ஜாய்ஃபுல் 'சிங்க'ப்பூர்..!
இரண்டு சிங்கங்களுக்கு நடுவில் பயமே இல்லாமல், தைரியமாக போஸ் கொடுப்பது நான்தான். பத்து ஆண்டுகளுக்கு முன், என் மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஊரைச் சுற்றிப் பார்க்க என்னை அழைத்து சென்றான். ஒரு பார்க்கில் இரண்டு கற்சிலை சிங்கங்களுக்கு நடுவில் என்னை நிறுத்தி போட்டோ எடுத்தான். இந்தப் போட்டோவை பார்க்கும்போதெல்லாம் சிரிப்புடன் மனதில் ஒரு தைரியம் பிறக்கும்.
- எஸ்.அறிவுக்கொடி திண்டுக்கல்-1
|