Published:Updated:

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

Published:Updated:

26-03-2010
வெற்றிக்கு பாஸ்வேர்ட் !
பகுதி 33
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ் டூ-வுக்கு்ப் பிறகு...

ஊர் சுற்றும் வேலைக்கு உலக சம்பளம் !

தா.நெடுஞ்செழியன்

டூர் போவதென்றால் நமக்கெல்லாம் ஜாலியோ ஜாலிதான்! அந்த ஜாலியே வேலையானால்?!

சுற்றுலாத் துறை சம்பந்தமான படிப்பை பற்றிதான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன் நம் நாட்டுச் சுற்றுலாத் துறையைப் பற்றி ஒரு முன்னுரை.

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

உலகிலேயே அதிகமான சுற்றுலாத் தலங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வடஇந்தியா தொடங்கி தென்இந்தியா வரையிலான 3,600 கிலோ மீட்டருக்குள் ஒவ்வொரு நூறு கிலோ மீட்டருக்கும் மாறுபட்ட மொழிகள், கலாசாரம், உணவுகள் என வெரைட்டியான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியது நம் இந்தியப் பெருநாடு!

வெளிநாட்டினருக்கு இந்தியாவின் மீது உள்ள ஈர்ப்பால் கடந்த சில ஆண்டுகளில் இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணியும் அதிகரித்து வருகிறது. கூடவே, இந்தியாவுக்குள்ளேயும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குச் சுற்றுலா செல்ல அதிக ஆர்வம் காட்டப்படுவதும் உள்நாட்டுச் சுற்றுலாவுக்குக் கை கொடுக்கிறது. இன்னும், மருத்துவ வசதிகளுக்காக நம் நாட்டுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், 'மெடிக்கல் டூரிஸம்' என்ற புதிய துறையும் எழும்பி வருகிறது. ஆக, இந்திய சுற்றுலா துறையிலிருக்கும் வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவமும், அதன் எதிர்காலமும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை!

'இந்தியன் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்' (Indian Institute of Tourism and Travel Management- new.iittm.org) என்ற கல்வி நிறுவனம், மாணவர்களை சுற்றுலாத் துறை சார்ந்த பணிகளுக்குத் தயார்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த நிறுவனம், மாதவராவ் சிந்தியா சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் துவங்கப்பட்டது. தற்போது... புவனேஸ்வர், நியூடெல்லி மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் இது செயல்படுகிறது.

இங்கு வழங்கப்படும் 'போஸ்ட் கிராஜுவேஷன் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்', சுற்றுலா துறைக்கான தரமான பணியாளர்களை தயாரித்து அளிக்கிறது. இரண்டு வருட படிப்பான இதில் 'டூரிஸம் அண்ட் டிராவல்' (குவாலியர், புவனேஸ்வர்), 'இன்டர்நேஷனல் பிஸினஸ்' (டெல்லி), 'டூரிஸம் அண்ட் லெஷர்' (டெல்லி), 'சர்வீஸஸ்' (குவாலியர்) என நான்கு படிப்புகள் இருக்கின்றன. விருப்பப்பட்டதை தேர்ந்தெடுக்கலாம்.

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

இதற்கென அந்த நிறுவனமே நுழைவுத் தேர்வு நடத்தி, அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. யூ.ஜி-யில் எந்த கோர்ஸ் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு மொழிகள் தெரிந்திருப்பது, சிறப்புத் தகுதியாக கருத்தப்படுகிறது.

ஒவ்வொரு படிப்பிலும் சுமார் 93 ஸீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. படிப்புக்கான செலவு, கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால், நூறு சதவிகித வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் உண்டு. அரசு சுற்றுலா வளர்ச்சித் துறையில் மட்டுமல்லாது... தாமஸ் குக், காக்ஸ் அண்ட் கிங்க்ஸ், எஸ்.ஓ.டி.சி. போன்ற பிரபலமான சுற்றுலா நிறுவனங்களும் இந்தக் கல்வி நிறுவன மாணவர்களை விரும்பிப் பணியில் அமர்த்திக் கொள்கின்றன.

'சரி, இந்தப் படிப்பை முடித்தால் என்ன மாதிரியான பணிகள் இருக்கும்?'

சுற்றுலாவை மையப்படுத்தி செயல்படும் அத்தனை வேலைகளும்தான்! உதாரணமாக, வெளிநாட்டைச் சேர்ந்த தூதரோ அல்லது சி.இ.ஓ. போன்ற முக்கியமான நபரோ நம் நாட்டுக்கு வருகிறார் என்றால், டூரிஸம் கன்சல்டன்ட் என்ற பொறுப்பிலிருக்கும் நீங்கள், அவர் ஃப்ளைட்டில் இருந்து இறங்கிய நொடி முதல் அவரை 'டேக் கேர்' செய்துகொள்ள வேண்டும்.

அவருடைய புரொக்ராம் ஷெட்யூல், இசை, கவிதை, ஓவியம், கோயில் என்று அவரின் ரசனைகளையே முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொண்டு, அவரின் நேரத்தை அனுசரித்து அவரைச் சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் டெல்லியில் இருந்தால், பௌர்ணமிக்கு முன்பாக அவருடைய அப்பாயின்ட்மென்ட்களை முடித்துக் கொடுத்து, பௌர்ணமி இரவில் தாஜ்மஹாலை தரிசிக்கச் செய்து 'குட்' வாங்க வேண்டும்.

இன்னும், கைடு, டூர் ஆர்கனைசர்ஸ், ஈவன்ட் மேனேஜர், டூர் மார்க்கெட்டிங் என்பது போன்ற பல பணிகளும் இந்தச் சுற்றுலாத் துறையில் கொட்டிக் கிடக்கின்றன.

சம்பளம்..?

அதிகரித்து வரும் சுற்றுலா துறையின் வளர்ச்சி... 'ஐ.டி. துறையில்தான் அதிக சம்பளம்' என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கி வருகிறது. உதாரணத்துக்கு... ஃபாரினில் இருந்து ஒரு பெரிய மனிதர் டூர் வருகிறார் என்றால், சுமார் 2,000 டாலர்கள் அவருடைய ஏற்பாட்டுக்காக வாங்குகின்றார்கள். டூரிஸம் கன்சல்டன்ட்டாக இருக்கும் உங்களுக்கு 500 டாலர்கள் கிடைக்கும். இதுவே பத்துக்கும் மேற்பட்டோர் வருகிறார்கள் என்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நீங்கள் 500 டாலர்கள் பெற முடியும்.

ஆக, டூரிஸம் மேனேஜ்மென்ட் படிப்புகள் டக்கர் தானே?!

- மீண்டும் சந்திப்போம்...

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
 
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism