Published:Updated:

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

Published:Updated:

26-03-2010
தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !
தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !
தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது மதுரை 'அவதார்'

டுர்ர்ர்ர்ர்ர்!

ஒண்ணுமில்ல... 'டூர் ஸ்பெஷல்' எஃபக்ட் கொடுக்கலாம்னுதான்! சகிக்கலையா..? சரி, விஷயத்துக்கு வருவோம்!

ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு டூர் போறதெல்லம் அவுட் ஆஃப் ஃபேஷன்! அப்புறம்?! நம்ம மதுரை மண்ணோட காலேஜ் கண்மணிகள் சிலர் அதுக்கு மாற்று யோசனை சொல்ல வர்றாங்க... பராக்... பராக்... பராக்!

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

"இப்போ நாங்க உங்களை எல்லாம் ஒரு கற்பனை கிரகத்துக்கு அழைச்சுட்டுப் போகப் போறோம். உங்களுக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கப்போற அந்தக் கிரகத்தை உருவாக்கின பிரம்மாக்கள்... சாட்சாத் நாங்களேதான் (பார்ரா!)! அந்தப் புது கிரகத்தோட பேரு... தண்டோரா! (எல்லாம் 'அவதார்' பண்டோரா எஃபெக்ட்டு!)''னு சுபி பில்ட்-அப் ஏத்தி முன்னுரை கொடுக்க... ஜர்னி ஆரம்பமாச்சு!

"தண்டோரா கிரகவாசிங்களான நாங்கள்லாம் 'டக்லெஸ்' இனத்தை சேர்ந்தவங்க. டக்லெஸ்னா உடனே நம்ம 'கஞ்சா' கருப்புதான் உங்களோட சிறுபுத்தி நினைக்கும். ஆனா, விஷயமே வேற! 'டக்'னா பூஜ்ஜியம்... அதாவது டம்மி. 'டக்-லெஸ்'னா டம்மி இல்லாத ஒரிஜினல்னு அர்த்தம் (அப்போ ஒரிஜினல் பீஸ்!)''னு ராஜீவி பெயர்க் காரணத்தை விளக்க,

"எங்க கிரகத்தோட சிறப்பு... கல்யாணம்தான்!''னு மங்களகரமா ஒரு ஸ்கூப் நியூஸோட வந்தாங்க நந்தினி (சொல்லுங்க சொல்லுங்க)!

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

"எங்க கிரகத்துல கல்யாணம் ஆன உடனே, 'மணமகனே மணமகனே வா வா'னு பேக்கிரவுண்ட் மியூஸிக்கோட மாப்ள, பொண்ணு வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்துருவாங்க (அட்றா அட்றா அட்றா). எங்கள நம்பி வாக்கப்பட்டு வந்த ஆம்பளைங்கள, நாங்க கண் கலங்காம பார்த்துக்குவோம். ஆனா, அதையும் மீறி குடும்பத்துல எதாச்சும் சண்டைனா உடனே கோபிச்சுக்கிட்டு, 'நான் என் பொறந்த வீட்டுக்குப் போறேன்'னு அவங்க கிளம்பிப் போகத்தான் செய்வாங்க. 'சரிதான் போடா(சூப்பரப்பு)'னு விட்டுடாம, நாமதான் பெரிய மனசு பண்ணி, போயி அவங்கள சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரணும். புள்ளக்குட்டிகளுக்கு பொங்கிப்போட ஆளு வேணும்ல?!''னு நந்தினி விளக்கம் சொல்ல... ஆத்தீ!

"எங்க கிரகத்துல நோ கம்யூனிஸம், நோ கேப்பிட்டலிஸம், நோ பருப்புரசம்! எல்லாமே மகாராணி ஆட்சி முறைதான்! கிரகத்துல இருக்கற பல்லு போன அப்பத்தாக்கள்தான் ஆட்சி பீடத்துல இருப்பாங்க (அங்கயும் சீனியர் சிட்டிஸன்ஸா££?!). அவங்க சொல்றதுக்கு மறுபேச்சே இல்ல. தேர்தலும் இல்ல, இடைத்தேர்தலும் இல்ல. ஓட்டும் இல்ல, ஓட்டுக்கு துட்டும் இல்ல. ஊழலும் இல்ல, ஊறுகாயும் இல்ல! ஹவ்வீஸிட்?!''னு அவங்களோட 'பொலிட்டிக்கல் டிவிஷனை' விளக்கினாங்க சுகன்யா (மதுரைக்காரய்ங்க பேசற பேச்சா இது?)!

"அப்புறம்... எங்க தண்டோரா கிரகத்தோட லாங்குவேஜ்ஜை சொல்ல மறந்துட்டோமே?! 'பிம்பிலிக்கி பிம்பாளி' - இதுதான் எங்க கிரகத்தோட தாய்மொழி! இதுக்கு 'செம்மொழி' அங்கீகாரத்தை நாங்களே கொடுத்துக்குவோம்! 'தாய்மொழி'யில பேசறவங்களுக்குதான் எங்க அரண்மனைகள்ல வேலை. மத்தவங்க எல்லாம் ரன் ரன்!''னு காக்கா விரட்டினாங்க சுபி!

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !

"ஒரு கிரகம்னா, அதுல எல்லாரும் நல்லவங்களாவே இருந்துட முடியுமா என்ன? முடியாது! ஏன்னா, மனுஷப் பயபுள்ளைகளால அப்படி இருக்க முடியாது. ஸோ... நித்தியானந்தா, மேதகு ஆளுநர் திவாரி, காஞ்சி புரம் தேவநாதன்னு... இப்படிப் பட்ட தில்லாலங்கடி பார்ட்டிகளையெல்லாம் உங்கள மாதிரி வாய்தா, ஜாமீன்னு விட்டுட்டு, கோர்ட் வாசல்ல போட்டோ எடுத்து 'கவர் ஸ்டோரி' போட மாட்டோம் நாங்க (கிரேட் இன்சல்ட்)! எங்க கிரகத்துல ஒரு பெரிய நரகத்தை தோட்டா தரணிய வச்சு செட்டு போட்டு, இவங்கள எல்லாம் உள்ள தள்ளி, அந்தகூபம், கும்பிபாகம், கிருமி போஜனம்னு டெரர் பனிஷ்மென்ட்ஸ்தான்!''னு 'அந்நியனி' ஆனாங்க நித்யா!

" 'தண்டோரா'வோட எதிர்கால ப்ராஜெக்ட்ஸ் என்னனா... கிரகத்தோட வளர்ச்சித் திட்டங்களுக்காக எங்க அப்பத்தாக்கள்கிட்ட சொல்லி, அங்கங்க ஆயிரம் கோடி பியூட்டி பார்லர்கள் ஆரம்பிக்க சொல்லப் போறோம்! அப்புறம்...''னு நித்யா சிந்தனை குழாயை திபுதிபுனு திருக, ஸ்டாப்ப்ப்ப்ப்!

போதும்டாப்பா இந்த மேஜிக் ஜர்னி!

- இரா.கோகுல் ரமணன்,

தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !
படங்கள் ஜெ.தான்யராஜு
தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !
தண்டோரா கிரகத்துக்கு ஒரு மேஜிக் ஜர்னி !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism