Published:Updated:

காலேஜ் ஸ்டார்!

காலேஜ் ஸ்டார்!

காலேஜ் ஸ்டார்!

காலேஜ் ஸ்டார்!

Published:Updated:

26-03-2010
காலேஜ் ஸ்டார் !
காலேஜ் ஸ்டார்!
காலேஜ் ஸ்டார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ரேகாவுக்கு ரொம்ப சாஃப்ட் வாய்ஸ்! ஆனா, கிரவுண்ட்ல இறங்கிட்டா செம்ம்ம்ம ஃபாஸ்ட் டிராக்! எங்க எல்லாருக்குமே அவ ஃப்ரெண்ட்... இல்ல இல்ல... பெஸ்ட் ஃப்ரெண்ட்!"

காலேஜ் ஸ்டார்!

- இப்படியரு 'பில்ட்-அப்'போட... நாமக்கல், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில இரண்டாம் ஆண்டு எம்.காம்., சி.ஏ. (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) படிக்கற ரேகாவை நமக்கு அறிமுகப்படுத்தினாங்க அவரோட தோழிங்க!

நவ், ரேகா டாக்ஸ்...

"எனக்குச் சொந்த ஊரு மதுரை. நான் ஸ்கூல் டேஸ்லயே நிறைய ஸ்போர்ட்ஸ்ல வின் பண்ணியிருக்கேன். ஈரோடு கந்தன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல பி.காம். சேர்ந்தப்பவும் அத்லெட்டிக்ஸ்ல நிறைய பரிசுகள் வாங்கினேன். குறிப்பா, ஓட்டப்பந்தயம் என் ஃபேவரைட். கிரிக்கெட்ல நான் 'போலிங்' பண்றத பார்க்கவே, கிரவுண்ட்ல ஒரு தனிக் கூட்டம் காத்திட்டு இருக்கும்!"னு சிரிச்ச ரேகா, அடுத்து சொன்ன அவங்களோட ஸ்போர்ட்ஸ் புரொஃபைல் நம்மள மலைக்க வச்சுடுச்சு!

"2004-ம் வருஷத்துல 'தமிழ்நாடு மாநில ஓபன் ஜூனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்'ல முதல் பரிசு, 'நேஷனல் ஜூனியர் அத்லெட்டிக்ஸ்'ல முதல் பரிசு... இந்த ரெண்டு வெற்றிகளும்தான் ஸ்போர்ட்ஸ்ல என்னோட ஸ்டார்ட்டிங் பாயின்ட்! தொடர்ந்து, தேசிய அளவு போட்டிகள்ல 8 தங்கம், 2 வெள்ளினு மொத்தம் 10 பரிசுகள், தென்னிந்திய அளவுல 8 தங்கம், மாநில அளவுல 22 பதக்கங்கள்னு... ஆக மொத்தம் எழுபதுக்கு மேலே பதக்கங்கள் இப்போ எங்க வீட்டு ஷோ கேஸ்ல நிரம்பி வழியுது. எல்லாமே என் அப்பாவுக்கும், ஈரோடு மாஸ்டர் பொன்னையனுக்கும் சமர்ப்பணம்!"னு நெகிழ்ந்த ரேகாவோட ரோல் மாடல் யார் தெரியுமா?!

"ஸ்கூல்ல படிக்கும்போது, நான் முதன் முதலா கலந்துகிட்ட ஓட்டப் பந்தயப் போட்டியில தோத்துப் போயிட்டேன். ஓரமா உட்கார்ந்து அழுத எனக்கு, என் ஸ்போர்ட்ஸ் சீனியர் சரஸ்வதி அக்காதான், பச்சைப் புள்ளைக்கு சமாதானம் சொல்ற மாதிரி ஆறுதல் சொன்னாங்க. தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி, போட்டிகள்ல கலந்துக்க வெச்சாங்க. சின்னச் சின்ன நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தாங்க. மொத்தத்துல என்னை ஜெயிக்க வச்சாங்க. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களை அவங்களோட ரோல் மாடலா சொல்வாங்க. ஆனா, என்னோட ரோல் மாடல் எப்பவுமே சரஸ்வதி அக்காதான்!"னு சொல்றாங்க இந்த இளம் புயல்.

சூப்பர்ப்!
- வே.கிருஷ்ணவேணி

காலேஜ் ஸ்டார்!
 
காலேஜ் ஸ்டார்!
காலேஜ் ஸ்டார்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism