ஒன்பது மணி நேரம் வானத்தில் மிதந்துவிட்டு பூமியில் இறங்கியபோது, மனதெல்லாம் பூரிப்பு!

அங்கே... பார்க், பீச் என்று அழைத்துச் சென்றாள் மகள். அதிலும், அங்குள்ள ஒரு பீச்சில் இரவு 12 மணிக்கு மேல் பெங்குயின்கள் வரும் என்பதால் முன்பே போய் காத்திருந்தோம். ஆயிரக்கணக்கான பெங்குயின்கள் படையெடுத்து தத்தி தத்தி வந்த அந்தக் காட்சி... ஸோ க்யூட்! அடுத்ததாக, 'க்ரீக் ஓஷன் ரோடு'... ஒரு பக்கம் சமுத்திரம், இன்னொரு பக்கம் மலை என சுவாரஸ்யமான காட்சி அது!

- சுந்தரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை-61

தித்தித்த திபெத்!

அனுபவங்கள் பேசுகின்றன !

சென்ற வருடம் திபெத் நாட்டுக்குச் சென்றிருந்தோம். 'குஷால் நகர்' எனும் இடத்தில் அமைதியான சூழலில் இருக்கும் 'திபெத்தியன் செட்டில்மென்ட்'டுக்குள் நுழைந்தபோது, ஏதோ சீனாவுக்கே சென்றதுபோல ஒரு அனுபவம். இங்கு புத்த மத போதனைகள் கற்பிக்கப்படுகின்றன. ஊசி விழுந்தால்கூட கேட்கக்கூடிய நிசப்தத்தை நாங்களும் தொந்தரவு செய்யாமல் சென்றோம். 60 அடி உயரமான பிரமாண்டமான கோல்டன் புத்தர் சிலைகள், கண்ணைக் கவரும் கலர்ஃபுல் ஓவியங்கள், சுவரெங்கும் பெரிய பெரிய பெயின்ட்டிங்குகள்... என ரசிக்க வைக்கும் இடம் அது. கதவும், கைப்பிடிகளும்கூட சிற்பியின் சிந்தனைக்கு மகுடம் வைத்ததுபோல இருந்தது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் புத்த துறவிகள் உட்காரக்கூடிய பிரமாண்டமான ஹால், சாந்தம் தவழும் புத்த துறவிகளின் அணி வகுப்பு, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய நெடுந்தூண்கள் என மனதுக்கு அது ஒரு புதுவிதமான தரிசனம். வருடத்துக்கு ஒருமுறை தலாய்லாமா அங்கு வந்து போவாராம்.

ஊரை விட்டுக் கிளம்பும்போதே, 'மறுபடியும் இங்க வரணும்' என்று எங்களை ஏங்க வைத்த அந்த திபெத் டூர், எங்களுக்கு ஒரு தித்திப்பான அனுபவம்!

- பாரதி சேகர், பெங்களூரு

மூன்று வாசல் திறந்தால்... முழு உருவம்!

திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி கோயில்தான், நாங்கள் சென்ற கேரள சுற்றுலாவில் எங்களை ஈர்த்த முக்கியமான இடம்! அது ஒரு ஆன்மிக ஆச்சர்யம் என்றுதான் சொல்லவேண்டும். மூலவர், பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரின் தலை, கால், உடம்பு என மூன்று பாகங்களையும் பார்க்க வேண்டுமானால்... மூன்று வாசல்களையும் திறக்க வேண்டும். அத்தனை பிரமாண்ட சிலை அது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தக் கோயில் கோபுரத்தின் ஐந்து நிலைகளுக்கும் பக்தர்கள் போய் வரலாம். நிலைக்குச் செல்ல அகலமான மரத்தினாலான உள் படிக்கட்டுகளில் ஏறும்போது, ஏதோ ராஜகாலத்து கோட்டையின் ரகசிய அறைகளுக்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது நமக்கு! ஒவ்வொரு நிலையும் ஒரு நெடிய ஹால் போல இருக்கிறது! ரத வீதிக்கு வெளியே நெடுங்கோட்டை சுவர்கள் நிமிர்ந்து நிற்கின்றன.

கோயிலுக்குள் பெண்கள் சேலை உடுத்திதான் செல்ல வேண்டும். மற்ற உடைகள் 'நாட் அலவ்டு'. ஆண்கள் வேட்டி அணிந்தும், மேல் சட்டை துறந்தும் செல்ல வேண்டும். மொத்தத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரியமும், கலாசாரமும் ஒரே இடத்தில் குவிந்தது போன்ற உன்னத அனுபவம் தந்தது அந்தக் கோயில்!

- கே.எம்.லட்சுமி, நாகர்கோவில்

''வேணாம்... படகு சாய்ஞ்சுடும்!''

சம்மர் வந்தாலே எங்கள் வீட்டில் டூர் வண்டி கிளம்பிவிடும். அப்படித்தான் மலைகளின் ராணியான ஊட்டிக்கு சென்றிருந்தோம். மலை ரயிலில் சென்றபோது, 'பளிச்' நீல நிற ஆகாயம், அடர்ந்த மரம் செடிகள், சுத்தமான, குளுமையான காற்று என ஏதோ டார்ஜிலிங் போய்விட்டு வந்த உணர்வு ஏற்பட்டது (இதுவரை நாங்கள் டார்ஜிலிங் சென்றதில்லை என்றாலும்கூட!). பதினெட்டு டிகிரி பனியிலும் ஒரு பரவசம். எப்போதுமே மழை மென்தூறல் போட, ஈரம் படிந்த ரோட்டில் நடந்து சென்றது ஒரு சுகானுபவம்.

அனுபவங்கள் பேசுகின்றன !

நாங்கள் போயிருந்தபோது 'ஃப்ளவர் ஷோ' நடந்து கொண்டிருந்தது. மல்லி, முல்லை, கனகாம்பரம் என்று பத்து பூக்களுக்கு மேல் பார்த்தறியாத எங்களுக்கு, ஆயிரமாயிரம் பூக்களை ஒரே இடத்தில் கண்டபோது, பரவசம் பொங்கிவிட்டது. கூடவே, ஏரோப்ளேன், ராக்கெட்டுகள், தேர், மிருகங்களை எல்லாம் பூக்களாலேயே வடித்திருந்ததை குழந்தைகள் ரொம்பவே ரசித்தார்கள்.

போட்டிங் பயணத்திலோ, பிறவிப் பயனை அடைந்த சந்தோஷம். ஆனால், எவ்வளவோ வற்புறுத்தியும் போட்டில் ஏறாமல், ''வேணாம்... அப்புறம் படகு சாய்ஞ்சுடும்!'' என்று மழுப்பிய 'குண்டு மாமா'வின் 'செல்ஃப்' கிண்டலும், ஊட்டி போய் வந்த உற்சாகமும் இன்றும் எங்களுக்கு பசுமை நினைவுகள்தான்!

- வளர்மதி ராஜா, கரூர்

அனுபவங்கள் பேசுகின்றன !
 
அனுபவங்கள் பேசுகின்றன !
அனுபவங்கள் பேசுகின்றன !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism