Published:Updated:

நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !

நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !

நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !

நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !

Published:Updated:

26-03-2010
பூங்சோலை பக்கங்கள் !
நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !
நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நண்பர்கள் படை ....எனக்குக் கிடைச்ச கொடை !'
நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !

விளம்பரங்கள்ல திரு-முகம் காட்டும் லவ்லிவாலா மாடல்... கோமல் சர்மா! வந்த சினிமா வாய்ப்பு-களை- எல்லாம் படிப்புக்காக மறுத்த கல்வித் தாய் (!). அவங்களோட காலேஜ் டிட்பிட்ஸ் இங்கே!

கல்லூரி முகவரி சென்னை, கன்னிகா பரமேஸ்வரி காலேஜ்ல கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஃபைனல் இயர்!

சாதனை 2008-ல மிஸ் தமிழ்நாடு அண்ட் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்கின் ஆஃப் தமிழ்நாடு! 2009-ல பியூட்டிஃபுல் ஸ்கின் ஆப் சௌத் இண்டியா அண்ட் மிஸ் மெட்ரோபாலி! (ஜெயிச்சவொடன உணர்ச்சிவசப்பட்டு அழுதிருப்பீங்களே?!)

முதல் நாள் கல்லூரி அனுபவம் ப்ளஸ் டூ போர்டு எக்ஸாம் முடிச்ச கையோட காலேஜுக்கு கலர் கலரா டிரெஸ் வாங்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, காலேஜ் ஓபனிங்க்கு முதல் நாள் ராகிங் பயத்துல ஒரே உதறல்! பட்... எல்லாத்தையும் சமாளிச்சுட்டோம்ல?! ('கைப்புள்ள' ஸ்டைல்லயா?!)

மதிப்புக்குரிய குரு எங்க ஹிந்தி மேம் வனிதா! பிரைட் ஸ்டூடன்ட், மக்கு ஸ்டூடன்ட்னு எல்லாம் எந்த பாகுபாடும் இல்லாம, எல்லாருக்கும் ஆசையா கிளாஸ் எடுப்பாங்க! (ஒங்களுக்கும் எடுத்தத வெச்சு சொல்றீங்களாக்கும் ஹி... ஹி..!)

ஃப்ரெண்ட்ஸ் பேர் எல்லாம் சொல்லி முடியாது. ஏன்னா, அது ஒரு பெரிய படை! பட், எல்லாரும் எனக்கு கிடைச்ச கொடை! (ரைமிங்காம்!)

பரிசுகள் சென்னையில எங்க கல்ச்சுரல் நடந்தாலும், வெஸ்டர்ன் டான்ஸ்ல, 'ஃபர்ஸ்ட் பிரைஸ் கோஸ் டு கோமல் சர்மா'தான்! ஸ்போர்ட்ஸையும் விட்டு வைக்கிறது இல்ல. ஸ்குவாஷ் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நேஷனல் லெவல் காம்படிஷன்ல எனக்கு ஐந்தாவது இடம். சீனியர் கேட்டகிரியில எங்க டீம் செகண்ட். எப்பூடி?! (சூப்பர் சர்மா!)

நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !
-லாவண்யா
படம் பொன்.காசிராஜன்
நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !
நண்பர்கள் படை...எனக்குக் கிடைச்ச கொடை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism