Published:Updated:

காலையில் கல்லூரி மாணவிகள்...

காலையில் கல்லூரி மாணவிகள்...

காலையில் கல்லூரி மாணவிகள்...

காலையில் கல்லூரி மாணவிகள்...

Published:Updated:

26-03-2010
காலையில் கல்லூரி மாணவிகள்; மாலையி்ல் ஆசிரியர்கள் ....
காலையில் கல்லூரி  மாணவிகள்...
காலையில் கல்லூரி  மாணவிகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.சுப்புராஜ்,

- இப்படி டபுள் ரோலில் கலக்குபவர்கள், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள்தான்! ‘எனிதிங் ஸ்பெஷல்?' என்றால், ‘வெரி ஸ்பெஷல்!' என்று விஷயத்தை விளக்கினார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு அக்ரி படிக்கும் நிவேதிதா.

காலையில் கல்லூரி  மாணவிகள்...

"எங்க யுனிவர்சிட்டியோட ஒரு அங்கமான ‘சமுதாய நற்பணி மன்றம்', அம்பத்தி ஆறு வருஷமா செயல்பட்டுட்டு வருது. இதோட நோக்கம், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஏணியா இருந்து, உயர்கல்விக்கு ஏற்றிவிடறதுதான். இதுக்காக ஞாயிறு தவிர வாரத்துல ஆறு நாட்களும் மாலை ஐந்து மணியில இருந்து ஏழரை மணி வரைக்கும் எங்க சமுதாய நற்பணி மன்றக்கூடத்துல ஸ்கூல் பிள்ளைங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எல்லாம் டியூஷன் நடத்தறாங்க! கிட்டத்தட்ட எண்பது பிள்ளைங்க தினமும் டியூஷனுக்கு வர்றாங்க!" என்று சொன்ன நிவேதிதாவும் இந்த மன்றத்தில் ஒரு ஆசிரியை!

தொடர்ந்தவர், "இந்த மையத்துல குழந்தைங்களுக்கு டியூஷன் எடுக்கறதுக்காகவே நாங்க எல்லாம் மறுபடியும் ஒரு தடவை ஸ்கூல் புக்ஸ்ஸை படிச்சு எங்களை தயார்படுத்திக்கிறோம். நாங்க காலேஜ் ஸ்டூடன்ட்ஸா இருந்தாலும், ‘டீச்சர்'னு இங்க இருக்கற குழந்தைங்க எங்கள கூப்பிடும்போது... அதுக்கு தகுதிப்படுத்திக்கறதுக்காக எங்களோட குறும்புகளை எல்லாம் மூட்டைக் கட்டிவெச்சுட்டு, ரொம்ப பொறுப்பாயிட்டோம். செல்போனை பயன்படுத்தினா, எங்க கவனத்தையும் பிள்ளைங்களோட கவனத்தையும் அது கலைச்சுடும்கிறதால... இந்த மன்றத்துக்கு வந்துட்டாலே செல்போனை பயன்படுத்த மாட்டோம்! இந்தப் பிள்ளைங்களோட கல்வி முன்னேற்றத்துல எங்களோட ஒரு சின்ன பங்களிப்பும் இருக்குங்கறதுல, எங்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம்!'' என்றார் பூரித்து!

ஒரு சேவையாகத்தான் இந்த இலவச டியூஷனில் பங்கேற்று பாடம் நடத்தி வருகின்றனர் பல்கலைக்கழக மாணவர்கள். அவர்களின் நேரம் மற்றும் வசதியைப் பொறுத்து விருப்பப்பட்ட நேரத்தில் டியூஷன் எடுக்கலாம் என்பதால், ஓய்வு நேரத்தை பெரும்பாலும் பயனுள்ள வகையில் இப்படி கழிக்கின்றனர் அந்த மாணவர்கள்.

கவுசல்யா
காலையில் கல்லூரி  மாணவிகள்...

இதன் மூலம் பலன் பெற்று வரும் டியூஷன் மாணவிகளில் ஒருவரான கவுசல்யா, "இங்க ஆறு வருஷமா படிச்சுட்டு இருக்கேன். இப்ப ப்ளஸ் ஒன். பள்ளிக்கூடத்துல பாடத்தை நல்லா கவனிச்சாலும், வீட்டுல வந்து படிக்கும்போது சில பாடங்கள், கணக்கு எல்லாம் புரியாது... சந்தேகம் வரும். டியூஷன் போகலாம்னா, அதுக்கு ஃபீஸ் கட்டற அளவுல எங்க குடும்பம் வசதியா இல்ல. அப்போதான் இந்த நற்பணி மன்றத்தப் பத்தி கேள்விப்பட்டு, இதுல சேர்ந்தேன்.

எங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும், அதை இங்க இருக்கற டீச்சர்ஸ் எல்லாம் புரியும்படி விளக்கி சொல்லிக் கொடுத்துருவாங்க. மாடல் எக்ஸாமும் நடத்துவாங்க. அதனால, எங்களால நல்ல மார்க் வாங்க முடியுது. ‘இந்த நற்பணி மன்றத்துல படிச்சவங்க எல்லாம் இப்போ பெரிய லெவல்ல இருக்காங்க. நீங்களும் நாளைக்கு அப்படி ஆயிடுவீங்க பாருங்க'னு டீச்சர்ஸ் எல்லாம் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. எங்களுக்கும் அந்த நம்பிக்கை வந்துடுச்சு!'' என்றாள் கனவுகள் சுமந்து!

தன்னுடைய ப்ளஸ் ஒன் படிப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக இங்கே டியூஷன்

காலையில் கல்லூரி  மாணவிகள்...

படிக்கும் மனோஜ், "நான் நாலு வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன். முதலயெல்லாம் நான் படிப்புல சுமார்தான். இங்க வந்ததுக்கு அப்பறம் நல்லா படிக்கறேன். நான் மட்டுமில்ல... எங்க ஏரியா பசங்க எல்லாருமே இங்க வந்ததுக்கு அப்பறம்தான் ஒழுங்கா படிக்கறோம். வசதியில்லாத வீட்டுப் பிள்ளைங்களுக்கு எல்லாம் இந்த மன்றம் ஒரு வரப்பிரசாதம். மன்றத்துல இருந்து எங்க எல்லாரையும் ஒவ்வொரு வருஷமும் டூர்கூட கூட்டிட்டுப் போவாங்க. இந்த வருஷ டூருக்கு எல்லாரும் காத்துட்டு இருக்கோம்!'' என்றார் ஆவலுடன்!

சபாஷ்... சமுதாய நற்பணி மன்றம்!

படங்கள் தி.விஜய்

காலையில் கல்லூரி  மாணவிகள்...
 
காலையில் கல்லூரி  மாணவிகள்...
காலையில் கல்லூரி  மாணவிகள்...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism